Katchiyai Kandu Kavinura Ezhuthuga Answer Key | Chapter 4 | Technology Addiction

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக - தொழில்நுட்ப அடிமை

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 4

தொழில்நுட்பத்திற்கு அடிமையான மனிதன்

தலைப்பு: தொழில்நுட்ப அடிமை

கிரகாம்பெல் கண்ட அற்புத விளக்கு!

மார்ட்டின் கூப்பரின் மந்திர விளக்கு!

பேஜ் பிரினின் கூகுள் தேடல்...

சூக்கர் பெர்கின் முகநூல் நட்பு...

ஆக்டன்- கௌமின் புலனப் பார்வை ...

ஆளை மயக்கும் ஆண்ட்ராய்டு பதிப்பு..!

ஆட் கொண்டதில் இல்லையே வியப்பு..!

ஆசை உறவை அலைபேசியில் கண்டாய்!

படிப்பும் பணியும் கைபேசியில் முடித்தாய்!

தொழில்நுட்பத் தொல்லையில் தொலைந்தேன் போனாய்?!

தொடுதிரை உலகில் அடிமை ஆனாய்..!

தொலைபேசியைக் கண்டறிந்தவர், அலெக்சாண்டர் கிரகாம்பெல்.

அலெக்சாண்டர் கிரகாம்பெல்

செல்போனைக் கண்டறிந்தவர் மார்ட்டின் கூப்பர்.

மார்ட்டின் கூப்பர்

கூகுளைக் கண்டறிந்தவர்கள் லாரி பேஜ், செர்ஜி பிரின்

லாரி பேஜ் செர்ஜி பிரின்

முகநூலைக் கண்டறிந்தவர் மார்க் ஸுக்கர்பெர்க்.

மார்க் ஸுக்கர்பெர்க்

புலனத்தைக் கண்டறிந்தவர்கள் ஜன் கௌம், பிரையன் ஆக்டன்

பிரையன் ஆக்டன் ஜன் கௌம்

தொழில்நுட்பத் தொல்லையில் மறைந்து ஏன் போனாய்- ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவை, நமது கவனத்தைத் திசை திருப்பி, நம்மை ஆசையில் விழவைத்து, நாம் அதில் மறைந்து போகின்றோம். அவ்வாறு 'தொழில்நுட்பத் தொல்லையால்' நம்மை நாம் இழப்பது தவறு. 'அது' தவறு என்று கேள்வி எழுப்பப்படுகிறது.