திருநெல்வேலி மாவட்டம்
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2024
கால அளவு: 3.00 மணி
- 1) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
- 2) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I (மதிப்பெண்கள்: 15)
- அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (15×1=15)
- கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
- வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை
- 'அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை' - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
- 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?
- அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
- பெரிய மீசை சிரித்தார் - அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை யாது?
- காசிக்காண்டம் என்பது
- எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
- குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
- ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
- தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. -இத்தொடருக்கான வினா எது?
- ‘அல்லில் ஆயினும் - விருந்து வரின் உவக்கும்' என்று குறிப்பிடும் நூல்
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடை தருக.
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு
- இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- நனந்தலை உலகம் - பொருள் கூறுக.
- தடக்கை - இலக்கணக் குறிப்பு தருக.
பகுதி - II (மதிப்பெண்கள்: 18)
பிரிவு - 1
குறிப்பு: எவையேனும் 4 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்.
- விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க
அ) இரா.இளங்குமரனார் பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
ஆ) காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
- மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
- வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
- விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
- ‘கண்’ என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2
குறிப்பு: எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
- இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அ) தொடு - தோடு ஆ) விடு - வீடு
- பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அமர்ந்தான்
- தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
அ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்
ஆ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்
- கலைச்சொற்கள் தருக.
அ) Storyteller ஆ) Tempest
- எதிர்மறையாக மாற்றுக
அ) எழுதாக் கவிதை ஆ) மீளாத்துயர்
- பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
- வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
பகுதி - III (மதிப்பெண்கள்: 18)
பிரிவு - 1
குறிப்பு: எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
-
உரையைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச்சிறப்புடையதாக இருக்கிறபோது அனைவரது அனுபவமாகவும் பொதுநிலை பெறுகிறது. அத்தகைய பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழிவேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது. ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.
அ) இலக்கியம் எப்போது பொதுநிலை பெறுகிறது?
ஆ) மொழிபெயர்ப்பின் பயன் யாது ?
இ) ஒரு நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் எதனைக் கொண்டு மதிப்பிடுவார்கள்?
- ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்ற சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
பிரிவு - 2
குறிப்பு: எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்.
- தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
- ‘மாளாத காதல் நோயாளன் போல்' என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
-
அ) விருந்தினனாக எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.
(அல்லது)ஆ) ‘அன்னை மொழியே' எனத் தொடங்கி, 'பேரரசே' என முடியும் பெருஞ்சித்திரனாரின் பாடலை எழுதுக.
பிரிவு - 3
குறிப்பு: எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
- வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
-
‘கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே!
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர்வகைகளை எழுதுக.
- நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும் - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
பகுதி - IV (மதிப்பெண்கள்: 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
-
அ) முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
(அல்லது)ஆ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
-
அ) மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)ஆ) உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும்புயலில் சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும் பழுது அடைந்த சாலைகளைச் சீரமைத்தும் மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
-
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
- எழிலன் தன் தந்தை இனியன் அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். இனியன் எழிலனிடம் 500 ரூபாயும், 17 பாரதிநகர், வள்ளுவன் தெரு, திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். தேர்வர் தன்னை எழிலனாகக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
-
அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி. திறன்பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை சமூக ஊடகங்களிலேயே மூழ்கியிருக்கும் தோழன் இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.
(அல்லது)ஆ) மொழிபெயர்க்கவும்.
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.
பகுதி - V (மதிப்பெண்கள்: 24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
-
அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
(அல்லது)ஆ) போராட்டக் கலைஞர்- பேச்சுக்கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக்கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
-
அ) ‘அன்னமய்யா' என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)ஆ) ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
-
அ) விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்' என்ற தலைப்பில் கட்டுரை வரைக.
(அல்லது)ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
10 ஆம் வகுப்பு தமிழ் - மாதிரி வினாத்தாள் விடைகள்
விடைகள்
- ஆ. மணிவகை.
