Showing posts with label 8 மதிப்பெண் வினா. Show all posts
Showing posts with label 8 மதிப்பெண் வினா. Show all posts

Writing a Letter to a Relative: An Example on Honesty and Morality

8 மதிப்பெண் வினா: உறவினருக்கு கடிதம்

பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டும் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

உறவினருக்குக் கடிதம்

விருதுநகர்,
12-10-2020.

அன்புள்ள அத்தைக்கு,

வணங்குகிறேன். இங்கு நானும் அப்பாவும் அம்மாவும் தம்பியும் நலமாக இருக்கிறோம். உங்களது நலம் மற்றும் மாமாவின் நலம் அறிய ஆவல். சிறுவயது முதலே எனக்கு நல்ல அறநெறிக் கதைகளைக் கூறி நல்வழிப்படுத்தினீர்கள். நீங்கள் கூறிய நன்னெறிப்படியே இதுவரை நான் ஒழுகி வந்துள்ளேன். அதனால் ஏற்பட்ட நன்மையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கடந்த திங்களன்று மதிய உணவு இடைவேளையில் உணவு அருந்துவதற்காக நானும் எனது நண்பனும் பள்ளித்திடல் அருகில் உள்ள வேப்ப மரத்தடிக்குச் சென்றோம். அங்கு ஒரு பணப்பையைக் கண்டேன். எடுத்துப் பார்த்தபோது அதில் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் அடையாள அட்டைகளும் இருப்பதைக் கண்டேன். பணப்பையை தவறவிட்டவரின் மனம் எவ்வளவு துடித்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன்.

ஆதார் அட்டையில் உள்ள தொலைபேசி எண்ணில் உரியவரைத் தொடர்பு கொண்டேன். உடன் பள்ளி தலைமையாசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினேன்; பணப்பையை ஒப்படைத்தேன். சிறிது நேரத்தில் உரியவர் வந்தார். சரியான அடையாளத்தைக் கூறிப் பணத்தை பெற்றுக் கொண்டார்; என்னை வாழ்த்திச் சென்றார்; தலைமையாசிரியரும் ஆசிரியப் பெருமக்களும் என்னைப் பாராட்டினார்கள். இந்த வாழ்த்துக்கெல்லாம் உரியவர் நீங்கள்தான். எனக்கு நீங்கள் சொல்லிக்கொடுத்த, "இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்" என்ற திருக்குறள் எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.

நன்றி அத்தை!

தங்கள் அன்புள்ள,
தமிழன்

உறைமேல் முகவரி

பெறுநர்

திருமதி. இந்துமதி,
கம்பர் தெரு,
இராஜபாளையம்.

8 Mark Question: Poster Design for Jayakanthan Memorial Special Issue

8 மதிப்பெண் வினா: ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

வினா:

ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

மாதிரிச் சுவரொட்டி:

ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ் சுவரொட்டி மாதிரி