மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
மொழியோடு விளையாடு
1. அந்தாதிச் சொற்களை உருவாக்குக
அத்தி, குருவி, விருது, இனிப்பு, வரிசையாக
எ.கா: அ) குருவி ஆ) விருது இ) இனிப்பு ஈ) வரிசையாக
அத்தி - வியர்வை - துவர்ப்பு - புகழ்ச்சி - கல்வி
திகைப்பு - வைகாசி - புனுகு - சிகப்பு - விருந்து
புகழ்ச்சி - சிறப்பு - குருவி - புதுமை - துடுக்கு
சிரிப்பு - புலமை - வியப்பு - மைந்தா - குரங்கு
புன்னகை - மைசூரூ - புகுந்து - தாவி - குத்து
கைபேசி - ரூபாவதி - துயில் - விருப்பு - துதி
சிறப்பு - திங்கள் - புகழ் - தித்திப்பு...
2. அகராதியில் காண்க.
நயவாமை - விரும்பாமை
கிளத்தல் - எழுப்பல், சொல்லுதல், பேசுதல்
கேழ்பு - நன்மை
புரிசை - மதில்
செம்மல் - அரசன், அருகன், தலைமகன், பழம்பூ, புதல்வன், பெருமையிற் சிறந்தோம், உள்ளநிறைவு, நீர், தருக்கு.
3. கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.
4. தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.
5. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க. (திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை )
எ.கா: நான் திடலில் ஓடினேன். (தன்வினை)
நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன். (பிறவினை)
காவியா - வரை
காவியா போட்டியில் வரைந்தாள்.( தன்வினை )
காவியா போட்டியில் ஓவியத்தை வரைவித்தாள்.. ( பிறவினை )
கவிதை - நனை
கவிதை மழையில் நனைந்தேன்.( தன்வினை )
இரகு கவிதை மழையில் நனைவித்தான். ( பிறவினை )
இலை - அசை
இலை வேகமாக அசைந்தது. ( தன்வினை )
காற்று இலையை வேகமாக அசைவித்தது.( பிறவினை )
மழை - சேர்
மழை மண்ணை சேர்ந்தது.( தன்வினை )
மழைநீரை மண்ணில் சேர்த்தான்.( பிறவினை )
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
மனிதர்களே ,
பத்தோடு பதினொன்றாக வாழாதீர்.......
இக்கரைக்கு அக்கரை பச்சை யென்று
வேதாந்தம் பேசி மூச்சு முட்டி வாழாதீர்.......
சவாலை சந்தியுங்கள் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள்
“வாய்ப்புகளை நழுவ விடாதீர்"
செயல்திட்டம்
நீங்கள் வாழும் பகுதியில் மக்கள் பேசும் மொழிகளைப் பட்டியலிட்டு அம்மொழி பேசப்படுகின்ற இடங்களை நிலப்படத்தில் வண்ணமிட்டுக் காட்டுக.
உங்களுடைய நாட்குறிப்பில் இடம் பெற்ற ஒருவாரத்திற்குரிய மகிழ்ச்சியான செய்திகளைக் தொகுத்து அட்டவணைப்படுத்துக.
திங்கள் –
வருத்தம் தெரிவிக்கிறேன். பொறுத்துக் கொள்ளவும் ஆகிய சொற்றொடர்களை இன்று இரண்டு முறை வகுப்பில் பயன்படுத்தினேன். இதனால் புதிய நண்பர் கிடைத்தார்.
செவ்வாய் –
நீ தேர்வில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து - நண்பன் என்னைப் பாராட்டினான்.
புதன் –
வகுப்பில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ 500ஐ எடுத்து உரியவரிடம் கொடுத்தேன் - தலைமை ஆசிரியர் பாராட்டினார்.
வியாழன் -
தெருவில் கிடந்த பணப்பையைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் – உரியவர் என்னையும் குடும்பத்தையும் பாராட்டினார்.
வெள்ளி –
வீட்டிற்குத் தேவையான பொருள்களை நானாக முன்வந்து வாங்கிக் கொடுத்தேன் - அம்மா பாராட்டினார்.
சனி –
மாற்றுத் திறனாளி சாலையைக் கடக்க உதவினேன் - பொதுமக்கள் பாராட்டினர்.
ஞாயிறு –
நூலகத்தில் படியில் தள்ளாடிய பெரியவரை கைப்பிடித்து வழி நடத்தினேன் - பெரியவர் பாராட்டினார்.
கலைச்சொல் அறிவோம்
- உருபன் - Morpheme
- ஒலியன் – Phoneme
- ஒப்பிலக்கணம் - Comparative Grammar
- பேரகராதி - Lexicon
அறிவை விரிவு செய்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ராபர்ட் கால்டுவெல்
- மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா
- தமிழ்நடைக் கையேடு
- மாணவர்களுக்கான தமிழ் - என். சொக்கன்
இணையத்தில் காண்க.
Refer to TextBook.