OMTEX AD 2

3rd Class Tamil Term 3 Chapter 8 | Arivutum Tholaikatchi Seithigal | Questions and Answers

3rd Class Tamil Term 3 Chapter 8 | Arivutum Tholaikatchi Seithigal | Questions and Answers

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்

கேள்விகள் மற்றும் பதில்கள்

பயிற்சி

வாங்க பேசலாம்

தொலைக்காட்சி, நம் கண்ணுக்கும் காதுக்கும் மட்டுமல்ல, அறிவுக்கும் விருந்தளிக்கும் என்பதைப் பிறருக்கு நீங்கள் எப்படி உணர்த்துவீர்கள்?

* தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான திரைப்படம், திரையிசைப் பாடல்கள், தொடர் நாடகங்கள், விளம்பரங்கள் போன்றவற்றை மட்டும் நாம் காண்பதில்லை.

* நம் அறிவை வளர்க்கக்கூடிய கல்வி, வேளாண்மை, விளையாட்டு, மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமையல் போன்றவற்றைப் பற்றிய அறிவையும் தொலைக்காட்சியின் மூலம் நாம் பெறலாம்.

* வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் செய்திகள் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள் பெரிதும் உதவுகின்றது.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. விமானம் பறப்பது பற்றிய செய்தியை __________ வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்.

அ) கணினி

ஆ) தொலைக்காட்சி

இ) வானொலி

ஈ) அலைபேசி

விடை : ஆ) தொலைக்காட்சி

2. ஆர்வம் - இச்சொல்லின் பொருள் _____________.

அ) வெறுப்பு

ஆ) மறுப்பு

இ) மகிழ்ச்சி

ஈ) விருப்பம்

விடை : ஈ) விருப்பம்

3. உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ______________.

அ) குட்டை

ஆ) நீளம்

இ) நெட்டை

ஈ) நீண்ட

விடை : அ) குட்டை

4. தொலைக்காட்சி – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

அ) தொலை + காட்சி

ஆ) தொல்லை + காட்சி

இ) தொலைக் + காட்சி

ஈ) தொல் + காட்சி

விடை : அ) தொலை + காட்சி

5. குறுமை + படம் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________.

அ) குறுபடம்

ஆ) குறுமை + படம்

இ) குறும்படம்

ஈ) குறுகியபடம்

விடை : இ) குறும்படம்

வினாக்களுக்கு விடையளிக்க.

1. பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் எதைக் கண்டனர்?

பூங்குழலியும், இளவரசியும் வானத்தில் விமானத்தைக் கண்டனர்.

2. வானில் பறக்கும் விமானம் எதனால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்?

வானில் பறக்கும் விமானம் புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்.

3. இளவரசி தொலைக்காட்சியில் என்னவெல்லாம் பார்த்ததாகக் கூறினாள்?

இளவரசி தொலைக்காட்சியில் பொம்மைப் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் செய்து பார்ப்போம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை இளவரசி பார்த்ததாகக் கூறினாள்.

பறவைகளின் ஒலிகளை அறிந்து கோடிட்ட இடங்களை நிரப்புவோம்.

பறவைகளின் ஒலிப் பயிற்சி

கொடுக்கப்பட்ட சொற்கள்: கரையும், அகவும், பேசும், அலறும், கூவும்

1) காகம் __________

2) மயில் __________

3) கிளி __________

4) ஆந்தை __________

5) சேவல் __________

பதில்களைக் காண்க

1) காகம் கரையும்

2) மயில் அகவும்

3) கிளி பேசும்

4) ஆந்தை அலறும்

5) சேவல் கூவும்

பொருத்தமான சொல்லால் நிரப்புவோம்.

ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள். ஒளிர்மதி கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான். பரணி கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். செம்பருத்திப் பூ சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, மாமர ஊஞ்சல் மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.

கதையைப் படித்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க.

தவளை ஒன்று மிகவும் உடல்நலம் குன்றியிருந்தது. அதன் குட்டித் தவளை தன் தாயைக் காப்பாற்ற நினைத்தது. மாலைநேரம் முடிவதற்குள் மலைமேல் ஏறி, மூலிகை கொண்டு வர நினைத்தது. அந்த மலையில் ஏராளமான பாம்புகள் வாழ்ந்து வந்தன. பாம்புகளால் தனக்குத் தீங்கு நேரிடும் என்று நினைத்தது குட்டித் தவளை. தன் அறிவைப் பயன்படுத்திச் சென்றால்தான் மாலைக்குள் திரும்ப முடியும் என்று நினைத்தது. மலையில் ஏறத் தொடங்கியதும், அந்தக் குட்டித் தவளை பேசத் தொடங்கியது. “முன்னே செல்லும் பருந்தாரே! பின்னே பெரிய கீரியார் மெள்ள வருகிறார், சற்றுப் பொறுத்தே செல்லுங்கள்" என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே சென்றது. பாம்புகள் குட்டித்தவளை கூறுவதைக் கேட்டு ஓடி ஒளிந்துகொண்டன. குட்டித்தவளை, தன் கூர் சிந்தனைத்திறனால் காலம் கடத்தாமல் விரைந்து சென்று, மூலிகை கொண்டு வந்து தன் தாயைக் காப்பாற்றியது.

1. உடல்நலம் குன்றிய நிலையில் எது இருந்தது?

தவளை ஒன்று உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தது.

