10th Std Tamil Quarterly Exam Answer Key 2024 | Thanjavur District

Class 10 Tamil Quarterly Exam Question Paper 2024

காலாண்டுத் தேர்வு - 2024

10 - ஆம் வகுப்பு தமிழ்

காலம் : 3.00 மணி மதிப்பெண்கள் : 100
Tamil Question Paper Page 1

பகுதி - I (மதிப்பெண்கள்: 15)

அ) சரியான விடையைத் தேர்வு செய்க (15 x 1 = 15)

1.மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது _______.

  • அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
  • ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
  • இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
  • ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2.முறுக்கு மீசைவந்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

  • அ) பண்புத்தொகை
  • ஆ) உவமைத் தொகை
  • இ) அன்மொழித் தொகை
  • ஈ) உம்மைத் தொகை

3.பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

  • அ) வானத்தையும் பாட்டையும்
  • ஆ) வானத்தையும் புகழையும்
  • இ) வானத்தையும்
  • ஈ) வானத்தையும் பேரொலியையும்

4.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

  • அ) துலா
  • ஆ) சீலா
  • இ) குலா
  • ஈ) இலா

5.அருந்துணை என்பதைப் பிரித்தால் _______.

  • அ) அருமை + துணை
  • ஆ) அரு + துணை
  • இ) அருமை + இணை
  • ஈ) அரு + இணை

6.“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” - பாடல் வரி இடம் பெறும் நூல் எது?

  • அ) புறநானூறு
  • ஆ) நற்றிணை
  • இ) குறுந்தொகை
  • ஈ) அகநானூறு

7.ஓரெழுத்தில் சோலை இரண்டெழுத்தில் வனம்.

  • அ) காற்று
  • ஆ) புதுமை
  • இ) காடு
  • ஈ) நறுமணம்

8.நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _______.

  • அ) 105
  • ஆ) 100
  • இ) 175
  • ஈ) 583

9.'மலர்கள் தரையில் நழுவும்'. எப்போது?

  • அ) அள்ளி முகர்ந்தால்
  • ஆ) தளரப் பிணைத்தால்
  • இ) இறுக்கி முடிச்சிட்டால்
  • ஈ) காம்பு முறிந்தால்

10.கலைஞரின் கதை வசனங்களில் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிய படம் _______.

  • அ) பராசக்தி
  • ஆ) அரசிளங்குமரி
  • இ) பாசப் பறவைகள்
  • ஈ) மருதநாட்டு இளவரசி

11.“இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது _______ வினா. “அதோ, அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது _______ விடை.

  • அ) ஐய வினா, வினா எதிர் வினாதல்
  • ஆ) அறிவினா, மறை விடை
  • இ) அறியா வினா, சுட்டு விடை
  • ஈ) கொளல் வினா, இனமொழி விடை
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-
“அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி,
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி,
அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே.”

12.பாடல் இடம் பெற்ற நூல்

  • அ) காசிக்காண்டம்
  • ஆ) முல்லைப்பாட்டு
  • இ) மலைபடுகடாம்
  • ஈ) சிலப்பதிகாரம்

13.பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

  • அ) அவண், அலங்கு
  • ஆ) அன்று, கன்று
  • இ) சேந்த, சிலம்பு
  • ஈ) அல்கி, போகி

14.'அசைஇ' - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு

  • அ) வினைத்தொகை
  • ஆ) பண்புத்தொகை
  • இ) சொல்லிசை அளபெடை
  • ஈ) செய்யுளிசை அளபெடை

15.'சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி' - இவ்வடியில் 'பாக்கம்' என்னும் சொல்லின் பொருள்

  • அ) சிற்றூர்
  • ஆ) பேரூர்
  • இ) கடற்கரை
  • ஈ) மூதூர்

பகுதி - II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு - 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க (4x2=8)
(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்)
16.விடைக்கேற்ற வினா அமைக்க
அ. பாரதியார் நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றார்.
ஆ. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் என்று கூறியவர் ஒளவையார்
17.வசனகவிதை - குறிப்பு வரைக.
18.‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
19.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
20.வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
21.‘தரும்’ - என முடியும் குறளை எழுதுக.

