Showing posts with label Tamil Nadu State Board. Show all posts
Showing posts with label Tamil Nadu State Board. Show all posts

4th Standard Tamil Term 1 Chapter 2 Panai Mara Sirappu Lesson

4th Tamil : Term 1 Chapter 2 : Panai Mara Sirappu

4 ஆம் வகுப்பு தமிழ் | பருவம் 1 இயல் 2

பனைமரச் சிறப்பு

4th Tamil : Term 1 Chapter 2 : Panai Mara sirappu

பருவம் 1 இயல் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் - பனைமரச் சிறப்பு | 4th Tamil : Term 1 Chapter 2 : Panai Mara sirappu

2. பனைமரச் சிறப்பு

Panai Mara Sirappu Title Image

மாலையில் பள்ளி முடிந்து, அழகனும், வண்ணமயிலும் மகிழ்வுடன் பேசிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் சாலையோரத்தில் பந்து போல கருப்பு நிறத்தில் ஒரு பழம் விழுந்து கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தனர். அது என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அவ்வழியே வந்த தாத்தாவிடம் இது என்னவென்று கேட்டனர்.

அழகன்: தாத்தா, தாத்தா இது என்ன பழம்?
தாத்தா: இதுவா! இதுதான் பனம்பழம்
வண்ணமயில்: இந்தப் பழத்தைத் தின்னலாமா? தாத்தா
தாத்தா: ம்...தின்னலாம் வண்ணமயில். மிகச் சுவையாக இருக்கும். சத்து மிக்கது.
அழகன்: இந்தப் பனம்பழத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது தாத்தா..

தேசிய மாநில அளவிலான சமூக, உணர்வுபூர்வமான செய்திகளை இனங்கண்டு அவற்றின் மீது கருத்தாடல் செய்தல்

தாத்தா: சொல்கிறேன் தம்பி! பனம்பழம் பனைமரத்தில் காய்த்துப் பழுக்கும். பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரைஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம். இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக்கூடியது. அதனால் தான் பனைக்குக் கற்பகத்தரு என்ற பெயரும் உண்டு.
Parts of Palmyra Tree
வண்ணமயில்: ஆகா! பனைமரம் இவ்வளவு சிறப்பானதா? தாத்தா, நான் நுங்கு மட்டுமே உண்டுள்ளேன், இந்தப் பனை மரத்தால் நமக்கு வேறு என்ன பயன்?
தாத்தா: நுங்கும், பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூடைகள் முடையவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன. பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன்தருகிறது. மேலும், பனைமரம் புயலைத் தாங்கும் வலிமை பெற்றது.
Uses of Palm Tree
அழகன்: இத்தனை பயன்மிக்கதா பனை?
தாத்தா: ஆமாம், அழகா! அது மட்டுமல்ல நமது முன்னோர்கள் பற்றியும் பண்டைய இலக்கியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள நமக்குப் பெரிதும் உதவியது பனை ஓலைச்சுவடிகள்தாம்.
Palm Leaf Manuscript
வண்ணமயில்: அப்படியா!
தாத்தா: பனைமரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.
அழகன்: அடேங்கப்பா.....! இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்பா?
தாத்தா: பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள், ஆகியவற்றைச் செய்து நீங்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடலாம்.
Palm Leaf Toys
வண்ணமயில்: இத்தகு பயன்மிகு பனைமரத்தை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லையே தாத்தா!
தாத்தா: நன்றாகக் கேட்டாயம்மா, சொல்கிறேன் கேளுங்கள். தமிழக இயற்கை வளத்தின் சான்றாக விளங்கும் பனைமரங்கள் எரிபொருளுக்காக வெட்டப்படுகின்றன. அதனால் அந்த மரத்தைச் சார்ந்து இருக்கும் பனங்காடை, பனை உழவரான் போன்ற பறவைகள் தம் வாழிடங்களை இழந்து வருகின்றன. "மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை", இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்.
அழகன்: பனைமரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை உங்கள் மூலம் அறிந்து கொண்டோம் தாத்தா.
தாத்தா: அறிந்து கொண்டதோடு மட்டும் விட்டு விடாதீர்கள். பனையின் சிறப்பினை உங்களது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.
இருவரும்: கட்டாயமாகக் கூறுவோம் தாத்தா,
தாத்தா: மிக்க மகிழ்ச்சி குழந்தைகளே! தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் பயன்மிகு பனைமரம் நமது தமிழ்நாட்டின் மாநில மரமாகும். இதன் சிறப்புணர்ந்து நாம் பனங்கொட்டைகளைச் சேகரித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் ஊன்றிப் பாதுகாக்கலாம்.
இருவரும்: அப்படியே செய்வோம்! பனைமரம் காப்போம் பயன்பல பெறுவோம். மிக்க நன்றி தாத்தா!
தாத்தா: மகிழ்ச்சி குழந்தைகளே! சென்று வாருங்கள்.

தமிழக அரசு சின்னங்கள்

அறிந்து கொள்வோம்

Tamil Nadu State Symbols
சின்னம் : திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்
பாடல் : நீராரும் கடலுடுத்த தமிழ்த்தாய் வாழ்த்து
நடனம் : பரத நாட்டியம்
விலங்கு : வரையாடு
பறவை : மரகதப்புறா
மலர் : செங்காந்தள்
மரம் : பனை
விளையாட்டு : கபடி

3rd Grade Tamil - Term 2 Chapter 1: Unmaiye Uyarvu - Questions and Answers

பருவம் 2 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் - உண்மையே உயர்வு

பயிற்சி

வாங்க பேசலாம்

1. சுமப்பதற்கு எளிதானது பஞ்சுமூட்டையா? உப்பு மூட்டையா? குழுவில் கருத்தைப் பகிர்க.

• சுமப்பதற்கு எளிதானது பஞ்சு மூட்டை ஆகும். ஏனெனில் அதன் எடை குறைவு.

• உப்பு மூட்டை சுமப்பதற்கு மிகவும் கடினம். ஏனெனில் அதன் எடை அதிகம்.

