2nd EVS Term 1 Unit 2: My Amazing Body | Samacheer Kalvi Guide

பருவம்-1 அலகு 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - எனது அற்புதமான உடல்

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-1 அலகு 2 : எனது அற்புதமான உடல்

நீங்கள் கற்க இருப்பவை

* எளிய இயக்கங்கள்

* மூட்டுகள்

* புலன் உறுப்புகளின் பணி

* தோற்ற அமைவு (Posture)

* வளர்ச்சிப் படிநிலைகள்

எளிய இயக்கங்கள்

வேதா, யாஸ்மின், ரீட்டா மூவரும் தோழிகள். அவர்களின் வீடுகள் ஒரே பகுதியில் அருகருகே அமைந்துள்ளன. அவர்கள் மூவரும் எப்போதும் பள்ளி முடிந்தவுடன் ஒன்றாக விளையாடிக்கொண்டே மகிழ்ச்சியாக வீட்டிற்குச் செல்வார்கள். அவர்களுடன் நாமும் செல்வோமா!

பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் குழந்தைகள்

"அதோ அங்கே பாருங்கள்! நன்கு பழுத்த மாம்பழங்கள். வாருங்கள், நாம் எகிறி குதித்து அவற்றைப் பறிக்கலாம்".

மாம்பழம் பறிக்கும் குழந்தைகள்

அங்கே பாருங்கள்! பச்சை நிறத் தவளை ஒன்று தாவித்தாவிக் குதிக்கிறது. நாமும் தாவிக் குதிப்போமா!

தவளை போல குதிக்கும் குழந்தை

அடடே! காகிதக் குப்பைகளால் இந்த இடம் அசுத்தமாக உள்ளதே! நாம் அவற்றை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுவோமா!

குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடும் குழந்தைகள்

நாம் வீட்டருகே வந்துவிட்டோம். நாளை பார்ப்போமா! அவர்கள் ஒருவருக்கொருவர் கையசைத்து விடை பெற்றுச் சென்றனர்.

பின்வரும் செயல்களைப் போல யாரால் செய்து காட்ட முடியும்?

அ) யானை போல நடக்க

ஆ) கொக்கு போல ஒற்றைக்காலில் நிற்க

இ) தவளை போலத் தாவ

ஈ) குதிரை போல ஓட

உ) முயல் போலக் குதிக்க

ஊ) வாத்து போல நடக்க

மூட்டுகள்

புத்தகம் ஒன்றைத் தரையில் வைத்து அதனை முழங்காலும் முதுகும் வளையாமல் எடுக்க உங்களால் முடியுமா?

* எலும்புகள் நாம் நேராக நிமிர்ந்து நிற்கவும் நம் உடலுக்கு வடிவத்தையும் அளிக்கின்றன.

* எலும்புகள் இல்லாவிடில் உடல் வடிவமற்றதாய் / நெகிழ்வுத் தன்மையுடையதாய் இருக்கும்.

* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் ஒன்றாக சேரும் இடம் மூட்டு எனப்படும்.

மனித எலும்பு மண்டலம்

நாம் பல்வேறு செயல்களை செய்ய நமது உடலை வளைக்க வேண்டி உள்ளது. மூட்டுகள் இருப்பதால் மட்டுமே இதனைச் செய்ய முடிகிறது.

மூட்டுகளின் உதவியுடன் செய்யப்படும் செயல்கள்

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்களைத் தங்கள் விரல்கள், மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டை, கழுத்து, முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால் போன்றவற்றை அசைத்துப் பார்க்கச் சொல்லவும். எந்தெந்த மூட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அசைகின்றன என்றும், எந்தெந்த மூட்டுகள் குறிப்பிட்ட பக்கங்களில் மட்டும் அசைகின்றன என்றும் கண்டறிந்து சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளச் செய்யவும்.

முயன்று பார்

முயன்று பார் பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மூட்டுகளை வட்டமிடுக.

படத்தில் மூட்டுகளை வட்டமிடும் பயிற்சி

புலன் உறுப்புகளின் பணிகள்

உற்றுநோக்கி கலந்துரையாடுவோமா!

படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை எந்தெந்தப் புலன் உறுப்புகளைப் பயன்படுத்தி உணர்வாய்?

