Showing posts with label தமிழோவியம். Show all posts
Showing posts with label தமிழோவியம். Show all posts

📘, Samacheer Kalvi, 9th Tamil Guide, Chapter 1.2, தமிழோவியம், Thamizhoviyam, Tamizhoviyam,

Samacheer Kalvi 9th Tamil Guide
Chapter 1.2 தமிழோவியம்

📘 Samacheer Kalvi 9th Tamil Guide, Chapter 1.2, தமிழோவியம் (Thamizhoviyam)

Students can download the Samacheer Kalvi 9th Tamil Guide for Chapter 1.2, 'தமிழோவியம்', which includes questions and answers, a summary, and notes. This PDF guide will help you revise the complete Tamil Nadu State Board new syllabus, complete homework assignments, and score high marks in board exams.

கற்பவை கற்றபின்

Question 1: பிறமொழி கலப்பின்றித் தனித்தமிழில் இரண்டு மணித்துளிகள் வகுப்பறையில் பேசுக. பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசுதல்:

Answer:

அவையோர் அனைவருக்கும் வணக்கம்!

என் உரையைக் கேட்க ஆவலுடன் அமர்ந்திருக்கும் எங்கள் தமிழ் ஐயா அவர்களே! என் உடன் பயிலும் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! உங்கள் முன் தனித்தமிழில் உரையாடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

நான் உரையாற்ற எடுத்துக்கொண்ட தலைப்பே, “தனித்தமிழ்” என்பதுதான்.

நாம், நம் அன்றாட வாழ்வில் தமிழ்மொழியைச் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருக்கிறோம். பிறமொழிச்சொற்களைத் தமிழ்மொழி போலவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்பது, பள்ளிக்கு வருவது, கடைக்குச் செல்வது என அனைத்து நிலைகளிலும் நம்மை அறியாமலே பிறமொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். “மெல்லத் தமிழ் இனி சாகும்” என்று கவிஞர் வருந்தியது போலவே எனக்கும் வருத்தமாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே! அனைத்துத் துறை சார்ந்த சொற்கள், கலைச்சொற்கள் மட்டும் அல்ல அனைத்துத் தரவுகளும் நம் அமுதத் தமிழில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

கணினியைப் பயன்படுத்தும் நாம்… எப்படித் தமிழைப் பயன்படுத்துவது என தயங்காதீர். அனைத்து கணினி சார்ந்த ஆங்கில வார்த்தைக்கும் செயலி, விரலி, சுட்டி, உலவி… என தமிழில் சொற்கள் உண்டு.

எனவே, தனித்தமிழ் பயன்படுத்துவோம்! நம் கன்னித்தமிழை வளர்ப்போம்!!

Question 2: கவிதையைத் தொடர்க.

Poem starter

Answer:

Poem completion

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1:
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ……………
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

  • அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை.
  • ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை
  • இ) எதுகை, மோனை, இயைபு.
  • ஈ) மோனை, முரண், அந்தாதி.

குறுவினா

Question 1: தமிழோவியம் கவிதையில் நும்மை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

Answer:
“மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்
மட்டுமே போதுமே ஓதி நட”
மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய, திருக்குறள் மட்டுமே போதும்; அதைப் படித்து அதன்படி நடக்க வேண்டும்.

Question 2: “அகமாய் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்”
இலக்கியங்களின் பாடு பொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?

Answer:
பழந்தமிழ் இலக்கியங்கள், அகம் புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிகள், தமிழர்களின் இல்லற வாழ்வைச் சொல்லும் அக இலக்கியங்களையும், போர் மற்றும் வீரம் சார்ந்த வாழ்வைச் சொல்லும் புற இலக்கியங்களையும் பாடுபொருளாக உணர்த்துகின்றன.

சிறுவினா

Question 1: காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

Answer:

  • தமிழ் மொழி தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது.
  • தமிழ் மொழி, ஏனைய திராவிட மொழிகளைவிட தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.
  • பிற மொழித் தாக்கம் தமிழில் குறைவாகவே உள்ளது.
  • ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளம் பெற்ற மொழி.
  • இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
  • எண்ணற்ற வேர்ச்சொற்களைக் கொண்டு புதுப்புது சொற்களை உருவாக்கி, அறிவியல், சமூகம், மற்றும் பண்பாட்டுத் துறைகளில் தமிழ்மொழி தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்கிறது.

Question 2: புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

Answer:

முன்னுரை :

தமிழ்மொழி, இலக்கண இலக்கிய வளம் பெற்றுச் செழித்தோங்கி இருக்கிறது. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய அறிவுக்கருவூலங்கள் நிறைந்துள்ள தொன்மை சான்ற மொழியாகும். தமிழ்மொழியின் சீர் இளமைத்திறம் வியந்து போற்றத்தக்கது. சங்க காலம் முதல் இக்காலம் வரை தமிழ் புதுக்கோலம் பெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கான என் பங்களிப்பினை இக்கட்டுரையில் காண்போம்.

அறிவியல் தமிழ் :

தமிழ், தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற மொழியாக இருந்து, பிற துறைகளோடு இணைந்து வாழும் மொழியாகவும் கருதப்படுகிறது. “தமிழன் அறிவியல் முன்னோடி” என்று கொண்டல் சு.மகாதேவன் நிலைநாட்டுகிறார். ந. சுப்புரெட்டியார், ஜி.ஆர். தாமோதரன், எழுத்தாளர் சுஜாதா போன்றோர் இத்துறையில் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களைப் பின்பற்றி எதிர்வரும் காலங்களில் என் பங்களிப்பை இதைவிடச் சிறப்பாகச் செய்வேன்.