பிரிவு - 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் (5×2=10)
22.“எழுது என்றாள்” என்பது விரைவு காரணமாக “எழுது எழுது என்றாள்” என அடுக்குத் தொடரானது. “சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
23.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் - இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
24.பகுபத உறுப்பிலக்கணம் தருக: அமர்ந்தான்
25.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
26.வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
அ. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
ஆ. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
27.எண்ணுப் பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
அ. நாற்றிசையும் செல்லாத நாடில்லை
ஆ. எறும்புந்தன் கையால் எண் சாண்
குறிப்பு:- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: கூட்டப்பெயர்களை எழுதுக.
அ) கல் ஆ) பழம்
28.தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
அ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
ஆ. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

பகுதி - III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு - I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க (2×3=6)
29.“புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது” - இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
30.ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகிறேன். இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகின்றேன். இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை தானே! இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன். இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
அ) வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலம் எது?
ஆ) இந்தியாவின் முதுகெலும்பு எது?
இ) இந்தியாவிற்கு தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது?
31.தமிழ் மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.

பிரிவு - II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும் (2×3=6)
(34-ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்)
32.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
33.“மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உள்ள உவமை சுட்டும் செய்திகளை விளக்குக.
34.அ) “வாளால் அறுத்து” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி அடிமாறாமல் எழுதுக.
(அல்லது)
ஆ) “விருந்தினனாக” எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.

பிரிவு - III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க (2×3=6)
35.தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.
36.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
37.தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.

பகுதி - IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க (5×5=25)
38.அ) வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
(அல்லது)
ஆ) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
39.மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40.படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
Cartoon depicting a person cutting a branch they are sitting on
41.பழனிச்சாமி தன் தந்தை மாதேசன் அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் பழனிச்சாமியிடம் ரூ.300ம், 15, சிலம்பு நகர், கண்ணகி தெரு, சேலம் மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். மைய நூலகத்திற்குச் சென்ற பழனிச்சாமியாக தேர்வர் தன்னைக் கருதி கொடுக்கப்பட்ட உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42.அ) புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
(அல்லது)

ஆ) மொழிபெயர்க்க:-

Respected ladies and gentleman. I am Ilangoavan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. tamil culture is rooted in the life styles of tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.
குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
  1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
  2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
  3. பெய்த மழை - இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
  4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கையாது?
  5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

பகுதி - V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க (3×8=24)
43.அ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தினையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சினை ஒன்றினை உருவாக்குக.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
44.அ) “அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்” என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
(அல்லது)
ஆ) “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
45.அ) “விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்“ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.
10th Std Tamil Quarterly Exam Answer Key 2024 | Thanjavur District

காலாண்டுத்தேர்வு - தஞ்சாவூர் மாவட்டம் 2024

பத்தாம் வகுப்பு - தமிழ்

விடைக்குறிப்பு

பகுதி - I (மதிப்பெண்கள்: 15)
  • 1) அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்
  • 2) இ.அன்மொழித்தொகை
  • 3) ஈ. வானத்தையும் பேரொலியையும்
  • 4) ஈ. இலா
  • 5) அ. அருமை + துணை
  • 6) ஆ.நற்றணை
  • 7) இ. காடு
  • 8) அ.105
  • 9) ஆ.தளரப்பிணைந்தால்
  • 10) இ.பாசப்பறவைகள்
  • 11) இ. அறியா வினா, சுட்டு விடை
  • 12) இ. மலைபடுகடாம்
  • 13) ஆ. அன்று, கன்று
  • 14) இ.சொல்லிசை அளபெடை
  • 15) அ.சிற்றூர்
பகுதி - II (வினா-விடை)

16) அ. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றவர் யார் ?

ஆ. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று கூறியவர் யார்?