2. குட்டித்தவளை, தனக்கு யாரால் தீங்கு ஏற்படும் என நினைத்தது?

பாம்புகளால் தனக்கு தீங்கு நேரிடும் என்று குட்டித்தவளை நினைத்தது.

3. குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எந்தெந்தப் பெயர்களைக் கூறியது?

குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கீரி, பருந்து போன்ற பெயர்களைக் கூறியது.

4. குறித்த நேரத்திற்குள் ஒரு செயலைச் செய்து முடிப்பது எதைக் குறிக்கும்?

அ) பணிவு

ஆ) காலந் தவிர்க்காமை

இ) நேர்மை

விடை : ஆ) காலந் தவிர்க்காமை.

அறிந்து கொள்வோம்

கண்டுபிடிப்பாளர்கள்

தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் ஜான் லெகி பெயர்டு

விமானத்தைக் கண்டறிந்தவர்கள் ஆல்பர்ட் ரைட், வில்பர்ட் ரைட்

வானொலியைக் கண்டறிந்தவர் மார்க்கோனி

உன்னை அறிந்துகொள்.

1. தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் யார்?

தொலைக்காட்சியைக் கண்டறிந்தவர் ஜான் லோக் போர்டு.

2. விமானத்தைக் கண்டறிந்தவர்கள் யார்?

விமானத்தைக் கண்டறிந்தவர்கள் ஆல்பர்ட்ரைட், வில்பர்ட்ரைட் சகோதரர்கள் (ரைட் சகோதரர்கள்).

3. வானொலியைக் கண்டறிந்தவர் யார்?

வானொலியைக் கண்டறிந்தவர் மார்க்கோனி.

கீழ்வரும் சொற்றொடர்களை சரியா? தவறா?

1. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அருகே அமர்ந்து பார்க்கலாம்.

2. வெண்மேகங்களால் மழை பொழியும்.

3. இடிமின்னலின் போது மரத்தடியில் நிற்கக்கூடாது.

4. புயல் அடிக்கும் போது மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம்.

பதில்களைக் காண்க

1. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அருகே அமர்ந்து பார்க்கலாம். தவறு

2. வெண்மேகங்களால் மழை பொழியும். தவறு

3. இடிமின்னலின் போது மரத்தடியில் நிற்கக்கூடாது. சரி

4. புயல் அடிக்கும் போது மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம். தவறு

சிந்திக்கலாமா?

பாவழகி அவளுடைய எழுதுகோலைக் கையிலேயே வைத்திருப்பதால் தவறித் தொலைத்து விடுவாள்... பாத்திமா தன் எழுதுகோலைப் பெட்டியில் வைத்துப் புத்தகப் பைக்குள் வைத்திருப்பாள் எனவே, அது பாதுகாப்பாக இருக்கிறது. உன் பொருள்களை நீ எவ்வாறு பாதுகாப்பாய்?

நீ எவ்வாறு உன் பொருள்களைப் பாதுகாப்பாய்?

நான் என் பொருள்களைப் பெட்டியில் வைத்து புத்தகப் பைக்குள் வைத்திருப்பேன்; தேவையான நேரத்தில் எடுத்துப் பயன்படுத்திவிட்டு மீண்டும் பத்திரமாக பைக்குள் வைத்துவிடுவேன்.

கலையும் கைவண்ணமும்

மின்அட்டையில் வாழ்த்து அட்டை உருவாக்குதல்

தேவையான பொருள்கள்

மின் அட்டை

பசை

வண்ண நூல்கள்

❖ மின் அட்டையின் ஓரங்களில் வண்ண நூல்களை ஒட்டி அலங்காரம் செய்யவேண்டும்.

❖ நாம் விரும்பும் படம் வரைந்து அதன் மேல் வண்ண நூல்களை ஒட்ட வேண்டும்.

❖ தேவையான வாழ்த்துச்செய்தியை அட்டையின் நடுப்பகுதியில் எழுதி, வாழ்த்து அட்டையை உருவாக்கவேண்டும்.

சொந்த நடையில் கூறுக.

தொலைக்காட்சியின் நன்மைகளைப் பற்றி உம் சொந்த நடையில் கூறுக.

* சொற்பொழிவு, இசை, நாடகம் போன்றவற்றை நேரில் கண்டுகளிக்கலாம்.

* வீட்டில் இருந்து கொண்டே பல வேலைகளின் நுணுக்கங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

* பல நாடுகளின் இயற்கைக் காட்சிகள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை நேரில் பார்ப்பது போன்று கண்டு மகிழலாம்.

* வெகுதொலையில் நடக்கும் விளையாட்டுகளை வீட்டிலிருந்தே கண்டு மகிழலாம்.

* குடும்ப நலத்திட்டம், குழந்தை வளர்ப்பு, நோய் தடுப்பு முறைகள் ஆகியவற்றை நேரில் காட்டுவதால் மக்களுக்கு நன்றாக விளங்குகிறது.

செயல் திட்டம்

தொலைக்காட்சியில் இடம்பெறும் கல்வி பற்றிய செய்திகளைத் தொகுத்து வருக.

கல்வி தொலைக்காட்சி அட்டவணை

உம் சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களை வரைந்து அவற்றின் பெயர்களை எழுதி வருக.

சுற்றுப்புற பொருள்கள் வரைபடம் கண்டுபிடிப்பாளர்கள் படத்தொகுப்பு