ஊடகத்துறை :

நம் நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறையோடு பத்திரிகைத் துறையும் வளர்ந்து வந்திருக்கிறது. இதழியல் தமிழறிஞர்கள் பாரதியார், திரு.வி.க, சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் வழியில் என் பங்கையும் அளிப்பேன். வானொலி, தொலைக்காட்சி, இணையம், அலைபேசி ஆகியவற்றிற்கான இணையத் தமிழ் அகராதிகளை உருவாக்க முயற்சி செய்வேன்.

கணிப்பொறித் தமிழ் :

இன்று வளர்ந்து நிற்கும் துறைகளுள் முதன்மையானது கணினித்துறை. ஆனால் இதில் இன்றுவரை ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்னஞ்சல், பல்லூடகம் போன்றவை மக்களை ஆள்கின்றன. உயிரோட்ட (Animation) வரைபடங்கள், ஒளிக்காட்சிப் படங்கள் (Video), வரைகலை (Graphics), எழுத்து (Text), ஒலி (Sound) ஆகிய கணினிசார் கலைச்சொற்களைத் தமிழில் புதுப்பொலிவுடன் உருவாக்குவேன்.

நிறைவுரை :

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” எனும் பாரதியாரின் கனவை நனவாக்க, புதுமை வடிவம் தந்து தமிழ்ப் பணியாற்றுவேன்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் ………..

  • அ) இலங்கை, சிங்கப்பூர்
  • ஆ) அமெரிக்கா, கனடா
  • இ) பிரான்சு, இங்கிலாந்து
  • ஈ) நார்வே, சுவீடன்

2. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் …..

  • அ) பாரதிதாசன்
  • ஆ) நாமக்கல் கவிஞர்
  • இ) கவிமணி
  • ஈ) பாரதியார்

3. ‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்.

  • அ) கதை
  • ஆ) சிறுகதை
  • இ) கவிதை
  • ஈ) உரைநடை

நிரப்புக

4. ‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்……………

Answer: ஈரோடு தமிழன்பன்

5. 2004-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல் ………….

Answer: வணக்கம் வள்ளுவ

6. புதுக்கவிதை, சிறுகதை எனப் பல படைப்புகளை வெளியிட்டவர் ………….

Answer: ஈரோடு தமிழன்பன்

7. புதுப்புது வடிவங்களில் கவிதை நூல் இயற்றியவர் ………..

Answer: ஈரோடு தமிழன்பன்

8. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல் ………..

Answer: பிங்கல நிகண்டு

9. உலகத் தாய்மொழி நாள் ………..

Answer: பிப்ரவரி 21

10. ‘ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை’ என்றவர் ………….

Answer: ஈரோடு தமிழன்பன்

பாடலின் தெளிவுரை

தமிழ், காலம் தோன்றுவதற்கு முன்பே பிறந்தது. எல்லாக் காலங்களிலும் நிலைத்திருப்பதும் தமிழே! அகப்பொருள், புறப்பொருள் சார்ந்த இலக்கியங்களும், அவற்றை விளக்கிச் சொல்லும் இலக்கண நூல்களும், பிற மொழிகளுக்கு ஈடு இணையற்ற காப்பியங்களும் தமிழில் அமைந்துள்ளன. இவற்றை நினைத்து நெஞ்சம் மகிழ்ச்சியில் ஊர்வலம் கொள்ளட்டும்.

இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலத்தை ஏன் இருண்ட காலம் என்று கேட்கிறீர்கள்? அது நீதியை ஏந்திய தீபமாய்ப் பாட்டுக்கள் தோன்றிய காலம். மேலும், மானிட மேன்மையை நிலைநாட்டத் திருக்குறள் ஒன்றே போதும். அதைப் படித்து, அதன்படி வாழ்தல் வேண்டும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயங்கள் தமிழை வளர்த்தன; தமிழும் சமயங்களை வளர்த்தது. தாயும் சேயும் போல தமிழும் சமயங்களும் இணைந்திருந்தன.

சித்தர்களின் மரபில் வந்தவர்கள் பகுத்தறிவு ஒளியை இந்நிலத்தில் பாய்ச்சினர்.

விரலை மடக்கிக்கொண்டு, ‘இந்த அழகிய வீணையில் இசை எழவில்லையே’ என்று சொல்வது போல, குறைகளைக் களைந்துவிட்டு, தமிழ் புதுக்கோலம் புனைந்து வளரட்டும். நாளும் நற்றமிழை வளர்ப்போம்.

அருஞ்சொற்பொருள்

அகமாய் – அக இலக்கியங்கள் (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை)
புறமாய் – புற இலக்கியம் (பதிற்றுப்பத்து, புறநானூறு)
அகமும் புறமும் – பரிபாடல்
இருட்டு – அறியாமை
சித்தர் – ஞான சித்தி பெற்றவர்
நிகரிலா – ஈடு இணையில்லாத
ஓதி – கற்று

இலக்கணக் குறிப்பு

எத்தனை எத்தனை – அடுக்குத் தொடர்
ஏந்தி – வினையெச்சம்
நிகரிலாக் காப்பியம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விட்டு விட்டு – அடுக்குத் தொடர்
காலமும் – முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

பகுபத உறுப்பிலக்கணம் - பிறந்தது, வளர்ப்பாய்