காலாண்டுப் பொதுத் தேர்வு - 2024-25
தமிழ்
குறிப்புகள் :
i) இவ்வினாத்தாள் ஐந்து 'பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I (மதிப்பெண்கள்:15)
i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினைச் சேர்த்து எழுதவும்.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதுக. (15X1=15)
1. 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ________.
2. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ________.
3. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
4. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
5. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?
6. பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
7. அருந்துணை என்பதைப் பிரித்தால் ________.
8. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி, மருளை அகற்றி மதிக்கும் தெருளை” - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
9. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ________.
10. தமர் -பொருள் தருக.
11. வாரா - இலக்கணக்குறிப்பு தருக.
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி. (12,13,14,15)
12. இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் எது?
13. இப்பாடலின் ஆசிரியர் யார்?
14. மயலுறுத்து - பொருள் தருக.
15. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடிமோனைச் சொற்கள்
பகுதி - II (மதிப்பெண்கள்:18)
பிரிவு - 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (4X2=8)
வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
16. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பலதாறு வாழைப் பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன. - மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
17. விடைகளுக்கேற்ற வினா அமைக்க.
அ) ஓர் நல்ல மொழிப்பெயர்ப்பாளன் சில மொழி மீறல்களைச் செய்வான்.
ஆ) எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்ட அதன்மீது அளவற்ற நம்பிக்கை கொண்டவர் கலைஞர்.
18. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
19. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
20. “கரப்பிடும்பை இல்லார்” - இத்தொடரின் பொருள் கூறுக.
21. “கண்” என முடியும் திருக்குறளைப் பிழையின்றி எழுதுக. (கட்டாய வினா)
பிரிவு - 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5X2=10)
22. ‘எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத் தொடரானது. ‘சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்?
23. எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
அ) எறும்பு தன் கையால் எண்சாண்
ஆ) ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி.
24. வருக - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
25. பழமொழிகளை நிறைவு செய்க.
அ) ஒரு பானை ________ ஆ) அளவுக்கு ________.
26. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ) கொடு - கோடு ஆ) விதி - வீதி
27. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
அ) இன்சொல் ஆ) மலை வாழ்வார்
28. கலைச்சொல் தருக.
அ) Conversation ஆ) Consonant
பகுதி - III (மதிப்பெண்கள்:18)
பிரிவு - 1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2X3=6)
29. உரைப்பத்தியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
வினாக்கள்:
அ) விருந்தினர் என்போர் யாவர்?
ஆ) விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?
இ) இவ்வுரைப் பத்திக்கு பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
30. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்----- முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றி பேசினால் கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
31. தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.
பிரிவு - 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2X3=6)
வினா எண் 34-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு கட்டுவன யாவை?
33. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருத்துவதைக் குறள்வழி விளக்குக.
34. (கட்டாய வினா)
அ) 'வெய்யோனொளி' எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலைப் பிழையின்றி எழுதுக. (அல்லது)
ஆ) 'சிறுதாம்பு' எனத் தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலைப் பிழையின்றி எழுதுக.
பிரிவு - 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2X3=6)
35. அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். - இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
36. ‘வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு’ - இக்குறளில் வரும் அணியினைச் சுட்டி விளக்கம் தருக.
37. ‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’ - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
பகுதி - IV (மதிப்பெண்கள்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளி. (5X5=25)
38. அ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
(அல்லது)
ஆ) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
39. அ) மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41. நிறைமதி என்பவர் விழுப்புரம் மாவட்டப் நெடி ஊரில் உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினாராகச் சேர்வதற்குச் சென்றுள்ளர். தேர்வர் தன்னை நிறைபதியாகப் பாவித்து கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படிவத்தினை நிரப்புக.
42. அ) புயலின்போது செயல்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றுள், ஐந்தினை எழுதுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க.
பகுதி - V (மதிப்பெண்கள் - 24)
அனைத்து வினாக்களுக்குப் விரிவான விடையளிக்கவும். (3X8=24)
43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரை குறிப்புகளை எழுதுக.
(அல்லது)
ஆ) நிகழ்கலை வடிவங்கள் - அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் - சிறப்பும் பழமையும் - இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் - அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன - இவை குறித்து நாளிதழ் ஒன்றின் தலையங்கம் எழுதுக.
44. அ) உரைநடையின் அணிநலன்களை உம் சொந்த நடையில் எழுதுக.
(அல்லது)
ஆ) ‘உனக்குப் படிக்கத் தெரியாது' என்னும் தொடர் மேரிஜேன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தினைப் ‘புதிய நம்பிக்கை’ என்னும் சிறுகதையின் வழிநின்று விளக்குக.
45. அ) குமரிக்கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்த்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்ணைக்கு பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து அந்தாதி கூறி, கோவை அணிவித்து சிற்றிலக்கியங்களை எல்லாம் அணியாகப் பூட்டி, அழகு கூட்டி அகம்மிக மகிழ்ந்தனர். செந்நாப்புலவர்கள். - இக்கருத்தைக் கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.