- இ. கல்லா
- ஆ. இறைவாரிடம் குலசேகராழ்வார்
- இ. வேற்றுமை உருபு.
- இ. அன்மொழித் தொகை.
- இ. காசிநகரத்தின் பெருமையைப் பாடும் நூல்.
- அ. கூவிளம் - தேமா - மலர்.
- இ. பால் வழுவமைதி, திணை வழுவமைதி.
- அ. சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
- ஆ. கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
- இ. நற்றிணை.
- ஆ. முல்லைப்பாட்டு.
- எ. நப்பூதனார்.
- இ. அகன்ற உலகம்.
- ஆ. உரிச்சொல் தொடர்.
பகுதிர் - பிரிவு-1
- அ. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
- ஆ. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் எத்தனையாவது இடம் வகிக்கிறது?
பக்கம்-2
-
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி.
- அழகிய அகன்ற உலகத்தைப் பெண் சுமக்கின்றாள்.
-
- செயற்கை நுண்ணறிவு பொதிந்த விவசாயக் கருவிகள்.
- செயற்கை நுண்ணறிவு பொதிந்த மருத்துவக் கருவிகள்.
-
முகமன் சொற்கள்
- வாருங்கள் * நலமா.
- அமருங்கள் * குடும்பத்தினர் நலமா.
- நீர் அருந்துங்கள் * இளைப்பாறுங்கள்.
- உணவருந்துங்கள் * அமர்ந்து பேசுதல்
- விடை கொடுத்தல்.
- பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்
பகுதி - பிரிவு-2
- அ. தொடுத்தப் பூவைச்சூடி, காதில் தோடும் அணிந்தாள்
- அ. கோபத்தை விடும் போது வீடு இன்பமாகும்.
பக்கம் 3
-
அமர்ந்தான் -> அமர் + த் (ந்) + த் + ஆன்
- அமர் - பகுதி
- த் - சந்தி
- ந் ஆனது விகாரம்
- த் - இறந்தகால இடைநிலை
- ஆன் - ஆண்பால் விகுதி
-
அ. பயன்தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
ஆ. அழியாத கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
-
அ. Story teller - கதை சொல்லி.
ஆ. Tempest - பெருங்காற்று.
-
அ. எழுதாக்கவிதை - எழுதியக் கவிதை. (எழுதிய உரை)
ஆ. மீளாத்துயர் - மீண்ட இன்பம்.
-
அ. பாரதியார் கவிஞர் → பெயர்ப் பயனிலை
ஆ. நூலகம் சென்றார் → வினைப்பயனிலை
இ. அவர் யார்? → வினாப் பயனிலை
-
வேங்கை - மரம் / புலி - தனிமொழி.
வேம் + கை - வேகின்றகை - தொடர் மொழி.
தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்ததால் இது பொதுமொழி ஆகும்.
பக்கம் 4
பகுதி III - பிரிவு-1
-
(அ) ஒரு இலக்கியம் கலைச்சிறப்புடையதாக இருக்கிற போது அனைவரது அனுபவமாகவும் பொது நிலை பெறுகிறது.
(ஆ) பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.
(இ) ஒருநாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.
-
புளியங்கன்று ஆடிமாதம் நடப்பட்டுள்ளது.
மாங்கன்று நன்றாக வளர்கிறது.
தென்னம்பிள்ளை வாங்கி வந்தேன்.
வாழைக்கன்று வளர்கிறது.
கொய்யாக்கன்று நட்டு வைத்தேன்.
கத்தரி நாற்று வாங்கி வந்தேன்.
-
- இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றன.
- கடின வேலைகளை எளிதாக்குகின்றன.
- உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், தொலைத்தொடர்பு போன்றவற்றில் மனிதனை மேம்படுத்தி உள்ளது.
- காலை முதல் இரவு வரையிலும் அறிவியல்...
சாதனங்கள் இன்றி மனிதன் இல்லை.
