6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு (SA) 2023 - 24 | வினாத்தாள் மற்றும் விடைகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (14x1=14)
1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ------
2. ‘நீக்குதல்' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ------
3. மனிதன் எப்போதும் உண்மையையே ------
4. முதல் எழுத்துகள் இடம்பெறாத சொல்லைத் தேர்க.
5. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன். இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ------
6. 'தனிநிலை' என அழைக்கப்படுவது ------
7. 'சரணாலயம்' என்பதன் வேறு பெயர் ------
8. ஏற்றத்தாழ்வற்ற ------ அமைய வேண்டும்.
9. ‘சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
10. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ------
11. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ------
12. ‘ஒருமித்துச் செயல்படு' என்ற அறிவியல் ஆத்திசூடி தொடரிலுள்ள ஒருமித்து என்பதன் பொருள் ------
13. தாய்மொழியில் படித்தால் ------ அடையலாம்.
14. ‘அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
II. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும். (5x2=10)
15. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
16. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உங்கள் பொறுப்பு ஒன்றை எழுதுக.
17. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?
18. வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
1. தலையில் சிறகு வளர்தல்.
2. இறகுகளின் நிறம் மாறுதல்.
3. உடலில் கற்றையாக முடி வளர்தல்.
19. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
1. வல்லினம்: க், ச், ட், த், ப், ற்
2. மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
3. இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
20. முதல் எழுத்துகள் என்பவை யாவை?
21. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவவேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
22. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
III. எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும். (4x3=12)
23. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?
24. மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?
ங, ய, வ, ஞ - ஆகிய வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே மொழிக்கு முதலில் வரும்.
25. எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.
26. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம் பெறும்?
27. தமிழ் இனியமொழி என்பதற்கான காரணம் தருக.
28. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
IV. அடிபிறழாமல் எழுதுக. (3+2=5)
29. ‘மாமழை போற்றுதும்' - எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்.
30. ‘அன்பிலார்' - எனத் தொடங்கும் திருக்குறள்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
V. விடையளிக்கவும். (2x4=8)
31. அ) பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
- ஆள் அரவமற்ற மரங்களை வளர்க்க வேண்டும்.
- விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்.
- நீர்நிலைகளைத் தூய்மையாகப் பாதுகாக்க வேண்டும்.
- வீட்டின் மாடிகளில் பறவைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை வைக்கலாம்.
- காடுகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
32. ஆ) சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
- உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவது.
- செயற்கைக்கோள்களை ஏவி விண்வெளித்துறையில் சாதனை புரிந்தது.
- அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் இருப்பது.
- பாதுகாப்புத் துறையில் அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகளைச் செலுத்தியது.
VI. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5x1=5)
34. வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
(மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.)
35. கலைச்சொல் எழுதுக. (Intelligence)
36. பரிபாடல் - இச்சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை இரண்டினை எழுதுக.
37. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
முத்து தம் ------ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி/பணி)
38. கலைந்துள்ள சொல்லை முறைப்படுத்தி எழுதுக. (மத்ருதும்வ)