2. கதைப்பாடலில் உள்ள கருத்துகளை உம் சொந்த நடையில் கூறுக.

உரிமையாளர் ஒருவர் தம் கழுதையின் மீது தினமும் உப்பு மூட்டை ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பொழுது ஒருநாள் உப்பு மூட்டை அருகிலுள்ள ஓடையில் விழுந்தது. மீண்டும் அம்மூட்டையை கழுதையில் ஏற்றியபோது அதன் எடை குறைந்திருந்தது. அதனைக் கண்ட கழுதை மறுநாளும் அவ்வாறே உப்பு மூட்டையை ஓடையின் அருகில் வந்ததும் நீரில் தள்ளியது. கழுதையின் சூழ்ச்சியை அறிந்துகொண்ட அதன் உரிமையாளர் மறுநாள் பஞ்சுமூட்டையை கழுதையின்மேல் ஏற்றினார். அந்த ஓடையின் அருகில் வந்ததும் மூட்டையை கீழே தள்ளியது. மீண்டும் மூட்டையை கழுதையின் மேல் தூக்கி வைத்தபோது அதன் எடை அதிகமானது. உரிமையாளரை ஏமாற்ற நினைத்த கழுதை ஏமாந்து போனது.

நீதி : உழைப்பே உயர்வு தரும்.

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. 'சுமந்து' - இச்சொல்லின் பொருள் _____________

(அ) தாங்கி

(ஆ) பிரிந்து

(இ) சேர்ந்து

(ஈ) விரைந்து

விடை: அ) தாங்கி

2. 'வேண்டுமென்று’ - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

(அ) வேண்டு + மென்று

(ஆ) வேண்டும் + என்று

(இ) வேண் + டுமென்று

(ஈ) வேண்டி + என்று

விடை: ஆ) வேண்டும் + என்று

3. 'நினைத்தது' - இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் _____________

(அ) மறந்தது

(ஆ) பேசியது

(இ) எண்ணியது

(ஈ) வளர்ந்தது

விடை: அ) மறந்தது

இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Rhyming words exercise

வந்தது - விழுந்தது

போய்விடும் – கொண்டிடும்

எண்ணினார் - ஏற்றினார்

தள்ளிடும் - சென்றிடும்

சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.

Word creation exercise

1. குடை

2. தடை

3. உடை

4. ஓடை

5. எடை

6. கடை

படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?

Picture clues word game

1. புன்னகை

2. அழுகை

3. சினம்

4. கவலை

5. சிந்தனை

6. பயம்

மீண்டும் மீண்டும் சொல்லலாமா?

Tongue twister chicken

கூவுற கோழி கொக்கரக் கோழி

கொக்கரக் கோழி கொழு கொழு கோழி

கொழு கொழு கோழி கொத்தற கோழி

Tongue twister squirrel

தோணி மேலே கோணி

கோணி மேலே அணில்

அணில் கையில் கனி

மொழியோடு விளையாடு

சொற்களைக் கூறுவோம் கைகளைத் தட்டுவோம்

Language game activity

மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்க. உப்பு, உடை, உண்டியல், போன்று 'உ' எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் மாணவர்கள் ஒருமுறை கையைத் தட்டவேண்டும். கழுதை, கடை, கண் போன்ற 'க' என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் இருமுறை கையைத் தட்டவேண்டும். இவை அல்லாத சொற்களைக் கூறினால் கைகளைத் தட்டக்கூடாது. இவ்வாறு எழுத்துகளை மாற்றி விளையாடிப் பார்க்கலாம்.

செயல்திட்டம்

எளிய கதைப்பாடல்களைத் தேடிப் படித்து வந்து வகுப்பில் கூறுக.

ஆட்டு மந்தை ஒன்றிடம்

அருமை நண்பன் போலவே

காட்டு ஓநாய் வந்ததே

கனிந்த வார்த்தை உரைத்ததே

அன்பு மிக்க தோழரே

அடியேன் உங்களிடம் வேண்டுகிறேன்

என்றும் உங்கள் நண்பனாய்

இருக்கவே விரும்பி வந்தேனே!

என்னை உங்கள் காவல்நாய்

குரைத்து குரைத்து விரட்டுதே

உங்கள் காவல் நாயை விரட்டினாய்

கஷ்டங்கள் யாவும் தீர்ந்திடுமே

ஆவலோடு நாமெல்லாம் அருமை

நண்பர்கள் ஆகி விடலாமே

உண்மை என்று நம்பிய

ஆடுகள் எல்லாமே உண்மையாக

காவல் காத்த நாயை

ஓட ஓட விரட்டியதே

காவல் இல்லா ஆடுகளை

ஒவ்வொன்றாய் அடித்து தின்றதே!

3rd Grade Tamil Lesson: Nulagam (Library) | Term 1 Chapter 8

பருவம் 1 இயல் 8 | 3 ஆம் வகுப்பு தமிழ்

நூலகம்

நூலகம் பாடம்

மாமா!.....மாமா! என அழைத்தபடி தேனருவி வீட்டிற்குள் வந்தாள்.

மாமா: என்னம்மா! தேனருவி ஏன் இப்படி ஓடி வருகிறாய்?

தேனருவி: நான் வழக்கமாகப் பள்ளிக்கூடம் போகும் வழியில் உள்ள ஒரு கட்டடத்தைத் தோரணம் கட்டி அழகுபடுத்தியிருந்தார்கள். அதில் நூலகம் என்று எழுதியிருக்கு அப்படின்னா… என்ன மாமா....?

மாமா: அதுவா! நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்தான் நூலகம். அது ஒரு பொது இடம். அங்கு அனைவரும் வந்து புத்தகம் படிப்பாங்க! இன்று "நூலக தினம்" அதைக் கொண்டாடுவதற்காக நூலகத்தை அழகுபடுத்தியிருப்பார்கள்.