(அல்லது)
ஆ) கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
(குறிப்புகள் : முன்னுரை, நீரின்றி இயங்காது உலகம், நீர்ப்பற்றாக்குறைக்குக் காரணம், சேமிக்கும் முறைகள், மழைநீர் சேகரிப்புத் தொட்டி, மழைநீரின் பயன்கள், மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! - முடிவுரை.)
காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 திருப்பத்தூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 (15X1=15)
| வினா எண் | விடைக்குறிப்புகள் | மதிப்பெண் |
|---|---|---|
| 1. | அ. வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் | 1 |
| 2. | அ. வேற்றுமை உருபு | 1 |
| 3. | இ. 3,1,4,2 | 1 |
| 4. | ஈ. இலா | 1 |
| 5. | ஆ. இறைவனிடம், குலசேகராழ்வார் | 1 |
| 6. | ஈ. வானத்தையும் பேரொலியையும் | 1 |
| 7. | அ. அருமை + துணை | 1 |
| 8. | இ. கல்வி | 1 |
| 9. | இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் | 1 |
| 10. | ஈ. உறவினர் | 1 |
| 11. | ஈ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | 1 |
| 12. | இ. காற்றே வா | 1 |
| 13. | அ. பாரதியார் | 1 |
| 14. | இ. மயங்கச்செய் | 1 |
| 15. | இ. மகரந்த - மயலுறுத்து | 1 |
பகுதி-2
பிரிவு-1 (4X2=8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
சரியான தொடர்கள்:
- 'ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன'
- 'ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.'
பிழை: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது.
பொருந்திய வினாத்தொடரைச் சரியாக இருப்பின் மதிப்பெண் வழங்குக.
வாருங்கள், நலமா?, நீர் அருந்துங்கள்
இயந்திரமனிதன், செயற்கைக்கோள்
'பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைச் செய்யாதவர்' என்பது பொருள்.
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
பிரிவு-2 (5X2=10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
சிரித்து சிரித்துப் பேசினார்
அ. அ ஆ. க00
வருக - வா(வரு) + க
- வா – பகுதி
- வரு எனத் திரிந்தது விகாரம்
- க – வியங்கோள் வினைமுற்று விகுதி
அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆ. மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
பொருந்திய விடையைச் சரியாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.
அ. பண்புத்தொகை ஆ. வேற்றுமைத்தொகை
அ. உரையாடல் ஆ. மெய்யெழுத்து
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 (2X3=6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
அ. முன்பின் அறியாத புதியவர் ஆ. விருந்தே புதுமை இ. விருந்து
- உயிராய் நான் : மழையாய் நான்
- நானின்றி பூமியே சுழலாது
- பூமித்தாயின் குருதி நான்.
- ✓ தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்
- ✓ மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்
- ✓ 2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்
பிரிவு-2 (2X3=6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
- ✓ அழகான அன்னை மொழி
- ✓ பழமையான நறுங்கனி
- ✓ பாண்டியன் மகள்
- ✓ சிறந்த நூல்களை உடைய மொழி
- ✓ பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி
- ✓ தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.
- ✓ மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.
அ.
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதோ ரழியாவழ குடையான்.
ஆ.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்" என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்
பிரிவு-3 (2X3=6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க
அறிதல்-அறியாமை, புரிதல்-புரியாமை, தெரிதல்-தெரியாமை, பிறத்தல்-பிறவாமை.
இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது
அணி இலக்கணம்:
உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது உவமை அணி
விளக்கம்:
மக்களிடம் வரி வாங்குவது அரசன் வழிப்பறி செய்வதற்குச் சமம்.
அணிப்பொருத்தம்:
உவமை - வழிப்பறி செய்பவன், உவமேயம் - அரசன் வரி வாங்குவது, உவம உருபு - போலும்.
ஆற்றுநீர்ப் பொருள்கோள் - தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது.
பகுதி-4 (5X5=25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளி
அ. மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:
- ✓ கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.
- ✓ அதற்குத் தென்னாடு நெற்றியாகவும், தமிழகம் திலகமாகவும் உள்ளது.
- ✓ திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.
- ✓ அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.
பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:
- ✓ அழகான அன்னை மொழி
- ✓ பழமையான நறுங்கனி
- ✓ பாண்டியன் மகள்
- ✓ சிறந்த நூல்களை உடைய மொழி
- ✓ பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.
(அல்லது)
ஆ.
- ✓ மேகம் மழையைப் பொழிகிறது
- ✓ திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.
- ✓ கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.
- ✓ இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.
- ✓ தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்.
அ. வாழ்த்து மடல்
அன்புள்ள நண்பா/தோழி,
நலம் நலம் அறிய ஆவல். திருச்சியில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன். அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உனது அன்பு நண்பன்,
ம.மகிழினியன்.
உறைமேல் முகவரி:
க. இளவேந்தன்,
86, மருத்துவர் நகர்,
சேலம்-2.
