3rd Maths: Term 2 Unit 5 - Information Processing | Map Drawing

3 ஆம் வகுப்பு கணக்கு: இரண்டாம் பருவம் அலகு 5 - தகவல் செயலாக்கம்

தகவல் செயலாக்கம்

அலகு 5: தகவல் செயலாக்கம்

தகவல் செயலாக்கம் அலகு 5 தலைப்பு

வரைபடம் வரைதல்

தெரிந்த இடங்களுக்கான வரைபடம் வரைதல்

மாலாவின் கிராமத்தின் வரைபடம்

மாலாவின் கிராமத்தின் வரைபடம்

மாலா அவள் கிராமத்தின் வரைபடத்தை வரைந்திருக்கிறாள்.

மேலே உள்ள வரைபடத்திலிருக்கும் இடங்களைப் பின்வருமாறு சுட்டிக்காட்டலாம்.

• தோட்டம் வீட்டின் இடது பக்கம் உள்ளது.

• வீடு தோட்டத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

• ஆறு குளத்தின் வலது பக்கம் உள்ளது.

• குளம் ஆற்றின் இடது பக்கம் உள்ளது.

செயல்பாடு 1:

நண்பர்களுடன் கலந்துரையாடி உங்கள் வகுப்பறையின் வரைபடத்தை வரையவும்.

வகுப்பறையின் வரைபடம்

* மேலே உள்ள வரைபடத்திலிருக்கும் இடங்களைப் பின்வருமாறு சுட்டிக்காட்டலாம்.

* கரும்பலகையின் வலது பக்கத்தில் அலமாரி உள்ளது.

* கடிகாரம் கரும்பலகையின் இடது பக்கத்தில் உள்ளது.

* மேசைநாற்காலியின் இடது பக்கத்தில் குப்பைத்தொட்டி உள்ளது.