கேட்கும் செய்திகளைப் புரிந்துகொண்டு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துதல்

தேனருவி மாமாவிடம் பேசுகிறாள்

தேனருவி: அப்படியா? நாமும் சென்று நூலக தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோமா?.

மாமா: சரி தேனருவி! வா போகலாம்.

தேனருவி: நூலகத்தைப் பற்றி எனக்கு விளக்கமாகச் சொல்லுங்க... மாமா.

மாமா: சொல்கிறேன் கேள், 'நூல் + அகம் = நூலகம்'. பல்வேறு துறை சார்ந்த நூல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடமே நூலகம் ஆகும். நூல் நிலையம், புத்தகச் சாலை என்பன நூலகத்தின் வேறு பெயர்களாகும்.

தேனருவி: மாமா இங்கு என்னென்ன நூல்கள் இருக்கும்?

மாமா: நூலகத்தில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், தமிழ், ஆங்கிலம், மற்றும் வேறு பல மொழிகளைச் சார்ந்த இலக்கிய நூல்கள், அறிவியல் நூல்கள், தத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள், பூகோள நூல்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.

நூல்கள் மட்டுமின்றி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் இதழ்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

நூலகத்தின் உட்புறம்

தேனருவி: அடேங்கப்பா! நூலகத்தில் இவ்வளவு வகை நூல்களா? அது சரி மாமா நூலகத்தினால் நமக்கு என்ன பயன்?

மாமா: ம்............ என் செல்லக் குட்டி கேட்டால் சொல்லாமல் இருப்பேனா? இங்கு வந்து நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் நூல்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட நாளில் மீண்டும் புத்தகங்களைத் திருப்பி அளித்து விடவேண்டும். இதனால்,

நம் அறிவு வளர்கிறது.

நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது.

வேலைவாய்ப்புத் தொடர்பான நூல்களைப் படிப்பதால் நல்ல வேலையில் சேரவும் முடிகிறது.

மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.

தன்னம்பிக்கை ஏற்படுகிறது.

தேனருவி: மாமா! நூலகம் பற்றி நிறைய செய்திகளைத் தெரிந்து கொண்டேன்.

மாமா: தேனருவி குழந்தைகளுக்கான சிறப்பம்சம் நூலகத்தில் உள்ளது. அது என்ன தெரியுமா?

இங்கே குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.

நூலகத்தில் உள்ள "வாசகர் வட்டம்" மூலமாக "நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.

போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தேர்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வீட்டில் நூலகம் அமைக்க வேண்டும் அதில் நிறைய புத்தகங்களைச் சேமித்து வைத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தேனருவி: நன்றி மாமா!.......... நான் நம் வீட்டில் ஒரு "சிறிய நூலகத்தை " அமைப்பேன்.

அதில் நிறைய நூல்களைச் சேமித்து வைத்துப் படிப்பேன்

அறிந்துகொள்வோம்

• படிப்புதான் ஒருவன் உயர வழி
- காமராசர்

• புத்தகங்கள் படிப்பதையே வழக்கமாக்குங்கள்.
-அப்துல்கலாம்

நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்திப் படிப்போமா?

நிறுத்தக் குறிகள்

நூலகத்திற்கு நீ சென்றுள்ளாயா? அங்குப் பலவகையான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுகதைப் புத்தகங்கள், புதினங்கள், வரலாற்று நூல்கள், இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள் என வரிசைப்படுத்தி வைத்திருப்பர். சிறுவர் இதழ்கள் செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்ற இதழ்களும் உண்டு. ஆஹா! அங்குச் சென்று படிக்கத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. நூலகத்தின் பொறுப்பாளர் நூலகர் ஆவார். நூலகத்தில் அமைதி காத்திடல் வேண்டும்.

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் பூமலர். விளையாடுவதற்காகத் தன் தோழி மாலதி வீட்டிற்குச் சென்றாள் வழியில் இரண்டு சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர். பூமலர் அவர்களிடம், ஓணானை அடிக்காதீர்கள், உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? அது போல அதற்கும் வலிக்கும் எனவே உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றாள். சிறிது யோசித்த அச்சிறுவர்கள் கற்களைக் கீழே போட்டுவிட்டுத் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

1. பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?

பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.

2. சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?

சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர்.

3. உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?

வள்ளுவர், வள்ளலார், புத்தர்.

4. இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?

எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது.

3rd Grade Tamil - Term 1 Chapter 4: Kalyanamam Kalyanam Questions and Answers

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : கல்யாணமாம் கல்யாணம்!

பயிற்சி

வாங்க பேசலாம்

1. இப்பாடலை ஓசை நயத்துடன் பாடி மகிழ்க.

2. உனது பகுதியில் வழங்கும் உனக்குப் பிடித்த நாட்டுப்புறப் பாடல்களை அறிந்து வகுப்பறையில் பாடுக.

களத்துக்குள்ளே காலை வைத்து - ஏலங்கிடி லேலோ

கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ!

கிழக்கத்திமா டெல்லாங்குடி - ஏலங்கிடி லேலோ!

கீழே பார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ!

வடக்கத்திமா டெல்லாங்குடி - ஏலங்கிடி லேலோ!

வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ!

எல்லா மாடும் சேர்ந்து தானும் - ஏலங்கிடி லேலோ!

ஏகமாத்தான் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ!

கால்படவும் கதிருபூரா - ஏலங்கிடி லேலோ!

கழலுதையா மணிமணியா - ஏலங்கிடி லேலோ!


மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா

மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா

கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்கு இலசா

இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா

பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா

பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா

காயை நம்பி ஏலேலோ பழமிருக்க ஐலசா

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்கள்

கல்யாணமாம்

கொண்டாட்டமாம்

ஊர்கோலமாம்

நாட்டியமாம்

பின்பாட்டாம்

சாப்பாடாம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

அ) பூலோக + மெல்லாம்

ஆ) பூலோகம் + மெல்லாம்

இ) பூலோகம் + எல்லாம்

ஈ) பூலோக + எல்லாம்

விடை : இ) பூலோகம் + எல்லாம்

2. கல்யாணத்தில் நாட்டியமாடுபவர் ____________.