பகுதி - பிரிவு-2
-
அடிச்சொல் தமிழ் கடல் முத்தமிழ் இயல், இசை, நாடகம் முத்தினை அமிழ்ந்து எடுத்தல் முச்சங்கம் முதல், இடை, கடைச் சங்கங்கள் மூன்று வகையான சங்குகள் மெத்தவணிகலன் ஐம்பெருங் காப்பியங்கள் மிகுதியான வணிகக்கப்பல்கள் சங்கத்தவர் காக்க சங்கப்புலவர்கள் காத்தனர் சங்கினைத் தடுத்துக் காத்தல் -
உவமை: மருத்துவர் உடலைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் நோயாளி அவரை நேசிப்பார்.
உவம உருபு: அதுபோல
செய்தி: இறைவன் நீங்கா இன்பத்தைத் தந்தாலும் அந்த இறைவனிடம் நீங்காத அன்பு வைத்திருக்கிறேன் என்று குலசேகரர் கூறுகிறார்.
-
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
போமெனின் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
-
(ஆ)
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
பிரிவு-3
-
அணி: உவமை அணி.
விளக்கம்: உவமை, உவமேயம், உவம உருபு இவை மூன்றும் வெளிப்படையாக அமையும்.
அணிப் பொருத்தம்:
- உவமை: வேலொடு நின்றான் இடு
- உவமேயம்: கோலொடு நின்றான் இரவு.
- உவம உருபு: போலும்
-
- கண்ணே கண்ணுறங்கு! → விளித் தொடர்
- காலையில் நீயெழும்பு! → வேற்றுமைத் தொடர்
- மாமழை பெய்கையிலே. → உரிச்சொல் தொடர்
- மாம்பூவே கண்ணுறங்கு! → விளித் தொடர்
- பாடினேன் தாலாட்டு? → வினைமுற்றுத் தொடர்
- ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! → அடுக்குத் தொடர்
-
சீர்கள் அசை வாய்பாடு நாள்தொறும் நேர் - நிரை கூவிளம் நாடி நேர் - நேர் தேமா முறைசெய்யா நிரை - நேர் - நேர் புளிமாங்காய் மன்னவன் நேர் - நிரை கூவிளம் நாள்தொறும் நேர் - நிரை கூவிளம் நாடு நேர் - நேர் தேமா கெடும் நிரை மலர்
பகுதி V
-
(அ)
- அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது.
- முதியபெண்கள் காவலுடைய ஊர்ப்பக்கம் சென்றனர்.
- வண்டுகள் ஆரவாரிக்கும் நறுமண மலர்கள்.
- நாழியில் நெல்லையும், நறுமண மலர்களையும் தெய்வத்தின் முன் தூவினர்.
- தலைவிக்காகத் தொழுது நின்றனர்.
- இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது.
- அதனை ஓர் இடைமகள் கண்டாள்.
- உன்தாய்மார், எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே என்றாள்.
- இந்த சொல் நல்ல சொல் எனக் கொண்டு தலைவியிடம் "நாங்கள் நற்சொல் கேட்டோம்" என்றனர்.
- "தலைவன் வருவான், வருந்தாதே" என்றனர்.
-
(ஆ)
இலக்கிய மன்றத் தலைவர் அவர்களே! ஆன்றோர்களே! சான்றோர்களே! வணக்கம்!
"தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள் முழவினேங்கக் குவளைக்கண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிதுபாட மருதம்வீற் றிருக்கு மாதோ"என்று மருத நிலக் காட்சியை நம் கண்முன்னே காட்டுகிறார். பாடலில் மோனை, எதுகை, இயைபு...
...நயங்கள் சேர்ந்து பாடலுக்கு அழகான சந்த நயங்களைக் கொடுத்துள்ளது.
"வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்"
இப்பாடலிலும் மோனை, எதுகை, இயைபு நயங்கள் சேர்ந்து சந்த நயங்களைக் கூட்டுகின்றன. கம்பனின் அனைத்துப் பாடல்களுமே இவ்வாறு சந்த நயங்களுடன் அமைந்துள்ளன.