ஆ)
அனுப்புநர்
அ.எழில்வேந்தன்,
12, கம்பர் தெரு,
அரக்கோணம்.
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
ஆணையர் அலுவலகம்,
அரக்கோணம்.
ஐயா,
பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.
வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன். அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது. அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
அ.எழில்வேந்தன்.
இடம்: அரக்கோணம்,
நாள்: 08-01-2022.
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.
தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக.
அ)
- தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.
- குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.
- உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.
- நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.
- வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.
ஆ)
மரியாதைக்குரியவர்களே. என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.
பகுதி-5 (3X8=24)
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:
அ) தமிழ்ச்சொல் வளம்:
- தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.
- திராவிட மொழிகளில் மூத்தது.
- பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.
- பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.
தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:
- மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.
- தொழில்நுட்ப உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.
- மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம், பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.
(அல்லது)
ஆ. பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக
அ. பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக
(அல்லது)
ஆ)
- ✓ அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும். இவ்வறிவால் கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.
- ✓ கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை. ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.
- ✓ வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.
- ✓ மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.
- ✓ கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன். நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.
அ) முன்னுரை:
உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ். சிறந்த இலக்கிய, இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
முச்சங்கம்:
பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.
சிற்றிலக்கியங்கள்:
96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார். பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன. அவற்றுள் பிள்ளைத்தமிழ், சதகம், பரணி, கலம்பகம், உலா, அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.
காலந்தோறும் தமிழ்:
சங்க காலம் தொடங்கி, பல்லவர் காலம், சேரர் காலம், சோழர் காலம் முதலான கால கட்டங்களில் பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.
முடிவுரை:
இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. (அல்லது)
ஆ) மழைநீர் சேமிப்பு
முன்னுரை
"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது."
என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப மழையே இந்த உலக உயிர்கள் செழித்து வாழ்வதற்கு முதன்மையான காரணமாக அமைகிறது. இத்தகைய உயிர்த்துளிகளைச் சேமிக்கும் முறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நீரின்றி இயங்காது உலகம்
ஓரறிவு உயிரான புல் முதல் ஆறறிவு உயிரான மனிதன் வரையில் அனைத்து உயிர்ளும் வாழ்வதற்கு நீரே அடிப்படை. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின்படி உயிரினங்கள் தோன்றியதே நீரில்தான். நீர் இல்லையெனில் உழவுமில்லை; உணவுமில்லை. வள்ளுவரின் 'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை' என்னும் குறள் நீரின் அவசியத்தை உணர்த்தும்.
நீர்ப்பற்றாக்குறைக்குக் காரணம்
மனிதன் தன் தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தி வீணாக்குவதாலும் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதாலும் மரங்களை வெட்டியதன் விளைவால் வந்த மழைப்பொழிவு குறைவினாலும் நீரிநிலைகள் ஆக்கரமிப்பாலும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
சேமிக்கும் முறைகள்
நீருக்கு ஆதாரமாக் விளங்கக்கூடிய குளம், ஏரி, ஆறு முதலிய நீர்நிலைகளை ஆழப்படுத்தி மழைநீரைச் சேமிக்கலாம். அந்நீர்நிலையைச் சுற்றிலும் மரங்களை நட்டு நீராவிப் போக்கினைத் தடுப்பதோடு மழைவளமும் பெறலாம்.
மழைநீர் சேமிப்புத் தொட்டி
நம் வீடுத்தேடிவரும் விருந்தினரான மழையினை வீணாக்காமல் மழைநீர் சேகரிப்புத் தொட்டியினை அமைத்து, மழைநீரினைச் சேகரிக்கலாம். மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பது மிக எளிது. குறிப்பிட்ட ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி அதில் மணல் மற்றும் சிறு கல்துண்டுகளைப் பாதியளவு நிரப்பு, வான்மழை வந்து சேரும்வண்ணம் வழி அமைத்தால்
மழைநீர்ச் சேகரிப்புத்தொட்டி தயாராகிவிடும்.
மழைநீரின் பயன்கள்
உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமான உணவினை உருவாக்கிக் கொடுப்பதோடு தானும் உணவாகும் தன்மை உடையது மழை. மேலும், உலகிற்கு உணவினை வழங்கும் பயிர்த்தொழில் செழிப்பதும் இம்மழையால்தான். 'ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்' என்னும் குறள் மழைநீரின் பயனை விளக்குகிறது.
மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்!
மரமில்லையேல் மழையில்லை என்பதை உணர்ந்து மழை வளத்திற்குக் காரணமான மரங்களை அழியாமல் காப்பதோடு, மரக்கன்றுகளை வீடுதோறும் வீதிதோறும் நட்டு மழை வளம் பெறுவோம்.
முடிவுரை
"யாசிக்கும் பூமிக்கு வானம் வழங்கும் வைரக் காசுகள்தான் மழை'. வைரத்தைக் காப்பதுபோல மழையினைச் சேமித்துப் பாதுகாத்து உலகினை வளம்பெற செய்வோம்!