அ) பூனை

ஆ) ஒட்டகச்சிவிங்கி

இ) யானை

ஈ) குரங்கு

விடை : ஆ) ஒட்டகச்சிவிங்கி

3. பாலை + எல்லாம் இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பாலையெல்லாம்

ஆ) பாலை எல்லாம்

இ) பாலைல்லாம்

ஈ) பாலெல்லாம்

விடை : அ) பாலையெல்லாம்

இணைந்து செய்வோம்

கோப்பைகளை அவற்றின் சரியான தட்டுகளோடு பொருத்துக.

கோப்பைகளை தட்டுகளோடு பொருத்துக

சிந்திக்கலாமா?

இப்பாடலில் வரும் பூனைக்கும் பூனைக்கும் பதிலாக யானைக்கும் பூனைக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தால் எவ்வாறு இருக்கும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.

யானைக்கும் பூனைக்கும் கல்யாணம்

கலையும் கைவண்ணமும்

வண்ணமிட்டு மகிழ்க

வண்ணமிட்டு மகிழ்க - பூனை

செயல் திட்டம்

உமது பகுதியில் வழங்கும் நாட்டுப்புறக் கதைகள் இரண்டினை அறிந்து வருக.

நாட்டுப்புறக் கதைகள்

1. இடிக்கும் அர்ச்சுனனுக்கும் என்ன தொடர்பு?

வனவாசத்தின் போது அர்ச்சுனன் காளபைரவ காட்டில் தவம் செய்யத் தொடங்கினான். எழுபதடிக்கம்பம் ஒன்றை நட்டு அதன்மேல் இளநீர் ஏழுவைத்து அவற்றின் மேல் ஏழு விளம்பழங்களை வைத்தான். விளாம்பழங்களுக்கு மேல் ஏழு எலுமிச்சைகளை வைத்து அவற்றின் மேல் ஏழு கொட்டைப்பாக்குகளையும் அதற்கு மேல் ஏழு குன்றிமணிகளையும் வைத்தான். குன்றிமணிகளுக்கு மேல் ஏழு கடுகுகளையும் கடுகுகளுக்கு மேல் ஏழு செப்பூசிகளையும் வைத்தான். செப்பூசிகளின் மீது எறி நின்று செய்த தவத்தின் கோரத்தால் வெப்பம் தகித்தது. தேவர்கள் அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க நினைத்தனர். ஆனால் மேகராசன் மின்னலை அர்ச்சுனனுக்கு மணமுடித்துக் கொடுத்து இடி அஸ்திரமும் கொடுத்தான்.

2. சோம்பேறி மனிதன்

ஒரு ஊரில் சோம்பேறி மனிதன் இருந்தானாம். எந்த வேலையும் செய்யாமல் தின்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட வியாதிகள். வைத்தியர் வீட்டுக்குக் கூட போக முடியாமல் வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.

வைத்தியர் ஒரு பாட்டில் நிறைய சூரணம் கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம் சாப்பிடு. சூரணம் தீர்ந்ததும் வியாதியும் பறந்துடும்னு சொன்னாராம். சோம்பேறி வீட்டுக்கு வந்து காத்திருந்தானாம். எதற்கு? எப்போது வேர்க்குமென்று.

அப்போது அவன் மனைவி சொன்னாளாம். நீங்கள் ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும் என்று. சோம்பேறியும் தன் துணியைத் துவைப்பது, தோட்ட வேலை செய்வது, கடைக்குப் போவது. நிலத்தில் வேலை செய்வது என்று உழைக்க ஆரம்பித்தான்.

ஒவ்வொரு முறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும் மறக்கவில்லை. கொஞ்ச நாளிலேயே வியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான். ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது. மீதியை வைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம். “எப்படி பாதி மருந்திலேயே எனக்குக் குணமானது?” என்று.

அதற்கு அவர் உன் வியாதி மருந்தால் தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம் போய் குணமடைந்து விட்டாய். நான் கொடுத்து மருந்தே இல்லை. வெறும் துளசி, வெல்லம் மட்டுமே கலந்தது என்றார்.

2nd Grade Tamil: Term 2 Chapter 2 - Find the Friend (நண்பரைக் கண்டுபிடி)

நண்பரைக் கண்டுபிடி

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2

பாடம்

இந்த பாடத்தில், விலங்குகள் தங்களின் நண்பர்களை அவர்களின் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டு எப்படி கண்டுபிடிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதையைக் காண்போம்.

நண்பரைக் கண்டுபிடி - பாடம் பக்கம் 1 நண்பரைக் கண்டுபிடி - பாடம் பக்கம் 2 நண்பரைக் கண்டுபிடி - பாடம் பக்கம் 3

கூடுதல் தகவல்

Tags : Term 2 Chapter 2 | 2nd Tamil பருவம் 2 இயல் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ்.

2nd Tamil : Term 2 Chapter 2 : Nanparai kandupidi : Nanparai kandupidi Term 2 Chapter 2 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நண்பரைக் கண்டுபிடி : நண்பரைக் கண்டுபிடி - பருவம் 2 இயல் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

கல்விப் பயணம் தொடரட்டும்!

2nd Standard Tamil Term 2 Chapter 'En Ninaivil' | Samacheer Kalvi Guide

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : என் நினைவில்

பருவம் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ் - என் நினைவில் | 2nd Tamil : Term 2 : En ninaivil

என் நினைவில்

2nd Tamil Term 2 En Ninaivil Page 1
2nd Tamil Term 2 En Ninaivil Page 2
2nd Tamil Term 2 En Ninaivil Page 3
2nd Tamil Term 2 En Ninaivil Page 4
2nd Tamil Term 2 En Ninaivil Page 5
2nd Tamil Term 2 En Ninaivil Page 6

Tags : Term 2 | 2nd Tamil பருவம் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ்.

