Letter to Electricity Board Officer in Tamil | மின்வாரிய அலுவலருக்கு கடிதம்

Letter to Electricity Board Officer in Tamil | மின்வாரிய அலுவலருக்கு கடிதம்

கடிதம்-மின்வாரிய அலுவலருக்கு

உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி, ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

அ. தமிழ்,

6, திருவள்ளுவர் தெரு,

சங்கரலிங்கபுரம்,

விருதுநகர் (மாவட்டம்).


பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

மின்வாரிய அலுவலகம்,

விருதுநகர்.


மதிப்பிற்குரிய அய்யா,


பொருள்: பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தர வேண்டுதல் குறித்து...

வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாகக் குடியிருந்து வருகிறேன். எங்கள் தெருவில் சுமார் 100 வீடுகள் உள்ளன. 200 மீட்டர் நீளமுள்ள எங்கள் தெருவில் 4 மின் கம்பங்கள் உள்ளன. அதில் இரண்டு மின் கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன.

அந்தப் பகுதி இருட்டாக இருப்பதால் திருடர்கள் நடமாட்டம் இருக்கிறது; நச்சு பூச்சிகளின் தொல்லையும் இருக்கின்றது. இதனால், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

இதனைத் தவிர்க்க, பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றித் தருமாறு வேண்டுகிறேன்.


இப்படிக்கு,

உண்மையுள்ள,

அ. தமிழ்


இடம் : சங்கரலிங்கபுரம்

நாள் : 24.09.2020

உறைமேல் முகவரி:

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

மின்வாரிய அலுவலகம்,

விருதுநகர்.