-
(அ) வாழ்த்து மடல்
வடக்குத் தெரு,
அஅஅஅ,
20.09.2024.அன்புள்ள தோழனே, ராகவா!
நான் இங்கு நலம். அங்கு உன் நலம் மற்றும் அனைவர் நலனும் அறிய ஆவல்.
மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்று முதல்பரிசு பெற்றதை அறிந்தேன்; மிக்க மகிழ்ச்சி. எனது வாழ்த்துகள். நீ மேலும் வளர வாழ்த்துகள்.
இப்படிக்கு
என்றும் அன்புடன்,
ஆஆஆ.அஅஅஅ.
20.09.2024.
உறைமேல் முகவரி
கா. ராகவன்,
வடக்கு ரத வீதி,
மதுரை - 21.
-
(ஆ) விண்ணப்பம்
அனுப்புநர்:
அஅஅ,
20, ஆஆ ஊர்,
இஇஇ மாவட்டம்.பெறுநர்:
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி ஆணையம்,
இஇஇ மாநகராட்சி.ஐயா,
பொருள்: புயலில் சாய்ந்துவிட்ட மரங்கள், பழுதடைந்த சாலைகள், மற்றும் மின்கம்பங்கள் - இவற்றைச் சரிசெய்ய வேண்டுதல்.
நாங்கள் இஇஇ மாநகராட்சிக்குட்பட்ட ஆஆ ஊரில் வசித்து வருகிறோம். நேற்று ஏற்பட்ட கடும் புயலில் நிறைய மரங்கள் சாய்ந்து விட்டன. சாலைகளும் பழுதடைந்து விட்டன. மின்கம்பங்களும் சாய்ந்து விட்டன. எனவே அவற்றைச் சரிசெய்து தரும்படி பணிந்து வேண்டுகிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அஅஅஅ.ஆஆ ஊர்,
20.01.2024.
உறைமேல் முகவரி
பெறுநர்:
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி ஆணையம்,
இஇஇ, மாநகராட்சி.
-
கவினுற எழுதுதல்
மரங்களை நடுவோம்!
மாசற்ற காற்றைப் பெறுவோம்!
காற்று மாசைத் தடுப்போம்!
நோயற்ற வாழ்வைப் பெறுவோம்!
இயற்கை வளத்தைக் காப்போம்!
நல்ல காற்றை சுவாசிப்போம்.
-
(அ)
தம்பி, தொலைக்காட்சியைத் தவிர். பாடம் படி.
தங்கையே, திறன்பேசியைத் தவிர். நன்றாகப்படி.
தோழனே, காணொலி விளையாட்டைத் தவிர், நண்பர்களுடன் விளையாடு.
தோழியே, சமூக ஊடகங்களைத் தவிர். வீட்டு வேலைகளைச் செய்.
-
(ஆ) மொழி பெயர்ப்பு
மதிப்பிற்குரிய தாய்மார்களே! பெரியோர்களே!
என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நம் தமிழ் பண்பாட்டைப் பற்றிச் சில வார்த்தைகள் கூற இங்கு நான் வந்துள்ளேன். சங்க இலக்கியங்கள், தமிழர்கள் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்திருந்தவர்கள் எனக் காட்டுகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள், வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறைகளில், தமிழ்க் கலாச்சாரம் வேர் ஊன்றியுள்ளது. நம் தமிழ்ப் பண்பாடு பழமையானதாக இருந்தாலும், தொடர்ந்து மேம்படுத்தப் படுகிறது. நம் பண்பாட்டை எண்ணி, நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
பகுதி V
-
(அ) சொல்வளம்
சொல்வளம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானாலும் அவற்றுள் தமிழ் மட்டும் தலைசிறந்ததாகும். தமிழ்ச்சொல் வளத்தைப் பல துறைகளில் காணலாம். ஆனாலும் இங்கு பயிர் வகைச் சொற்கள் மட்டும் காணலாம். குறிப்பாக அடிவகை, கிளைப் பிரிவுகள், இலைவகைகள், கொழுந்துவகை, பூவின் நிலைகள், குலைவகை, கெட்டுப்போன காய்கனி வகை, மணிவகை, இளம்பயிர் வகை, என இவற்றை நோக்கும் போது தமிழ் சொல்வளம் உடையது என்பது விளங்கும்.
புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
"நாடும் மொழியும் நமதிரு கண்கள்"
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். திருந்திய மக்களைப் பிற உயிர்களினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியே. ஒரு நாட்டாரின் அல்லது ஒரு இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிய சிறந்தவழி மொழியே ஆகும். ஆகையால் நாம் இன்னும் பெருமை பெற்றுத் திகழ நுண்பாகுபாடு சொற்களையும், புதிய அறிவியல் சொற்களுக்கான கலைச்சொல் வளத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
-
(ஆ) கலைஞர் கருணாநிதி
முன்னுரை
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் ஊரில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக 1924 ஆம் ஆண்டு சூன் திங்கள் 3ம் நாள் பிறந்தார்.
போராட்டக் கலைஞர்
பள்ளி முடிந்த மாலை வேளைகளில் "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்" என்று முழங்கிய படி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினார்.
பேச்சுக் கலைஞர்
'நட்பு' என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப் பட்டது. சிறுவர் சீர்திருத்தச் சங்கம், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் ஆகியவற்றைத் தொடங்கினார்.
நாடகக் கலைஞர்
சாம்ராட் அசோகன், மணிமகுடம் எனப் பல நாடகங்கள் எழுதியுள்ளார். 'தூக்குமேடை' என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
திரைக் கலைஞர்
ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, நாம், பராசக்தி, திரும்பிப் பார், மனோகரா, ராஜாராணி, ரங்கூன் ராதா, மறக்க முடியுமா, பூம்புகார் உட்பட பல திரைக்கதை வசனங்களை அனைவரையும் வசீகரிக்கும் வகையில் எழுதியுள்ளார்.
இயற்றமிழ்க் கலைஞர்
கயிற்றில் தொங்கிய கணபதி, குறளோவியம், சித்தார்த்தன் கதை, சந்தனக் கிண்ணம், தாய்மை, பூக்குழந்தை, ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே இரத்தம், நெஞ்சுக்கு நீதி, சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, போன்ற பல படைப்புகளையும் இயற்றியுள்ளார்.
முடிவுரை
கலைஞர் 2018 ஆம் ஆண்டு சூலைமாதம் 7ம் நாள் தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் களவியமானார்.
-
(அ) அன்னமய்யா கதை
- ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு அன்னமய்யா வந்தாள்.
- கிட்டே வந்து பார்த்தால் அவன் ஒரு வாலிபன்.
- தண்ணீர் வேண்டுமென்றான்.
- ஒரு வேப்பமரத்தின் அடியில் மண்கலயங்கள்.
- அன்னமய்யா கலயத்தின் மேலுள்ள சிரட்டையை எடுத்துச் சுத்தப்படுத்தினாள்.
- அதில் நீத்துப் பாகத்தை ஊற்றி அவனிடம் கொடுத்தான்.
- அதை அவன் உறிஞ்சும் போதே கண்கள் செருகின.
- சோற்றின் மகுளியையும் வார்த்துக் கொடுத்தான்.
- அனுபவிப்பின் குரல் அவனிடமிருந்து வந்தது.
- வேப்ப மரத்தின் அடியில் அயர்ந்து தூங்கினான்.
- வந்தவளுக்கு ஒரு நிறைவு.
- கொடுத்தவனுக்கும் ஒரு நிறைவு.
(ஆ) மேரி
- அந்த மாளிகை பென் வில்ஸனுடையது.
- மற்றொரு சிறிய வீட்டிற்குள் மேரி நுழைந்திருந்தாள்.
- அங்கு ஒரு புத்தகத்தை மேரி எடுத்தாள்.
