சிலப்பதிகாரம்: ஒரு மதிப்பெண் வினா-விடைகள்
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விடை: இளங்கோவடிகள்
தண் நறுஞ் சாந்தம் பொருள் தருக.
விடை: குளிர்ந்த மணம் மிக்க சந்தனம்
மேவிய விரை பொருள் தருக.
விடை: எழுந்து பரவுகின்ற நறுமணம்
பகர்வனர் பொருள் தருக.
விடை: விற்பனை செய்பவர்
காருகர் பொருள் தருக.
விடை: நெசவாளர்
தூசு பொருள் தருக.
விடை: பட்டு
துகிர் பொருள் தருக.
விடை: பவளம்
ஆரம் பொருள் தருக.
விடை: சந்தனம்
அருங்கல வெறுக்கை பொருள் தருக.
விடை: பலவகையான செல்வம்
நனந்தலை மறுகு பொருள் தருக.
விடை: அகன்ற வீதி
பால்வகை பொருள் தருக.
விடை: பலவகை
கூலம் பொருள் தருக.
விடை: தானியம்
காழியர் பொருள் தருக.
விடை: பிட்டு வணிகர்
கூவியர் பொருள் தருக.
விடை: அப்பம் சுடுபவர்
கல்நொடை ஆட்டியர்-பொருள் தருக.
விடை: வலைச்சியர்
பகருநர் பொருள் தருக.
விடை: விற்பவர்
பாசவர் பொருள் தருக
விடை: வெற்றிலை விற்பவர்
வாசவர் பொருள் தருக.
விடை: நறுமண பொருட்கள் விற்பவர்
பல் நிண விலைஞர்-பொருள் தருக.
விடை: பலவகையான இறைச்சி விற்பவர்
ஓசுநர்-பொருள் தருக.
விடை: எண்ணெய் விற்பவர்
கஞ்ச காரர்-பொருள் தருக
விடை: வெண்கலப் பாத்திரம் செய்பவர்
கருங்கைக் கொல்லர்-பொருள் தருக.
விடை: இரும்பினால் கருவிகள் செய்பவர்
கண்ணுள் வினைஞர் -பொருள் தருக.
விடை: ஓவியர்
மண்ணீட்டு ஆளர்-பொருள் தருக.
விடை: சிற்பி
நன்கலம் தருநர்-பொருள் தருக.
விடை: இரத்தின வேலை செய்பவர்
துன்ன காரர் -பொருள் தருக.
விடை: தையல் தைப்பவர்
தோலின் துன்னர்-பொருள் தருக.
விடை: தோல்பொருள் தைப்பவர்
கிழி-பொருள் தருக.
விடை: துணி
கிடை -பொருள் தருக.
விடை: கட்டை
பால்கெழு மாக்கள்- பொருள் தருக.
விடை: பலவகைத் தொழில் செய்யும் மக்கள்
குரல் முதல் 7 எவை?
விடை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
மறு இன்றி -பொருள் தருக.
விடை: குற்றமின்றி
ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணியை முதலில் வைத்து பாடும் நூல் எது?
விடை: திருத்தணிகையுலா
வண்ணமும் சுண்ணமும்- இலக்கணக்குறிப்பு தருக.
விடை: எண்ணும்மை
பயில்தொழில் -இலக்கணக்குறிப்பு தருக.
விடை: வினைத்தொகை
சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான் நந்தா வளையாபதி தருவான் வாசகனுக்கு ஈந்தான் திளையாத குண்டலகேசிக்கும்-என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
விடை: திருத்தணிகை உலா
கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் எந்தப் பாதையில் அழைத்துச் சென்றார்?
விடை: இடைப்பட்ட வழி
தென்னவன் சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால்__________வழியாக மதுரை செல்லலாம்.
விடை: திருமால் குன்றம்
நெடுவேள் குன்றம் என்று அழைக்கப்படும் மலை எது?
விடை: சுருளிமலை
கண்ணகி, சுருளி மலையில் எந்த இடத்தை அடைந்தாள்?
விடை: வேங்கைக் கானல்
கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர் யார்?
விடை: கவுந்தி அடிகள்
கொடும்பாளூர் என்னும் இடத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழிகள் எத்தனை?
விடை: 3
காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து கொடும்பாளூர் செல்லும் வழி யாது?
விடை: உறையூர்- திருவரங்கம்
சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை எது?
விடை: உரைப்பாட்டு மடை
உரைப்பாட்டு மடை என்பதன் பொருள் யாது?
விடை: உரைநடைப் பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு
மடை என்பது யாது?
விடை: வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை
உரை என்பது யாது?
விடை: பேசும் மொழியின் ஓட்டம்
சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவை?
விடை: முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?
விடை: 3
சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை?
விடை: 30
இரட்டைக் காப்பியங்கள் எனப்படுபவை எவை?
விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?
விடை: இளங்கோவடிகள்
மணிமேகலையின் ஆசிரியர் யார்?
விடை: சீத்தலைச்சாத்தனார்
கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள் நீரே அருளுக' என்றவர் யார்?
விடை: சீத்தலைச்சாத்தனார்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்றவர் யார்?
விடை: இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டங்கள் எவை?
விடை: புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்