பல்வேறு பொருட்கள் மற்றும் புலன் உறுப்புகள்

நாம் வாழும் உலகில் உள்ள பொருள்களை நம் புலன் உறுப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமாகவே உணர்கிறோம். நாம் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட புலன் உறுப்புகளை ஒரே சமயத்தில் பயன்படுத்துகிறோம்.

ஒரு குழந்தை சுவைக்கிறது

மக்காச்சோளப் பொரி தொடர்புடைய விளக்கங்கள்

மக்காச்சோளப் பொரி மற்றும் புலன் உணர்வுகள்

உணவின் சுவையானது அதில் உள்ள பொருள்களின் தன்மை, மணத்தைப் பொறுத்து அமைகிறது.

பல்வேறு உணர்வுகள்

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்களை பருத்தி, எண்ணெய், பசை, பஞ்சு, மணி, கல், நாற்காலி, சோப்பு, மலர்கள், ஊதுபத்தி, எலுமிச்சை, ஆரஞ்சு, உப்பு, பூண்டு, பாக்கு, சர்க்கரை போன்ற பொருள்களைத் தொட்டுப் பார்க்கவும் அவற்றினால் ஏற்படும் ஒலிகளைக் கேட்கவும் அவற்றின் மணத்தை நுகர்ந்து பார்க்கவும் செய்தல். மேலும் தீங்கு விளைவிக்காத பொருள்களைத் தேர்ந்தெடுத்து சுவைக்கச் செய்தல். மாணவர்களை அப்பொருள்களைப் பற்றி மேலே கொடுக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்தி பேசச் செய்தல்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களுடன் தொடர்புடைய புலன் உறுப்புகளின் பெயர்களை எழுதுக

புலன் உறுப்புகளுடன் சொற்களை இணைக்கும் பயிற்சி

உங்களுக்குத் தெரியுமா?

நமது உடலின் மிகப் பெரிய புலன் உறுப்பு தோல்.

உங்களுக்குத் தெரியுமா?

யானையின் நீண்ட மூக்கே அதன் தும்பிக்கை.

யானை

தோற்ற அமைவு (Posture)

பல்வேறு செயல்களைச் செய்யும்போது நம் உடல் அமைந்துள்ள நிலையையே தோற்ற அமைவு என்கிறோம். பல்வேறு செயல்களைச் செய்வதில் சரியான, சரியற்ற உடல் அமைவு நிலைகள் உள்ளன. அவற்றைப் பின்வரும் படங்களை உற்றுநோக்கி அறிவோமா!

சரியான மற்றும் தவறான உடல் தோற்ற அமைவுகள்
சரியான மற்றும் தவறான அமரும் நிலைகள்

நாம் எப்பொழுதுமே சரியான நிலையிலேயே செயல்களைச் செய்ய வேண்டும். தரையில் அமர்வது உடல்நலத்திற்கு நல்லது.

சரியான நிமிர்ந்த தோற்ற அமைவு முதுகுவலியைத் தவிர்க்கும்.

வளர்ச்சிப் படிநிலைகள்

உலகில் உள்ள பிற விலங்குகளிடமிருந்து மூன்று செயல்கள் நம்மை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

* நம்மால் நிமிர்ந்து நிற்க முடியும்.

* நம்மால் பேச்சின் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

* நம்மால் சிந்திக்க முடியும்.

நான் குழந்தையாக இருந்தது முதல் ஆறு/ஏழு வயது வரை வளர்ந்துள்ளேன்.

பிறர் உதவியின்றி என்னால் தானாகவே சாப்பிட முடியும்.

என்னால் படிக்க, எழுத மற்றும் வரைய முடியும்.

என்னால் விளையாட்டுகளை விளையாட முடியும்.

குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

நம் அனைவருக்கும் விளையாடப் பிடிக்கும். விளையாட்டுகள் இரு வகைப்படும்:

உள் அரங்க விளையாட்டு, வெளி அரங்க விளையாட்டு.

உள் அரங்க மற்றும் வெளி அரங்க விளையாட்டுகள்

பயிற்சிகள்

எழுத்தின் மறுபாதியை வரைந்து முழுமையாக்குக.

எழுத்து பயிற்சி

சரியான தோற்ற அமைவிற்கு மட்டும் (✓) குறியிடுக.

சரியான தோற்ற அமைவு பயிற்சி

பின்வரும் சரியான தோற்ற அமைவை உங்கள் நண்பர்களோடு சேர்ந்து செய்க.

அ. அமர்தல்

ஆ. நிற்றல்

இ. நடத்தல்

ஈ. தூக்குதல்