காலாண்டுப் பொதுத் தேர்வு - 2024
பத்தாம் வகுப்பு - தமிழ்
குறிப்பு:
- அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
- கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். (15 x 1 = 15)
1.'எந்தமிழ்நா' என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.
2.'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
3."காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
4.'பாடுஇமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
5.'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப்பணையம் வைத்து விருந்தளித்தான்' என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை ____.
6.தேர்ப்பாகன் - இத் தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.
7.குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
8.“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
9.'குழந்தை வந்தது' என்ற எழுவாய்த்தொடரின் விளித்தொடரைத் தேர்வுசெய்க.
10.குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
11.மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாட
12.பாடலின் இலக்கிய வகை
13.'கிண்கிணி' என்னும் அணிகலன் :
14.குண்டலமும் குழைக்காதும் - இலக்கணக்குறிப்பு தருக.
15.சீர் எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக.
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (4 x 2 = 8)
வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
16. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
அ) நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.
ஆ) உயிரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே.
18. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி குறிப்பிடுக.
19. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
20. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள். - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
21. "பொருள்” என முடியும் திருக்குறளை எழுதுக.
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 x 2 = 10)
22. கலைச்சொற்கள் தருக.
அ) Intellectual ஆ) Biotechnology
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
பின்வரும் தொடரில் விடுபட்ட சொற்கள் குறிக்கும் வண்ணங்களின் பெயர்களை எழுதுக.
கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ______ புல்வெளிகளில் கதிரவனின் ______ வெயில் பரவிக் கிடக்கிறது.
23. ‘கிளர்ந்த’ - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதி, தொடரில் அமைக்க.
25. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) பசுமையான ______ ஐக் ______ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)
ஆ) வாழ்க்கையில் ______ மீண்டும் வெல்லும், இதைத் தத்துவமாய்த் ______ கூத்து சொல்லும். (தோற்பாவை, தோற்பவை)
26. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைபூச் செடியைப் பார்த்தவாரே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
27. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
28. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
அ) கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)
ஆ) ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. (தனிச்சொற்றொடராக மாற்றுக)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கும் விடையளிக்கவும். (2 x 3 = 6)
29. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிறமொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன. புள்ளிவிவரப்படி அதிகமான தமிழ் நூல்கள், பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம். மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
அ) ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன?
ஆ) தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
இ) மொழிபெயர்ப்பின் பயன் என்ன?
31. சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் எழுதுக.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 x 3 = 6)
வினா எண் 34-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
32. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை எழுதுக.
33. "மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரில் உள்ள உவமை காட்டும் செய்தியை விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக.
அ) “மண்ணுலகப் பேரரசே” என முடியும் 'அன்னை மொழியே' பாடலை எழுதுக. (அல்லது)
ஆ) “வெய்யோனொளி....." எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கும் மட்டும் விடையளிக்கவும். (2 x 3 = 6)
35. "அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது – இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும்” இக்கூற்றில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.
36. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
37. தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 x 5 = 25)
38. அ) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதை குறள்வழி விளக்குக.
39. அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் உங்கள் நேரத்தை எவ்வாறு பயனுறக் கழித்தீர்கள் என்பதை நண்பனுக்கு விவரித்துக் கடிதம் எழுதுக.
40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41. முருகன் தன் தந்தை வைத்தியநாதனிடம் நூலகத்தில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்தான். அவரும் முருகனிடம் 200/- ரூபாயும், 15, சிங்காரம் தெரு, புதுப்பாளையம், விழுப்புரம் மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற முருகனாக, தேர்வர் தன்னைக் கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் நடந்து கொள்ளும் முறைகளைப் பட்டியலிடுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்கவும் :
குறிப்பு : செவி மாற்றுத்திறனாளர்களுக்கான வினா.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
- மனிதன் எப்படிப்பட்டவன்?
- மனிதனுக்கு எப்போது மகிழ்ச்சி பெருகுகிறது?
- மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க மனிதன் என்ன செய்ய வேண்டும்?
- அறநெறிக் காலம் எனப்படுவது எது?
- சங்ககால அறங்கள் எப்படிப்பட்டவை?
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்கவும். (3 x 8 = 24)
43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
44. அ) ‘அன்னமய்யா' என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
ஆ) மேரியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துக்களை எழுதுக.
45. அ) குறிப்புகளைக் கொண்டு 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
குறிப்புகள் : முன்னுரை - தமிழன்னையின் அணிகலன்கள் - தமிழ்ச்சான்றோர் - தமிழின் வளர்ச்சி - தமிழின் எதிர்காலம் - முடிவுரை.
(அல்லது)
ஆ) விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்.