17) கவிதையும் உரைநடைநடையும் இணைந்து யாப்புக்கட்டுகளுக்கு அப்பாற்பட்ட கவிதை வடிவம்.

18) நெய்யில் வருத்த மாமிசத்தையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுங்கள்.

19). கல்வியே அறிவை சீராக்கும் ; கல்வியே அருளைப் பெருக்கும்.

20) எ.கா : செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

  • 1. கட்டுமான தொழிலாளர்கள் .
  • 2 எரிபொருள் நிலையங்கள்.

21) அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

22) சிரித்து சிரித்துப் பேசினார் - உவகையின் காரணமாக அடுக்குத்தொடர்.

23) உறுதித்தன்மையை நோக்கி காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

24) அமர் + த் (ந்) + த் + ஆன் - அமர் - பகுதி, த் - சந்தி (ந் ஆனது விகாரம்) த் - இறந்தகால இடைநிலை ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.

25) நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

26) அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஆ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

27). அ. ச ஆ. அ

28) அ. பசுமையான மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

ஆ. உயர்கல்வியே ஒருவற்கு உயர்வு தரும்.

29)

  • 1. வயலில் நெல் நாற்று நட்டேன்.
  • 2. மாங்கன்று வாங்கி நட்டேன் .
  • 3. தென்னம்பிள்ளை வாங்கி வந்தேன்.
  • 4. காட்டில் பனை மடலியைப் பார்த்தேன்.

30) அ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை

ஆ. வேளாண்மை

இ. எழுபது விழுக்காடு

பகுதி - III (விரிவான விடைகள்)

31) கலைஞர் பங்களிப்பு

கலைஞர் தமிழக முதல்வராக இருந்தபோது மனோன்மணியம் சுந்தரனாரின் நீராருங் கடலுடுத்த என்னும் பாடலை அரசு விழாக்களில் தொடக்கப்பாடலாகப் பாடுவதற்கு வழிவகுத்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை எனப் புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்குத் தமிழறிஞர் ஒருவரையே அமைச்சராக்கினார். 2010 ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தினார்.

32) தமிழ் - கடல் ஒப்பீடு

தமிழ் :

  1. இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
  2. முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது .
  3. ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
  4. சங்கப் பலகையில் அமர்ந்து புலவர்கள் காத்தனர்.

கடல் :

  1. முத்தினைத் தருகிறது.
  2. மூன்று சங்குகளைத் தருகிறது .
  3. வணிக்கக்கப்பல்களை உடையது.
  4. அலைகளால் சங்கினைத் தடுத்து காக்கிறது.

33) மருத்துவர் செயல்

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.

34) அ. பாடல்

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா ! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

35) இலக்கணக் குறிப்பு

  • ஆடு மாடுகளுக்கு - உம்மைத்தொகை, ஆடுகளுக்கும் மாடுகளுக்கும்
  • பூங்கொடி - உவமைத்தொகை. பூப் போன்ற கொடி
  • குடிநீர் - வினைத்தொகை. குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் .
  • குடிநீர் நிரப்பினாள் - இரண்டாம் வேற்றுமைத் தொகை. குடிநீரை நிரப்பினாள்

36) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

ஆற்றுநீர்ப் பொருள்கோள் இப்பாடலில் அமைந்துள்ளது.

ஆற்றில் நீர் தொடர்ச்சியாக ஓடுவதைப் போல, பாடலின் பொருள் தொடக்கம் முதல் முடிவு வரை நேராக பொருள்கொள்ளும் வகையில் அமைதல் ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும் .

பகுதி - IV (அணி மற்றும் கடிதம்)

37) தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

38) அ. குமரகுருபரர் ஆடல்

திருவடியில் உள்ள கிண்கிணிகளொடு செம்பொன் ஆடுகிறது. இடுப்பில் உள்ள அரைவடங்கள் ஆடுகின்றன. பசும்பொன் தொந்தியுடன் சிறுவயிறு ஆடுகிறது. நெற்றிப் பொட்டுடன், சுட்டி ஆடுகிறது. காதில் குண்டலமும், குழைகளும் ஆடுகின்றன இவற்றுடன் அழகிய பவளம்போன்ற திருமேனி ஆடுகிறது.