2nd Tamil : Term 2 : En ninaivil : En ninaivil Term 2 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 : என் நினைவில் : என் நினைவில் - பருவம் 2 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.

1st Grade Tamil: Term 3 Chapter 10 - Payanam Pogalam | Lesson and Exercises

1 ஆம் வகுப்பு தமிழ்

பருவம் 3 – இயல் 10: பயணம் போகலாம்

கதை: பயணம் போகலாம்

கதை иллюстрация: குரங்கு வண்ணத்துப்பூச்சியை துரத்துகிறது

குரங்கு வண்ணத்துப்பூச்சியைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டது.

வண்ணத்துப்பூச்சி பறந்துவிட்டது. குரங்கு மிதிவண்டியில் செல்கிறது.

பிடிக்க முடியவில்லை. பேருந்தில் ஏறித் துரத்திச்செல்கிறது.

பிடிக்க முடியவில்லை. தொடர்வண்டியில் தொடர்கிறது.

பிடிக்க முடியவில்லை. கப்பலில் சென்று பிடிக்க நினைக்கிறது.

பிடிக்க முடியவில்லை. விடாமல் வானூர்தியில் பறந்து தொடர்கிறது.

அடுத்து என்ன நடந்து இருக்கும்? சொல்லுங்கள்!

விடுகதை கேட்பேன்: விடையை எழுதுவேன்

கீழே உள்ள படத்தைப் பார்த்து விடுகதைகளுக்கு விடை காணுங்கள்.

விடுகதை பயிற்சி பக்கம்

Prominent Women in Education: A Study from 9th Tamil Chapter 5

உரைநடை: கல்வியில் சிறந்த பெண்கள்

உரைநடை: கல்வியில் சிறந்த பெண்கள்

நுழையும்முன்

கையிலுள்ள செல்வத்தைக்காட்டிலும் நிலைத்த புகழுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வின் இறுதிவரையிலும் கைகொடுக்கிறது. கல்வி பெறுதலே பெண்களுக்கு அழகு. சங்ககாலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி, இடைக்காலத்தில் ஒடுங்கிப்போனது. பெண்கல்வியை மீட்டெடுக்க உலகம் முழுவதும் சான்றோர் பலர் பாடுபட்டிருக்கின்றனர். மருத்துவர் முத்துலட்சுமி முதல் மலாலா வரை சாதனைப் பெண்கள் ஒவ்வொருவரின் வரலாற்றிலும் ஒரு சோதனைக் காலமும் ஒரு வேதனை முகமும் இருக்கின்றது. இனி, பெண்கல்வி காலூன்றிக் கடந்து வந்த பாதைகளில் நடந்து செல்லும் வில்லிசையைச் செவிமடுப்போம்.

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டுக் குழுவினர்

பங்கு பெறுவோர்: வில்லுப்பாட்டுக் குழுத்தலைவர், குழுவினர்

வில்லுப்பாட்டுக் குழுத்தலைவர்: தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட

குழுவினர்: ஆமாம், வில்லினில் பாட

குழுத்தலைவர்: வந்தருள்வாய் தமிழ்மகளே!

குழுவினர்: ஆமாம், வந்தருள்வாய் தமிழ்மகளே!

அண்ணே, என்னண்ணே, இன்னைக்கு எதைப் பத்திப் பாடப்போறோம்?

குழுத்தலைவர்: நாடும் தாய்தான் நகரும் நதியும் தாய்தான் .... மொழியும் தாய்தான் சுழலும் புவியும் தாய்தான்

குழுவினர்: பீடிகை போடாம செய்திக்கு வாங்கண்ணே!

குழுத்தலைவர்: இப்படி எல்லாத்தையும் பெண்ணாகப் பார்த்து வணங்கற நாம எல்லாரும், வீட்டில் இருக்கும் பெண்ணை மதிக்கிறோமா?

குழுவினர்: அண்ணே ... மதிக்க என்ன இருக்கு. எல்லார் வீட்டிலயும் இப்படித்தானே?

குழுத்தலைவர்: சரி, இதுவே ஒரு பெண் ஆட்சியர் வந்தா என்ன செய்வ?

குழுவினர்: என்ன அண்ணே கேள்வி இது? உடனே எழுந்து நின்று வணக்கம் சொல்வேன்.

குழுத்தலைவர்: அப்போ , ஒரு பெண் படிச்சுப் பெரிய பதவிக்கு வரும்போது, தானா மரியாதை வருதுல்ல? அதான், இன்னிக்குப் பெண் கல்வியின் அவசியம் பத்தியும் கல்வியில் சிறந்த பெண்களைப் பத்தியும் பாடப்போறோம்.

படிக்க வேண்டும் பெண்ணே – அப்பத்தான்

பார்முழுதும் போற்றிடும் கண்ணே ...

சுயமாகச் சிந்திக்கத் துணையாகும் கல்வி

சொந்தக்காலில் நின்றிடவே உடனுதவும்

கல்வி... (படிக்க)

குழுவினர்: ஆமா, பார் முழுதும் போற்றிடும் கண்ணே .

ஆமாண்ணே, எனக்கொரு சின்ன ஐயம். அந்தக் காலத்தில எந்தப் பெண்ணைப் படிக்க வச்சாங்க? அப்பல்லாம் நாடு நல்லா இல்லையாண்ணே!

குழுத்தலைவர்: தம்பி, உனக்கு விவரம் பத்தாது. சொல்றேன் கேட்டுக்கோ.

கற்காலம் முதலே கனிந்திருந்த தமிழின்

பொற்காலம் எனவே புகழப்படும் காலம்

எக்காலம்? அது எக்காலம்?

பாட்டும் தொகையும் உருவான காலம்

ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம்

சங்ககாலம்... அது சங்ககாலம்...

ஔவையும் குயத்தியும் வெறிபாடிய

கண்ணியும்

கொவ்வைத் தமிழைக் கொண்டு பாடிய

மாசாத்தியும்

செழித்திருந்த காலம்... புகழ் வளர்த்திருந்த

காலம் ...