குறிப்புகள் : முன்னுரை - பிறப்பும் கல்வியும் - முதல் விண்வெளிப்பயணம் - கல்பனா சாவ்லாவின் மறைவு - முடிவுரை
******
தமிழ் - காலாண்டுப் பொதுத் தேர்வு 2024-2025
பத்தாம் வகுப்பு - செங்கல்பட்டு மாவட்டம் (விடைக்குறிப்பு)
பகுதி - I
- எம் + தமிழ் + நா
- சங்ககாலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
- சருகும் சண்டும்
- கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
- இன்மையிலும் விருந்து
- உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- பால் வழுவமைதி, திணை வழுவமைதி
- கல்வி
- குழந்தையே வா
- குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
- தளரப் பிணைத்தால்
- சிற்றிலக்கியம்
- காலில் அணிவது
- எண்ணும்மை
- பட்ட, பொட்டோடு
பகுதி - II
16.
- வணக்கம்
- வாருங்கள்
- அமருங்கள்
- கண்ணீர் அருந்துங்கள்
17.
அ) நெய்தல் நிலத்தவர்கள் பாணர்களை வரவேற்று என்ன கொடுத்தனர்?
ஆ) உயிரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது எது?
18.
- நிலம்
- நீர்
- நெருப்பு
- காற்று
- வானம்
19.
- சமைக்கின்றது.
- கண் அறுவை சிகிச்சை செய்கிறது.
20.
- அமைதியான உலகத்தை, ஒல்லியான தண்டுகள்.
- மலரை உலகமாக உருவகப்படுத்துகிறார்.
21. பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.
22.
அ) அறிவாளர்
ஆ) உயிரி தொழில் நுட்பம்
23.
கிளர்ந்த = கிளர் + த்(ந்) + த் + அ
- கிளர் - பகுதி
- த் - சந்தி (ந்) ஆனது விகாரம்
- த் - இறந்தகால இடைநிலை
- அ - பெயரெச்ச விகுதி
24.
தண்ணீர்க் குடி - கண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
தயிர்க்குடம் - தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை)
25.
அ) காட்சியை, காணுதல்
ஆ) தோற்பவை, தோற்பாவை
26. குயலில், காழைப் பூவை
27.
வினா ஆறு வகைப்படும்.
- அறிவினா
- அறியா வினா
- ஐயவினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஏவல் வினா
28.
அ) கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
ஆ) ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
பகுதி - III
29. நெல் நாற்றுகள் வயலில் நடப்பட்டன. மிளகாய்ச் செடிகள் வரிசையாக நடப்பட்டன. தென்னம் பிள்ளை குயமாக நடப்பட்டது. சோளப் பைங்கூழ் காட்டில் விதைக்கப்பட்டது. புளியங்கன்று ஆடி,மாக நடப்பட்டது.
30.
அ) 5000 நூல்கள்
ஆ) ஆங்கிலம், மலையாளம்
இ) புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
31.
மி.வி. கா : நான் மனிதர்களுக்கு இதமான காற்றைத் தருவேன் நீ?
சோ. கா : ஏன் நானும் தான் இதமான காற்றை தருவேன்.
மி.வி.கா : நான் வாழும் இடம் வீடுகளும், அலுவலகங்களும்.
சோ. கா : நான் வாழும் இடம் சோலைகளும், வனங்களும்.
மி.வி.கா : வீட்டுக்குள்ளே இருப்பவர்களுக்கு குளிர்ந்தக் காற்றை தருவேன்.
சோ. கா : மின்சாரம் இல்லை எனில் நீ இல்லை. நான் இயற்கையானவன்.
மி.வி.கா : இருவரும் சேர்ந்து மக்களுக்கு இதமளிப்போம்.
பிரிவு - 2
34 - (கட்டாய வினா)
32.
| பாடல் அடிகள் | தமிழ் | கடல் |
|---|---|---|
| முத்தமிழ் | இயல், இசை, நாடகம் | முத்தினை அமிழ்ந்து எடுத்தல் |
| முச்சங்கம் | முதல், இடை, கடை | மூன்று வகையான சங்குகள் |
| மெத்த வணிகலன் | ஐம்பெருங்காப்பியங்கள் | மிகுதியான வணிகக் கப்பல்கள் |
| சங்கத்தவர் காக்க | சங்கப் பலகையில் இருந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தமை | நீரலைகளைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல் |
33.
- மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணை கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
- அதுபோல, வித்துவக்கோட்டில் எழுந்தருளி இருக்கும் அன்னையே! நீங்காத துன்பத்தை நீ எனக்குத் தந்தாலும் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்க்க வாழ்கிறேன்.
34. அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
அ) முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக்குமரி கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே.
ஆ) வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடு இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்.
பிரிவு - 3
35.