39) புகார் கடிதம்

அனுப்புநர் :
சே.இராமன்,
101/22, தெற்குரத வீதி,
அஅஅஅஅ.

பெறுநர் :
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு ஆணையம்,
ஆஆஆஆ.

ஐயா,

பொருள் : உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கடிதம்.

வணக்கம், இன்று காலை மேலவீதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காலை உணவு சாப்பிட்டேன். அவ்வுணவு தரம் இல்லாமலும் விலை அதிகமாகவும் இருந்தது. அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். எனவே அந்த உணவு விடுதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இடம் : அஅஅஅஅ.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
சே.இராமன்

பகுதி - V (விண்ணப்பம் மற்றும் கட்டுரைகள்)

40) கவிதை

பொருத்தமான கருத்தைக் கவினுற எழுதியிருப்பின் முழுமதிப்பெண்.

41) நூலக உறுப்பினர் படிவம்

சேலம் மாவட்ட நூலக ஆணைக்குழு

உறுப்பினர் எண் : 112114

அட்டை எண் : 0087

  1. பெயர்: பழனிச்சாமி
  2. தந்தை பெயர்: மாதேசன்
  3. பிறந்த தேதி: 16-03-2008
  4. வயது: 14
  5. படிப்பு: பத்தாம் வகுப்பு
  6. தொலைபேசி எண்: 9443740120
  7. முகவரி: 15, சிலம்பு நகர், கண்ணகி தெரு, சேலம் மாவட்டம்.

காப்புத்தொகை: 200, சந்தா தொகை: 100, மொத்தம்: 300

தங்கள் உண்மையுள்ள,
(பழனிச்சாமி)


உறைமேல் முகவரி :

பெறுநர் :
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு ஆணையம்,
ஆஆஆஆ.

42) பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை

பாதுகாப்பான இடத்திற்குச் செல்வேன். தேவையான உணவுப்பொருட்களை வைத்திருப்பேன். மின்சார சாதனங்களைத் துண்டிப்பேன். குடிநீரைப் போதுமான அளவு வைத்திருப்பேன்.

43) அ. மனோன்மணியம் சுந்தரனார்

  1. பூமி என்ற பெண் நீராலான கடலை ஆடையாகக் கொண்டு விளங்குகின்றாள் என்கிறார்.
  2. அழகிய முகமாக பாரதக் கண்டம் திகழ்கிறது. முகத்திற்கு பிறைநிலவு போன்ற நெற்றியாக தக்காணபீடபூமி அமைந்துள்ளது.
  3. நெற்றியில் நறுமணமிக்க பொட்டு வைத்தது போல் தமிழகம் உள்ளது. பொட்டின் மணம் எல்லோரையும் இன்புறச் செய்வது போல் எல்லாத் திசைகளிலும் புகழ் பெற்றவளாக தமிழ்த்தாய் இருக்கிறாள்.
  4. உலகின் மூத்த மொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாகி இருக்கிறாள். தனிச்சிறப்பும் தமிழ் மொழியின் வளம் பெருகுகின்றதே தவிர குறையவில்லை. இத்தனைப் புகழுடைய தமிழே! தமிழாகிய பெண்ணே ! தாயே! உன்னை வாழ்த்துகிறேன்.

ஆ. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  1. கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்த அரசாண்ட மண்ணுலகப் பேரரசு என்கிறார்.
  2. அழகாய் அமைந்த செந்தமிழ் பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி, பாண்டிய மன்னனின் மகள் திருக்குறளின் பெருமைக் குரியவள்.
  3. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, நிலைத்த சிலப்பதிகாரம், அழகிய மணிமேகலையாக புகழ் பெற்று விளங்குகிறாள்.
  4. பழம் பெருமையும் தனக்கெனத் இலக்கிய வளமும் கொண்டது. வேற்று மொழியார் கூட தமிழைப்பற்றி உரைத்த புகழுரை பெரிய பற்றுணர்வை எழுப்புகின்றன என்று பாவலரேறு பாடுகிறார்.