குழுவினர்: ஓகோ! சங்க காலத்தில் பெண்பாற் புலவர் பலர் இருந்ததச் சொல்றீங்களா அண்ணே, மேலே சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்கணும். நம்ம மக்களும் தெரிஞ்சு நடந்துக்கட்டும்.

தெரிந்து தெளிவோம்

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர்

ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.

வில்லுப்பாட்டுக் குழுத்தலைவர்:

பெண்பாற் புலவர்கள் வந்தாங்க...

பெண்ணுணர்வைப் பாடலில் தந்தாங்க...

தூது போனாங்க... துயரைத் தீர்த்தாங்க...

ஓதும் தமிழாலே உயர்வைப் பெற்றாங்க...

குழுவினர்: படிச்ச பெண்களுக்குக் கிடைச்ச பெருமையை இன்னும் சொல்லுங்கண்ணே!

குழுத்தலைவர்: சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்திலே, மாதவி மகள் மணிமேகலை கல்வி கற்ற பெண்ணாக இருந்தாங்க.

குழுவினர்: அப்படியா அண்ணே , வேற யாரெல்லாம் படிச்சுப் பெருமை அடைஞ்சாங்க?

குழுத்தலைவர்: பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் முதலிய பெண்கள், தம் இறைவனுக்குப் பாமாலை சூட்டினாங்க.

குழுவினர்: ஆமாண்ணே நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா , திரும்பவும் எனக்கொரு ஐயம். இவ்வளவு பெண்கள் படிச்சிருந்த நம்ம நாட்டில சில நூற்றாண்டுகளா ஏன் பெண்ணடிமைத்தனம் வந்துச்சு?

குழுத்தலைவர்: தம்பி நல்ல கேள்வி கேட்ட, சொல்றேன் கேளு.

ஆணும் பெண்ணும் இயற்கைப் படைப்பிலே

சமம் என்று நினைச்சாங்க - முன்னோர்கள்

சரியாக வாழ்ந்தாங்க....

இடையில் குடிபுகுந்த மூடப்பழக்கங்களால்

பெண்களைத் தாழ்த்தினாங்க

சமத்துவத்தை

அடியோடு வீழ்த்தினாங்க...

குழுவினர்: அது சரிண்ணே , இன்று பெண்கள் நல்லாப் படிச்சு உயர்ந்த பதவியெல்லாம் பெற்று நாட்டையே ஆளறாங்க. இந்த நிலை எப்படிண்ணே வந்தது?

குழுத்தலைவர்: அது, ஒரு நூற்றாண்டு கால வரலாறு தம்பி. இந்த நிலையை அடைய அவங்க பட்டபாடு சொல்லி முடியாது.

குழுவினர்: அதைத்தான், கேட்கறேன் விரிவாகச் சொல்லுங்கண்ணே!

குழுத்தலைவர்: அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதுக்கு என்று ஆணவமாக் கேட்டவங்க மத்தியிலே

குழுவினர்: ஆமா மத்தியிலே

குழுத்தலைவர்: தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராய், சாதனை படைச்சாங்க முத்துலெட்சுமி

குழுவினர்: ஆமா! முத்துலெட்சுமி அடடா! என்ன அருமையான செய்தி. அவங்க வேற என்னெல்லாம் செய்தாங்கண்ணே?

குழுத்தலைவர்:

பொதுச் சேவைக்கு வந்தாங்க

புதுமையைப் படைச்சாங்க

சட்டசபை உறுப்பினராய்ச்

சரித்திரமாய் நின்னாங்க

மகளிருக்கெதிரான கொடுமைகளை

மாண்புடனே எதிர்த்தாங்க

மனித குலத்தின் மாணிக்கமாய்

மக்கள்மனங்களில் நிறைந்தாங்க

பெண்மை - புரட்சி

முத்துலெட்சுமி

முத்துலெட்சுமி (1886 - 1968)

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

  • இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

குழுவினர்: என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்.

குழுத்தலைவர்: அவங்களைப் போலவே மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் நல்லா படிச்சவங்க. சமூக சேவகியா இருந்து பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டாங்க.

குழுவினர்: இன்னும் வேறு யாரெல்லாம் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டாங்க அண்ணே ?

குழுத்தலைவர்: சொல்றேன் கேளு தம்பி ...

முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யாரு...

தந்தை பெரியாரு

விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யாரு...

நம்ம பாரதியாரு .....

பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென

இடிமுழக்கம் செய்தவர் யாரு...

பாரதிதாசனாரு ....

குழுவினர்: இவ்வளவு சேதி கேட்ட நாங்க, பெண் கல்விக்காக நமது அரசாங்கம் என்னென்ன செய்தது என்பதையே கேட்க மறந்து விட்டோம் அண்ணே !

குழுத்தலைவர் : பெண்கல்வி மேம்பாட்டிற்குத் தற்போதைய அரசு மட்டுமல்ல, ஆங்கில அரசே சட்டங்கள் போட்டது தம்பி.

குழுவினர்: என்னண்ணே சொல்றீங்க! நம்ப முடியல. ஆங்கில அரசு சட்டம் போட்டதா? புரியும்படி சொல்லுங்க!

குழுத்தலைவர்: தம்பி 1882இல் ஹண்டர் குழு முதன் முதலில் பெண் கல்விக்குப் பரிந்துரை செய்தது. அந்த அறிக்கையின்படி மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினாங்க.

குழுவினர்: இது புதிய செய்தியா இருக்கே!

குழுத்தலைவர் : அதன் பிறகு, பெண்கள் கல்வி பயில, பல உயர்கல்வி நிறுவனங்களை அரசு உருவாக்குச்சு.

பெண்மை - துணிவு

மூவலூர் இராமாமிர்தம்

மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962)

  • தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.
  • தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
  • தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.

பெண்மை - உயர்வு

பண்டித ரமாபாய்

பண்டித ரமாபாய் (1858 - 1922)

இவர் சமூகத் தன்னார்வலர். தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்.

