Letter to the Editor Format in Tamil | Naalithazh Asiriyarukku Kaditham

Letter to the Editor Format in Tamil | Naalithazh Asiriyarukku Kaditham

கடிதம்: நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

அ. தமிழ்

6, திருவள்ளுவர் தெரு,

சங்கரலிங்கபுரம்,

விருதுநகர் (மாவட்டம்).

பெறுநர்

ஆசிரியர்,

தினமணி,

சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல்...

வணக்கம். விருதுநகர் மாவட்டம், சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். தங்கள் நாளிதழின் பொங்கல் மலருக்காக 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் இரண்டு பக்க கட்டுரை எழுதி, இத்துடன் இணைத்துள்ளேன். வரும் பொங்கல் அன்று வெளிவரும் பொங்கல் மலரில், எனது கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன். நன்றி!

இப்படிக்கு,

உண்மையுள்ள,

அ. தமிழ்

இணைப்பு:

(1). 'உழவு தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற தலைப்பிலான கட்டுரை

உறைமேல் முகவரி

பெறுநர்

ஆசிரியர்,

தினமணி,

சென்னை.