3rd Grade Maths Term 2 Unit 1: Multiplication by Regrouping | Numbers

3rd Grade Maths Term 2 Unit 1: Multiplication by Regrouping | Numbers

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

மறுகுழுவாக்கம் செய்து பெருக்குதல்

ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம்

(i) புள்ளி பெருக்கல்

(ii) மீள் கூட்டல்

(iii) மறு குழுவாக்கம்

(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி

(v) லாட்டிஸ் பெருக்கல்

மறுகுழுவாக்கம் செய்து பெருக்குதல்

இம்முறை ஈரிலக்க எண்களை ஓரிலக்க எண்களுடன் பெருக்குவதற்கு பயன்படுத்தலாம்.

பின்வரும் பெருக்கலை கருதுக.

53 × 7

53 ஐ பத்துகள் மற்றும் 3 ஒன்றுகள் என மறுகுழுவாக்கம் செய்யலாம். எனவே, 53 × 7 ஐ ( 50 + 3 ) × 7 என எழுதலாம்.

= ( 50 × 7 ) + ( 3 × 7 )

= 350 + 21

= 371

எடுத்துக்காட்டு

Multiplication Example with Blocks

14 x 2 = ________

அதாவது 2 முறை 14

14 × 2 = 2 × 1 பத்து + 2 × 4 ஒன்றுகள்

= 2 × 10 + 2 × 4 = 20 + 8

14 × 2 = 28

பயிற்சி

1. பின்வரும் எண்களை மறு குழுவாக்கம் செய்து பெருக்குக.

(i) 75 × 8

= (70 + 5) × 8

= (70 × 8) + (5 × 8)

= 560 + 40

= 600


(ii) 26 × 5

= (20 + 6) × 5

= (20 × 5) + (6 × 5)

= 100 + 30

= 130


(iii) 372 × 6

= (370 + 2 ) × 6

= (370 × 6) + (2 × 6)

= 2220 + 12

= 2232


(iv) 402 × 7

= ( 400 + 2) × 7

= ( 400 × 7) + (2 × 7)

= 2800 + 14

= 2814


(v) 752 × 3

= ( 750 + 2) × 3

= (750 × 3 ) + (2 × 3)

= 2250 + 6

= 2256