குழுவினர்: ஆங்கில அரசு பத்திச் சொன்னீங்க சரி, விடுதலைக்குப் பின் நமது மத்திய, மாநில அரசுகள் பெண் கல்விக்காக என்ன செய்தன அண்ணே!

குழுத்தலைவர்: அதைச் சொல்லாம விடுவேனா தம்பி?

கற்க வேண்டும் பெண்கள் என்று

முழங்கியது அரசாங்கம்

கற்பதனாலேயே நம் நாட்டின்

நிலையோங்கும்

பெண்கள் பள்ளிக்கூடங்கள் திறந்தார்கள்

பெண்களும் கல்வி கற்று உயர்ந்தார்கள்.....

குழுவினர்: நமது தமிழக அரசு நல்ல திட்டங்களையே தந்திருக்குது அண்ணே.

பெண்மை – சிறப்பு

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் (1870-1960)

பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.

குழுத்தலைவர்: ஆமா ஆமா. அரசுத் திட்டங்கள் மட்டுமல்ல; தனிமனிதப் பங்களிப்பும் இருக்கு தம்பி. இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி, இதுவரைக்கும் 80ஆயிரம் குழந்தைகள் கல்விபெற உதவியா ஒருத்தர் இருந்திருக்காரு.

குழுவினர் : அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் யாரு அண்ணே ?

குழுத்தலைவர்: 2014இல் நோபல் பரிசு வாங்கின பெருமைக்குரியவரு. அவர்தான் நம்ம கைலாஷ் சத்யார்த்தி.

குழுவினர்: எவ்வளவோ செய்திகளை இன்னைக்குச் சொன்னீங்க, இன்னும் ஏதாவது?....

குழுத்தலைவர்: ஏன் தம்பி! இழுக்கற. சொல்றேன் கேளு! பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அதற்காகப் போராடிய வீரச்சிறுமி மலாலா "நோபல் பரிசு" வாங்கினாங்க தெரியுமோ!

குழுவினர்: ஆமாண்ணே நான் கூடக் கேள்விப்பட்டேன்.

குழுத்தலைவர்: இவ்வளவு நேரம் என்னுடைய வில்லுப்பாட்டால என்ன தெரிஞ்சுக்கிட்ட தம்பி. மக்களுக்குச் சுருக்கமாகச் சொல்லு!

யார் இவர்?

மலாலா

மலாலா (1997)

பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு.

பெண்மை - அறிவு

சாவித்திரிபாய் பூலே

சாவித்திரிபாய் பூலே (1831 - 1897)

1848 இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

குழுவினர்:

பெண்கள் படிக்கணும் நாட்டின் கண்கள் திறக்கணும்

இன்னும் படிக்கணும் உயர்வு என்றும் விளையணும்

ஆணும் பெண்ணும் சரிநிகரென்னும் அறிவு வளரணும்

அன்பினாலே அகிலம் பூக்கும் உண்மை புரியணும் ... (பெண்கள்)

குழுத்தலைவர்: பரவாயில்லை நல்லாவே புரிஞ்சுக்கிட்ட தம்பி. இத்தனை போரட்டங்களுக்குப் பிறகுதான் இன்று பெண்கள் அதிகமாகக் கல்வி கற்க வாராங்க. உயர்கல்வி கற்று எல்லாத் துறைகளிலும் பணியாற்றித் திறமையாகச் செயல்படுறாங்க.

குழுவினர்: அடடே! இது எவ்வளவு பெரிய சேதி அண்ணே ! என்னண்ணே ... நீங்க சொன்னதைக் கேட்டுக்கிட்டே இருந்ததாலே நேரம் போனதே தெரியல.

குழுத்தலைவர்: சரி சரி. அப்படின்னா மங்களம் பாடிடுவோம்!

அனைவரும்:

வாழியவே பெண்மை வாழியவே

வளமான பெண்கல்வி வாழியவே

சமத்துவம் வாழியவே

புவி வளம் பெறவே

புதிய உலகம் நலம்பெறவே

(வாழியவே பெண்மை வாழியவே)

தெரிந்து தெளிவோம்

  • பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்: ஈ.வெ.ரா. - நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது.
  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்: கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது. காண்க:
  • தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் (1903 -1943): மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்; இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
  • கோத்தாரி கல்விக் குழு: 1964ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
  • சாரதா சட்டம்: பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே, அதைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் (1906-1955): தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார். சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

9th Tamil Iyal 5 | Kasadara Mozhithal | Samacheer Kalvi Book Back Questions

கசடற மொழிதல்

இயல் ஐந்து

கல்வி

இயல் ஐந்து கல்வி கசடற மொழிதல்

கற்றல் நோக்கங்கள்

  • கல்வி, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளமையை உணர்ந்து பெண்கல்விக்குத் தம் பங்களிப்பை நல்குதல்
  • பலவாறான இலக்கிய வடிவங்களின்வழி கருத்துகளைப் படித்து அறிதல்
  • குறிப்பிட்ட தலைப்பின்கீழ் கருத்துகளைத் திரட்டிக் கோவையாக எழுதும் திறன் பெறுதல்
  • நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்த முனைதல்
  • இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றை எழுதுதலில் முறையாகப் பயன்படுத்துதல்

Class 10 Tamil Nirk Atharku Thaga | Moral and Ethical Values Guide

நிற்க அதற்குத் தக

இயல் 1
நிற்க அதற்குத் தக - இயல் 1 கேள்வி இன்சொல் மற்றும் வன்சொல் வழி

இதில் நீங்கள் செல்லும் வழி யாது?

இன்சொல் பேசுவதே எமது வழியாகும்

உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

இன்சொல் பேச முடியாத சூழலில் அமைதியாக இருந்து விடு. வன்சொல் பேசி விடாதே. பேசிய வார்த்தைகளை ஒருபோதும் திரும்பப் பெற இயலாது என நண்பருக்கு வழிகாட்டுவேன்.

