Kaatchiyai Kandu Kavinura Ezhuthuga - Tamil Model Question with Solutions | Iyal 1-9

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக - தமிழ் மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுகள் | இயல் 1-9

வி.எண்:40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

Tamil Nadu Education Header

இயல்-1

மொழிக் கல்வி

கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் படம்
கனவு மெய்ப்பட வேண்டும்
கல்வி வசப்பட வேண்டும்
கற்க நினைப்பதெல்லாம் -நாம்
கற்று நிறைவுற வேண்டும்
அறிவிற்கு வெளிச்சம் வசிக்கும் நூலே!
அறிவாகிய பூட்டைத் திறக்க
நல்ல புத்தகம் என்னும் சாவி தேவை
பூட்டிய அறிவின் திறவுகோல் கல்வியே!
படி; படி படிப்படியாய்ப் படி
எழுது; எழுது எண்ணி எண்ணி எழுது
காலத்தை வெல்லலாம் -கல்வி பயிலு
உலகத்தை வெல்லலாம் -கல்வி பயிலு
அறிவை பூட்டி வைக்காதே
அறியாமை இருளில் தலைகுணியாதே...!
சலைக்காமல் நூல் படித்தால்
மூளைக்கும் சிறகு முளைக்கும்
மூவுலகும் இட்டுச் செல்லும்.......

இயல்-2

உயிரின் ஓசை (காற்றே வா)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய படம்
அடிமை நீங்க
அகிம்சை
அறியாமை அகல
புத்தகப்பை
சுமப்போம்-இன்று
நோய் நீங்கிட
இயற்கை காற்றைச் சுமப்போம்-நாளை
மானிடா.

இயல்-3

பண்பாட்டின் விருந்தோம்பல்

விருந்தோம்பல் பண்பை விளக்கும் படம்
வறுமையில் வாடிய எனக்கு
ஒரு நாள் கிடைத்தது நல்லுணவு....
உண்ணும் வேளையில் நீ! வந்தாய்
பசியால் இணைந்தோம்
பகிர்ந்து உண்ணலாம்
கனிவான பார்வை
கை நிறைய சோறு
சரியான நோக்கம்
தெளிவான முடிவு
நெறியான வாழ்க்கை
அழியாத மகிழ்ச்சி
அதுவே நல்வாழ்க்கை!

இயல்-4

தொழில் நுட்பம்

தொழில்நுட்ப அடிமைத்தனம் பற்றிய படம்
செல்பேசி அடிமையென நீயிருக்க
சொல்லாமல் அதுவேயுன் முதுகிலமர
நல்லடிமை நீயென்றே பயணமாகும்
நாணமற்ற வழிகளையே தூண்டிவிடும்
கல்வியினைத் தொலைத்துநிற்கும் ஆண்டியாக்கும்
கலங்கமது குடும்பத்தில் உண்டாக்கும்
பொல்லாத தலைகுனிவும் தானேவரும்
புரிந்தாலுன் செல்பேசி உனக்கடிமை

இயல்-5

கல்வி

இயற்கை சூழலில் கல்வி கற்கும் மாணவர்கள்
வெட்டிய மரத்தின் மீதமர்ந்து
மரம் வளர்க்கும் கல்வி
இருக்கும்போது அறியாமையில் இருந்தோர்
இனிமேல் கிடைக்க வரம் கேட்கிறார்கள்
கண்கெட்ட பிறகு
சூரிய வணக்கம் இதுதான்
நடு மரம் நடு
மண்ணுக்கும் மனிதனுக்கும்
வான்புனலையும் தென்றல் காற்றையும் தரும்
மரம்-இல்லையேல்
மனிதனுமில்லை
நிலைப்பெற்ற எவ்வுயிருமில்லை
உலகமே இங்கு சுடுகாடாச்சு
வெட்ட வெளியில் அமர்ந்து படிக்கும்
அவல நிலைக்கும் காரணமா போச்சு
நடு மரம் நடு...

இயல்-6

ஒயிலாட்டம்

ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்கள்
ஒய்யாரமாய் ஆடும் கலை
ஒயிலாட்டம் ஆன கலை
சீருடைப்போல் போடும் உடை
வீரமாக ஆடும் கலை
தமிழர்களால் போற்றும் கலை
மாறுமோ எங்கள் நிலை
அழகாய் ஆடுவோம்;
அன்பாய் பாடுவோம்;
ஒயிலாட்டம் என்று கூறுவோம்;
ஒற்றுமையாய் ஆடுவோம்;
துன்பம் தீர்க்கும் கலை
துள்ளித் துள்ளி ஆடும் கலை
ஆண்கள் ஆடும் கலை
அழகாய் ஆடும் கலை. (ஒயிலாட்டம்)

இயல்-7

விவசாய நாடு

வயலில் உழைக்கும் விவசாயி
விண்ணையும் மண்ணையும்
நன்கு உணர்ந்த
காலத்தையும் நேரத்தையும்
கண்டுபிடித்த
மானுடப் பிறப்பின் முதல் விஞ்ஞானி
நீரின் மேன்மையை அறிந்தவன்
நிலத்தின் வளம் அறிந்தவன்
மண்ணின் மகிமை அறிந்தவன்
விதையின் விதையைக் கண்டறிந்தவன்
காடுமேடுகளையும் கழனியாக்கி
இயற்கையோடு பின்னிப்பிணைந்து
தன்னிலை மாறாத தங்கமகன்
மண்ணை வைரமாகவும் விதையை வீரியமாகவும்
உழவை உயிராக கருதி
கதிர்களை கடவுளாக போற்றுபவன் (விவசாயி)

இயல்-8

அறம் செய விரும்பு

உழைப்பின் முக்கியத்துவம்
மனிதா ! உன் உழைப்பை நீ நம்பு
யார்? கொடுப்பார்கள் என்று
ஏங்கி தவிக்ககாதே
அவர், இவர், கடவுள் கொடுப்பார் என்று
ஏங்கி தவிக்காதே
உன்னையே! நீ நம்பு
உடலையும் மனதையும் வலிமையாக்கு
பிறர் மனம் புண்பட்டால்
நம் மனம் தளராமல்
வாழும் வாழ்வே !
உழைப்பால் உயர்ந்திடு
உழைத்திடு
அறம் செய விரும்பு அறம் செய விரும்பு.....

இயல்-9

மனிதமும் மோகமும்

உதவியை விளம்பரப்படுத்தும் மனிதர்
வலக்கையில் செல்பேசி பிடித்தபடி
வள்ளல்போல் இடக்கையில் கொடுத்தபடி
உலவுகின்ற உத்தமர்கள் உள்ளபடி
உதவுகிறார் அதையும்படம் எடுத்தபடி
பலவிதமாய் விளம்பரமே செய்யும்படி
பார்ப்பவர்கள் வள்ளலென எண்ணும்படி
நிலமிதிலே தருமரெனப் போற்றும்படி
நம்பவைப்பர் இவர்கள்திறம் தோற்குமடி