மெய்க்கீர்த்தி - ஒரு மதிப்பெண் வினாக்கள்
கல் இலக்கியமாக அமைந்தது எது?
மெய்க்கீர்த்தி
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இலக்கியம் எது?
பதிற்றுப்பத்து
மெய்க்கீர்த்தி யாருடைய காலத்தில் செப்பமான வடிவம் பெற்றது?
சோழர் காலத்தில்
மெய்கீர்த்தி யாருடைய காலங்களில் முளைவிட்டது?
பல்லவர், பாண்டியர்
இந்திரன் முதல் திசாபாலர் எண்மர் யாவர்?
இந்திரன், அக்னி தேவன், எமதர்மன், வருண பகவான், நிருதி தேவன், வாயு பகவான், குபேரன், ஈசானன்
மனுவாணை-பொருள் தருக.
மனு தர்மத்தின் படி
மனுதர்மத்தின்படி ஆட்சி செய்த சோழ மன்னன் யார்?
இரண்டாம் ராஜராஜ சோழன்
சோழ நாட்டில் பிணிக்கப்படுபவை எவை?
பட்டத்துயானைகள்
சோழநாட்டில் புலம்புபவை எவை?
சிலம்புகள்
சோழ நாட்டின் கலங்குபவை எவை?
ஓடைகள்
சோழநாட்டில் சிறைப்படுபவை எவை?
ஆற்று நீர்
சோழநாட்டில் வடுப்படுவன எவை?
மாங்காய்கள்
சோழ நாட்டில் பறிக்கப்படுவன எவை?
மலர்கள்
சோழநாட்டில் கொடியன எவை?
காடுகள்
சோழநாட்டில் கள்ளுண்பன எவை?
வண்டுகள்
சோழ நாட்டில் வெறுமை உடையன எவை?
மலை மூங்கில்
சோழநாட்டில் போராய் எழுவது எங்கே?
வயல்களில்
சோழநாட்டில் எங்கு இருள் சூழ்ந்து இருக்கிறது?
நீண்ட மலைகளில்
சோழ நாட்டில் யாரிடத்தில் மருட்சி காணப்படுகிறது?
இளம் மான்களின் கண்களில்
சோழ நாட்டில் பிறழ்ந்து செல்வது யார்?
குளத்து மீன்கள்
சோழநாட்டில் சினம்கொள்பவர் யார்?
செவிலித் தாயர்
சோழநாட்டில் பொருள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது?
புலவர்தம் பாட்டில்
சோழநாட்டில் கூடி ஆடுவது யார்?
இசைப்பாணர்
விழிப்பெற்ற பயனாகவும் மெய்பெற்ற அருளாகவும் மொழிபெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூலாகவும் திகழ்வது யார்?
இரண்டாம் ராஜராஜ சோழன்
ராஜராஜன் கால தமிழ் கல்வெட்டு எத்தனையாவது நூற்றாண்டைச் சார்ந்தது?
11
கோப்பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் யார்?
இரண்டாம் ராஜராஜ சோழன்
கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மெய்க்கீர்த்திகள்