- அறிதல் - அறியாமை
- பிறத்தல் - பிறவாமை
- புரிதல் - புரியாமை
- தெரிதல் - தெரியாமை
36. அலகிடுதல்
| வ.எண் | சீர் | அசை | வாய்ப்பாடு |
|---|---|---|---|
| 1 | கருவியும் | நிரை நிரை | கருவிளம் |
| 2 | காலமும் | நேர் நிரை | கூவிளம் |
| 3 | செய்கையும் | நேர் நேர் நேர் | தேமாங்காய் |
| 4 | செய்யும் | நேர் நேர் | தேமா |
| 5 | அருவினையும் | நிரை நிரை நேர் | கருவிளங்காய் |
| 6 | மாண்ட | நேர் நேர் | தேமா |
| 7 | தமைச்சு | நிரைபு | பிறப்பு |
இக்குறள் ‘பிறப்பு” என்னும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது.
37. தன்குறிப்பேற்றம்
தன் + குறிப்பு + ஏற்றம் = தற்குறிப்பேற்றம்
இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தம் குறிப்பை ஏற்றிக் கூறுவது.
(எ.கா)
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக் கைகாட்ட
விளக்கம் :-
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழையும் போது மதில் மேல் இருந்த கொடிகள் கையசைத்து வரவேண்டாம் என்பதைப் போல் குறிப்பேற்றி கூறுவார்.
பகுதி IV
38.
முல்லைப் பாட்டு கார்காலச் செய்திகள்!
- கார்காலம் தொடங்கிவிட்டது.
- கடல் நீரை முகந்து கொண்டு மழை மேகமானது. திருமாலின் நிறம் கொண்டு மாவலி மன்னன் முன் விண்ணுக்கும் மண்ணுக்குமாகப் பேருருவம் கொண்டது.
- போல் வளமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து பெருமழையைப் பொழிந்தது.
- மாலைப் பொழுதில் தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரத்தைப் போக்க முதுபெண்கள் ஊரின் புறத்தே சென்று முல்லைப் பூவுடன் நெல்லையும் சேர்த்துத் தூவி, தெய்வத்தைத் தொழுதனர்.
- தலைவிக்காக நற்சொல் கேட்டனர்.
- சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட, பசியால் வாடிய கன்றின் வருத்தத்தைப் போக்க நினைத்து, அதனிடம் வளைந்த கத்தியை உடைய இடையர் ஓட்டி வருவார் வருந்தாதே - என்று கூறுவதைக் கேட்டு தலைவர் திரும்பி வருவது உறுதி, எனவே, உன் துயரத்தை விட்டுவிடுவாயாக என்று ஆற்றுப்படுத்தினாள்.
ஆ) வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள்!
செயல்கள்:
தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயல்களைச் செய்தல் வேண்டும்.
- மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைய வேண்டும்.
நட்பு:
இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றை உடையவர்கள் முன் எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது.
நடைமுறைகளை அறிதல்:
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
39. உணவு விடுதி
விண்ணப்பம்
அஅஅ,
ஆஆஆ,
இஇஇ.
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
இஇஇ.
பொருள்: உணவு தரமில்லை, விலை கூடுதல் தொடர்பான விண்ணப்பம்.
வணக்கம். நேற்று காலை சுந்தர பவன் உணவு விடுதியில் சாப்பிடச் சென்று இருந்தேன். அங்கே உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது. எனவே, அந்த உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
அஅஅ.
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
இஇஇ.
குறிப்பு:
- உணவு விடுதியின் ரசீது
- விடுதியின் புகைப்படம்
40. நண்பனுக்குக் கடிதம்
20-9-24.
அன்புள்ள நண்பனுக்கு,
நான் இங்கு நலம், உன் நலம் அறிய ஆவல். கொரோனா காலக்கட்டங்களில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை நாம் அனைவரும் எதிர்கொண்டு அவதிப்பட்டோம். அப்படிப்பட்ட தருணங்களில் நான் என்னுடைய நேரத்தை என் குடும்பத்துடன் செலவழித்த நாட்களை மறக்கமுடியாது. அதுமட்டுமல்ல, நல்ல நல்ல நூல்களைப் படித்தேன், உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான சூழலை உருவாக்க சிறந்த நேரமாக பயன்படுத்தினேன். நீயும் உன்னுடைய நேரத்தை எப்படியெல்லாம் கழித்தாய் என்பதை பதில் கடிதமாக எழுதி அனுப்பு. விரைவில் சந்திப்போம்.
உன் அன்பு நண்பன்,
அஅஅ.
அஅஅ,
ஆஆஆ,
இஇஇ.
40 அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
கற்பதற்கு வயதில்லை.
ஆனந்தமாய்க் கற்றிட
அனைவரையும் ஒன்றாய்க் கூட்டி
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
நெகிழி தவிர்த்தால்..
தூயக் காற்றையும் பெறலாம்!
ஆரோக்கியமான மண்ணையும் பெறலாம்!