இயல் 2
நிற்க அதற்குத் தக - இயல் 2 கேள்வி

மேற்கண்ட அறிவிப்பை கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

  1. வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றச் செய்வேன்
  2. புயலின் போது வெளியே செல்வதைத் தவிர்ப்பேன்
  3. தொலைபேசி, மின் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தடுப்பேன்
  4. மீனவ நண்பர்களைக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கச் செய்வேன்
  5. மாடியில் இருப்பதைத் தவிர்த்து தளப் பகுதியிலேயே தங்கச் செய்வேன்
  6. வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் கடற்கரைப் பகுதிகளுக்கு தொலைவிலும், மரங்கள் மின் கம்பிகள் உள்ள பாதைகள், நீர்வழிகள் ஆகியவற்றில் இருந்து விலகியும் வாகனங்களைச் செலுத்தச் செய்வேன்.
  7. காற்று அடிப்பது நின்றாலும் மறுபடி எதிர் திசையில் இருந்து வேகமாக வீச ஆரம்பிக்கும். எனவே, காற்று அடிப்பது முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என அறிவுறுத்துவேன்.
இயல் 3
நிற்க அதற்குத் தக - இயல் 3 கேள்வி
  1. துரித உணவுகளால் புதிது புதிதாக புற்றுநோய்கள் வருகின்றன.
  2. துரித உணவுகளில் மிகுதியான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் உடல் பருமனுக்கு வித்திடுகிறது
  3. உடலுக்குத் தேவையான சத்துக்கள் அதில் இருப்பதில்லை
  4. அதில், அளவுக்கதிகமான வேதிப்பொருட்கள், நிறமிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன
  5. அவை, குழந்தைகளின் சுவை நரம்புகளைத் தூண்டி துரித உணவுகளுக்கு அடிமையாகும் நிலையை வளர்த்துள்ளன.
  6. எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
  7. பழங்கள், பச்சைக் காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள், கீரைகள், பால், முட்டை உள்ளிட்ட சமச்சீர் உணவையே உட்கொள்ள வேண்டும்.
  8. உணவுமுறை பேணுவோம்; உடல்நலம் காப்போம்.
இயல் 4
நிற்க அதற்குத் தக - இயல் 4 கேள்வி
  1. விளையாட்டு மைதானத்திற்கு சென்று சிறிது நேரம் நண்பர்களுடன் விளையாடி விட்டு வரச் சொல்லுவேன்
  2. ஓரிடத்தில் அமர்ந்து திறன்பேசியில் விளையாடுவதால் கண் பாதிப்படையும்; உடல் சோர்வடையும்; படிப்பில் கவனம் செலுத்த முடியாது; நல்ல மதிப்பெண்களை பெற இயலாது; நம்முடைய லட்சியத்தை அடைவதில் தொய்வு ஏற்படும் என்பதை எடுத்துக் கூறுவேன்.
  3. காணொளி விளையாட்டுகள் நமது நிலையை மறக்க செய்பவை. நிலை உலகில் நமது மனம் இல்லாமையால் தீங்கு வந்து சேரும். பெற்றோருக்கு உதவி செய்ய இயலாது. இந்த நிலை தொடர்ந்தால் உடல்நலக்குறைவு ஏற்படுவதுடன் மனநலம் பாதிப்படையும்; மனச் சிதைவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று அறிவுரை வழங்குவேன்.
  4. மனநலம் பேண யோகா செய்யச் சொல்வேன்.
  5. தாத்தா பாட்டியைச் சந்தித்து மகிழுமாறு கூறுவேன்.
இயல் 5
நிற்க அதற்குத் தக - இயல் 5 கேள்வி

பள்ளியில் நான்

  1. உடன் பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன்
  2. நண்பர்களுக்கு உதவி செய்வேன்
  3. வகுப்பறைத் தூய்மை காப்பேன்

வீட்டில் நான்

  1. அங்காடிக்கு சென்று வருவேன்
  2. செடி கொடிகளுக்கு நீர் ஊற்றுவேன்
  3. வீட்டின் தூய்மை காப்பேன்.
இயல் 6
நிற்க அதற்குத் தக - இயல் 6 கேள்வி
  1. நாட்டுப்புற கலைகளைக் கற்றுக்கொள்ள முயல்வேன்.
  2. ஊர்த் திருவிழாக்களில் நாட்டுப்புறக் கலைகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வேன்
  3. பள்ளி நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைகளின் பெருமை பற்றி எடுத்துரைப்பேன்
  4. நாட்டுப்புறக் கலைகள் நமது பண்பாட்டின் விழுமியங்களாகத் திகழ்வதை நண்பர்களிடம் எடுத்துரைப்பேன்
  5. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆதரவளிப்பேன்.
இயல் 7
நிற்க அதற்குத் தக - இயல் 7 கேள்வி
  1. கல்வெட்டுச் செய்திகளைக் கட்டுரை ஆக்குவேன்
  2. கல்வெட்டுச் செய்திகள் மூலமாக நமது பண்பாட்டுப் பெருமையை வெளிக் கொணர்வேன்
  3. கல்வெட்டுகளைப் பாதுகாப்பேன்
  4. கல்வெட்டுச் செய்திகளை படியெடுத்து கணினியில் சேர்ப்பேன்
இயல் 8
நிற்க அதற்குத் தக - இயல் 8 கேள்வி

நாம் செய்ய வேண்டுவன

  1. ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் மாற்றிப் பேசாதிருத்தல்
  2. பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல்
  3. எப்போதும் பிறருக்கு உதவத் தயாராக இருத்தல்

அறங்கள் தரும் நன்மைகள்

  1. எல்லாரும் விரும்புவர்
  2. எதையும் தாங்கும் மனவலிமை பெறலாம்
  3. தனக்குரிய செயலை உடனே முடிக்கும் வலிமை வளரும்.
இயல் 9
நிற்க அதற்குத் தக - இயல் 9 கேள்வி

உதவி

விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யத் தெரியாதவருக்கு பூர்த்தி செய்து கொடுத்தேன்

மனநிலை

மகிழ்ச்சி அடைந்தேன்.