44) கட்டுரை: மேரி மெக்லியோட் பெத்யூன்

முன்னுரை:
வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள்; சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். பலரின் பயணங்களுக்கு வழி வகுக்கிறார்கள்; கல்வி அறிவற்ற இச்சமூகத்தில் ஒற்றைச் சுடராக வந்து ஓராயிரம் விளக்கினை ஏற்றிய மேரியின் வாழ்க்கையோடு என் கருத்தையும் இங்கு விளக்க உள்ளேன்.

மேரியின் குடும்பமும் இளமையும் :
மேரி, தந்தை சாம், தாய் பாட்ஸி, பாட்டி, பல சகோதர சகோதரிகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பமாகும். காலை முதல் மாலை வரை கடுமையாக உழைக்கும் குடும்பம் ஆகும். இக்குடும்பம் கல்வி கற்காததனால் இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதே உண்மை. தன் குடும்பத்தில் இவள் மட்டும் வித்தியாசமானவள் தான். இளமையில் இவளின் சுறுசுறுப்பு பாராட்டுதலுக்குரியது. அம்மா அழைத்தாலும் சரி, அவளின் விருப்பமான பருத்தியின் முதல் பூவைப் பார்க்க வேண்டும் என்றாலும் சரி தான் முதலில் செய்ய வேண்டும் என் எண்ணத்தைக் கொண்டவள்.

அவமானமும், ஏக்கமும் :
மேரி தன் அம்மாவுடன் வெள்ளை முதலாளிகள் ஒருவரின் வீட்டிற்குச் சென்றாள். அந்த வீட்டின் பெண், வில்சன். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டு வியப்புற்றுடன் அவள் கண்கள் அருகில், மேஜையில் உள்ள புத்தகத்தின் மீது சென்றது. அதில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்றபோது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி உன்னால் பார்க்க முடியாது என்று கூறினாள். இந்த வார்த்தை மேரி மனதைக்கிழித்தது. உடனே வீட்டை விட்டு வெளியேறினாள். "கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பதை உணர்ந்தாள். அன்று முதல் அவள் மனம் ஒன்றைத் தீர்மானித்தது. அது என்னவென்றால், "நான் படிக்கவேண்டும்” என்ற ஒற்றை வரி அவள் மனதை அசைபோட வைத்தது. மன ஆசையை பெற்றோரிடம் கூற, சரியான பதில் இல்லாமல் ஏக்கம் அடைந்தாள். ஆனால், மேரி முழுமையான நம்பிக்கையுடன் இருக்கிறாள்.

மேரியின் மீது இரக்கம் :
இவ்வுலகில் தான் மட்டும் நலமாக இருந்தால் போதாது? அனைவரும் (உலகில் உள்ள) நலமாக வாழ்வதே நாம் மகிழ்வுடன் வாழ வழியாகும். இதைத்தான் வள்ளுவரும் "தாம் இன்புறுவது உலகுகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்" என்று கூறியுள்ளார். இக்குறளின் தன்மைக்கு ஏற்ப மேரியின் மீது மிஸ் வில்சன் இரக்கம் கொண்டாள். மேரி தன் வயலில் வேலைபார்த்து விட்டு திரும்பும் போது எதிரே அறிமுகம் இல்லாத பெண் நிற்பதைக் கண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர். தன்னைப் பற்றிக் கூறி, உன்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பதே என் ஆசை. எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக மேயெஸ்வில்லிக்கு வரவேண்டும் என்று கூறினாள்.