- 'புத்தகத்தை என்னிடம் கொடு, நீ இதை எடுக்கக் கூடாது', 'உன்னால் படிக்க முடியாது' என்று வெடுக்கென்று பிடுங்கினாள் ஒரு சிறுமி.
- மேரி மனம் கசந்தாள், படிக்கவும் நினைத்தாள்.
- ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.
- மிஸ் வில்ஸன் மூலம் பட்டப் படிப்பு முடித்தாள்.
- மேல் படிப்பிற்காக டவுனுக்கும் போனாள்.
- அவளுடன் பெரிய கூட்டமே பின்தொடர்ந்தது.
- வாழ்த்தொலிகள் பெருகின.
- இரயில் வேகமெடுத்தது.
-
(அ) விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை
"அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய பாரதநாட்டின் இரு கண்கள்,"விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். உலகமும் போற்றும் அளவுக்கு விண்வெளியில் மிகச்சிறந்த சாதனை செய்துள்ளார்.
பிறப்பு
"மங்கையராய்ப் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டுமம்மா"
இந்தியாவின் ஹரியானாவில் கர்னலில் சூலை 1, 1961 ஆம் ஆண்டு பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி இவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.
கல்வி
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.
விண்வெளிப் பயணம்!
"வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலம் முழுதும் கண்டு தெளிவோம்"
இந்திய கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87ல் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்தார். வெற்றிகரமாகப் பூமி திரும்பினர்.
மரணம்
சனவரி 16, 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் 107 விண்வெளி சென்றது. பணியை முடித்துப் பூமிக்குத் திரும்பும் போது விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உட்பட அனைவரும் பலியாகினர்.
முடிவுரை
நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் நாள் இவரின் நினைவு தினமாகக் கொண்டாடப் படுகிறது. சாதனைப் பெண்களுக்கு தமிழக அரசின் "கல்பனா சாவ்லா" விருது வழங்கப் படுகிறது.
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று."
-
(ஆ) கலைத்திருவிழா சென்று வந்த நிகழ்வு
முன்னுரை
கலை நிகழ்ச்சிகள் கண்ணுக்குக் குளுமையும் மனதிற்கு மகிழ்ச்சியும் தரக்கூடியது. அத்தகைய கலைத் திருவிழா பற்றி இங்கு காணலாம்.
அறிவிப்பு
கலைத்திருவிழா அறிவிப்பு வந்ததும் பள்ளி முழுவதும் விழாக்கோலம் கொண்டது, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட போட்டிகள். ஆளாளுக்கு ஒவ்வொரு போட்டியில் சேர்ந்தோம். ஆடல், பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பரதநாட்டியம், தனி நடனம், குழு நடனம், எனப்பல வித நடனப் போட்டிகள்.
போட்டிகள்
பள்ளி அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொண்டோம். நான்கு சீருந்து வாகனம் அமர்த்தி எங்கள் தலைமையாசிரியர் எங்களை தலைநகருக்கு அனுப்பி வைத்தார். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் போட்டிக்குத் தயாரானோம். நான் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றேன்.
எனது அணுபவம்
அனைத்துப் பள்ளிகளில் மாநிலப் போட்டிக்குத் தேர்வான பிற மாணவர்களுடன் நானும் சென்றேன். சென்னைக்கு இரயில் பயணம் செய்தோம். புது அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சென்னை பிரம்மாண்டமாக இருந்தது. போட்டியில் நான் வெற்றி பெற்றேன். பரிசுகளும், சான்றிதழும், வெளிநாடு சுற்றுலா வாய்ப்பும் பெற்றேன்.
முடிவுரை
கலைத்திருவிழா, அடையாளம் தெரியாத எம்போன்ற மாணவர்களை அடையாளம் காட்டியது.
4D. நூலக உறுப்பினர் படிவம்
திருநெல்வேலி மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய / கிளை / ஊர்ப்புற நூலகம்: பாரதிநகர்
உறுப்பினர் சேர்க்கை அட்டை
நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ.50, சந்தா தொகை ரூ.50 ஆக மொத்தம் ரூ.100 ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.