3rd Maths Term 3 Unit 1 Geometry | Tessellation Explained

3 ஆம் வகுப்பு கணக்கு: வடிவியல் - தள நிரப்பிகள்

வடிவியல்: தள நிரப்பிகள்

மூன்றாம் பருவம் | அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு

தள நிரப்பிகள்

ஒரு வடிவம் பலமுறை பயன்படுத்தப்பட்டு இடைவெளி இன்றி ஒரு தளத்தை அடுத்தடுத்த சுழற்சியில் நிரப்பும்போது அவற்றைத் தள நிரப்பிகள் என்கிறோம்.

ஒரு சமதளத்தில் இடைவெளி இன்றி வில்லைகளை / ஓடுகளைப் பொருத்தும்போது நாம் வில்லைகள் அடங்கிய தரை கிடைக்கப் பெறுகின்றோம்.

முக்கோணம், சதுரம், அறுங்கோணம் போன்ற வடிவங்கள் ஒரு தளத்தை நிரப்பும். ஆனால் ஐங்கோணம், எண்கோணம் போன்ற அமைப்புகள் தள நிரப்பிகள் ஆகாது.

பயிற்சிகள்

1. வடிவங்களை வில்லைகள் / ஓடுகள் கொண்டு நிறைவு செய்க.

தள நிரப்பிகள் கொண்டு வடிவங்களை நிறைவு செய்யும் பயிற்சி

2. இந்த அமைப்பில் வரக்கூடிய அடுத்த வில்லையைத் தொடர்க

அடுத்த வில்லை அமைப்பைத் தொடரும் பயிற்சி