மேரியின் கனவும், மகிழ்வும்:
மேரி தன் வீட்டில் மேசை மீது பல காலமாக இருந்த பைபிளை எடுத்து, இதை நான் படித்துவிடுவேன். என்று கனவு காணத் தொடங்கினாள். அப்பா மேரிக்குத் தேவையானவற்றை வாங்கித்தந்தார். தன்னைச்சுற்றி மகிழ்வில் எங்களுக்குச் சொல்லித்தா என அனைவரும் கூறினார். நம் சமுதாயத்திற்கு கிடைக்காத தன் குடும்பத்திற்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

மேரியின் படிப்பும் பட்டமும் :
அன்றாடம் புதிய புதிய நூல்களைக் கற்றாள். படிப்படியாக வளர்ந்தாள். தன் இனமும் வளர புதிய கல்வியைக் கற்று சிறந்த பெண்ணாக மாறினாள். மேரி, "தோல்வியே வெற்றிக்கு முதல்படி" என்பதை உணர்ந்து, தனக்கு நடந்த அவமானத்தை எண்ணி படித்ததினால் மேன்மை பெற முடிந்தது. அந்த சிறுமியின் செயல், எனக்கு விருது பெற பாடமாக அமைந்தது. தனக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்ற பட்டம் ஒரு அனுபவத்தால் பெற்ற பட்டமாகும்.

மேற்படிப்பும் பயணமும் :
படிப்படியாக கல்வியில் உயர்ந்த மேரிக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேரியிடம் வில்சன் அவர்கள் அடுத்து நீ என்ன செய்யப்போகிறாய் எனக் கேட்டு கொண்டே தன் தோளில் மேரியை சாய்த்து பரிவாகக் கேட்டாள். நான் மேலும் படிக்க வேண்டும் அதுவே என் விருப்பம் என்றார். ஆனால், மேலும் படிக்க வழியின்றி அலைகடலில் அகப்பட்ட கப்பலைப் போல நான் இருக்கிறேன் என்றாள். மீண்டும் பருத்திக் காட்டில் பணியைத் தொடங்கினாள். அப்போது வில்சன் அங்கு வந்து ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு இன குழந்தையின் நகரத்தை நோக்கிச் செல் என்றாள். மேரி மேல் படிப்பிற்குச் செல்ல, தொடர் வண்டி நிலையம் சென்றாள், ஆனால், ஊரே அவரை வழியனுப்ப வந்தது. 'குட்பை மேரி' குட்பை என கூறி வெற்றி உண்டாகட்டும் என வாழ்த்தி அனுப்பினார்கள்.

முடிவுரை :
வாழ்வில் படிப்பறிவற்ற நிலையிலிருந்து தன் முயற்சியாலும் பலருடைய முயற்சியாலும் வாழ்வில் உயர்ந்து சமுதாயத்தின் இருளைப் போக்கத் தோன்றிய மேரி ஜேன்னின் வாழ்வியல் நிகழ்வை சேர்ந்து வாழ்வோம்! வளமான உலகைப் படைப்போம்.

45) கட்டுரை: கல்பனா சாவ்லா

முன்னுரை:
விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பெரிய உதாரணமாக உள்ளவர். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நினைவாக்கி பலருக்கும் எடுத்துக்காட்டாக இருந்து வாழ்ந்துக் காட்டியவர்.

இளமையும், கல்வியும்:
கல்பனா சாவ்லா 1961-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியை அரசுப்பள்ளியில் பயின்றார். தனது கல்லூரி படிப்பை பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான துறையில் இளங்கலை பட்டம் பயின்றார். முதுகலை மற்றும் முனைவர் படிப்பை அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் பயின்றார்.

சாதனைகள்:
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது. அவரின் புகழின் உச்சகட்டமாக 2001-ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முடிவுரை:
பல சாதனைகளை படைத்த கல்பனா சாவ்லா தனது இறுதி கட்ட விண்வெளிப் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது விண்கலம் வெடித்து சிதறி உயிரிழந்தார். இந்த நிகழ்வில் கல்பனா சாவ்லா மட்டுமல்ல அவருடன் சென்ற ஏழு பெரும் உயிரிழந்தனர். விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு தற்போது வரை பல மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Source: omtexclasses.com | Content is for educational purposes only. All text is preserved as in the original source.