Showing posts with label தகவல் செயலாக்கம். Show all posts
Showing posts with label தகவல் செயலாக்கம். Show all posts

2nd Maths: Term 3 Unit 6: Information Processing - Algorithms and Instructions

தகவல் செயலாக்கம் | பருவம்-3 அலகு 6 | 2வது கணக்கு - படிநிலைகளும் வழிமுறைகளும் | 2nd Maths : Term 3 Unit 6 : Information Processing

2வது கணக்கு : பருவம்-3 அலகு 6 : தகவல் செயலாக்கம்

படிநிலைகளும் வழிமுறைகளும்

கலைச்சொற்கள் : படிகளை வகுத்தல், கட்டளைகள்

படிநிலைகளும் வழிமுறைகளும்

கற்றல்

விளையாட்டு நேரம்

கலைச்சொற்கள் : படிகளை வகுத்தல், கட்டளைகள்

குழலி தாயம் விளையாட்டை விளையாடும் படிகளை விளக்கினாள்.

1. இரண்டு முதல் நான்கு போட்டியாளர் இவ்விளையாட்டை பகடையை உருட்டி விளையாடலாம்.

2. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்களது குழியில் நான்கு வில்லைகள் இருக்கும். போட்டியின் நோக்கம் நான்கு வில்லைகளையும் பழத்திற்கு எடுத்துச்செல்வதாகும். இதை முதலில் செய்து முடிக்கும் போட்டியாளர் வெற்றியாளர் ஆவார்.

3. போட்டியாளர்கள் பகடையில் தாயம் விழுந்தால்தான் தனது குழியிலிருந்து ஆரம்பப்புள்ளிக்கு ஒரு வில்லையை எடுத்துச் சென்று அங்கிருந்து அவ்வில்லையை நகர்த்திச் செல்ல முடியும்.

4. ஒரு போட்டியாளர் எதிர்ப்போட்டியாளரின் வில்லை இருக்கும் கட்டத்தை அடைந்தால் அவ்வில்லையை மீண்டும் குழிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

5. எதிர்ப் போட்டியாளர், தாயம் விழுந்தால்தான் அவ்வில்லையை மீண்டும் ஆரம்பப் புள்ளியிலிருந்து நகர்த்திக் கொண்டு வர இயலும்.

பயிற்சி

கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளைச் சரியான எண்களைக் கொண்டு பொருத்துக.

கண்கள் மற்றும் மூக்கு வரைதல் (3)

ஒரு வட்டம் வரைதல் (1)

பூனைக்கான வண்ணம் தீட்டுதல் (7)

கழுத்து உடல் இரண்டு கால்கள் வரைதல் (5)

வாய் மற்றும் மீசை வரைதல் (4)

இரண்டு காதுகள் வரைதல் (2)

வால் வரைதல் (6)

மகிழ்ச்சி நேரம்

படிகளைக் கட்டளைகளைப் பின்பற்றிக் காகிதக் கப்பல் செய்வோம்.

* ஒரு சதுர காகிதத்தை எடுக்கவும்.

* அதனைப் பாதியாக மையத்தில் மடிக்கவும்.

* காகிதத்தைக் காற்பகுதியாக்க இரண்டாம் முறை மடிக்கவும்.

* நான்கில் ஒரு மூலைவிட்டத்தின் வழியாக / குறுக்கில் மடிக்கவும்.

* மற்ற மூன்று பக்கங்களை ஒன்றாகச் சேர்த்து எதிர்த் திசையில் மடிக்கவும்.

* மடிப்புகளைத் திறக்கவும். இப்போது காகிதக் கப்பல் தயார்.

2nd Maths: Term 3 Unit 6: Information Processing - Shapes and Objects

2nd Maths: Term 3 Unit 6: Information Processing - Relationship

தகவல் செயலாக்கம் | பருவம்-3 அலகு 6 | 2வது கணக்கு - உறவு முறை | 2nd Maths : Term 3 Unit 6 : Information Processing

2வது கணக்கு : பருவம்-3 அலகு 6 : தகவல் செயலாக்கம்

உறவு முறை

கலைச்சொற்கள் : உறவு, மூத்தோர், இளையோர்

உறவு முறை

பயணம் செய்வோம்

குடும்ப நேரம்

கலைச்சொற்கள் : உறவு, மூத்தோர், இளையோர்

யாழினி : தாத்தா, அங்கே பாருங்கள், என் நண்பன் வந்துகொண்டிருக்கின்றான்.

புண்ணியக்கோடி : அவனுடைய பெயர் என்ன? நான் அவனைப் பார்த்ததில்லையே!

யாழினி : அவனுடைய பெயர் செழியன், தாத்தா.

செழியன் : காலை வணக்கம், தாத்தா.

புண்ணியக்கோடி : காலை வணக்கம், செழியன் உன்னுடைய தந்தை யார்?

செழியன் : அன்பரசன் என்னுடைய தந்தை, அவர் ஓர் ஆசிரியர்.

புண்ணியக்கோடி : ஓ! பூவரசனின் பெயரனா (பேரனா) நீ !

செழியன் : ஆம், தாத்தா.

உரையாடல் தொடர்கிறது...

ஆசிரியருக்கான குறிப்பு

இன்னும் பல உறவுமுறைகளை இணைத்து மேலும் உரையாடலைத் தொடரலாம். குழந்தைகள் தங்கள் தாய், தந்தை வழி உறவு முறைகளுடன் தங்களுக்கான உறவை அறியச் செய்க.

கற்றல்

செழியனின் குடும்பம்

மேலே உள்ள குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அடிப்படையில் செழியனுக்கும் உள்ள உறவு முறை.

மேலும் அறிக

செழியனின் குடும்பத்தில் அனைவரையும் விட இளையவர் யார்?

விடை: வெற்றிச்செல்வி செழியனின் தங்கை

அந்த நபரை விட வயதில் மூத்தோரின் பெயர்களை எழுதுக.

விடை: பூவரசன், நாவரசி, அன்பரசன், முத்தழகி, செழியன்

பயிற்சி

பொருத்தமான உறவு முறைகளைக் கட்டங்களில் நிரப்புக:

மகன் - தந்தை

பேத்தி - தாத்தா

மருமகள் - மாமியார்

செழியனின் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர் எனில், செழியனின் உடன்பிறந்தவர் யார்? தாத்தா/ அப்பா/ சகோதரி

மகிழ்ச்சி நேரம்

உங்கள் குடும்ப வரைபடத்தை வரைந்து குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் வயதையும் அதில் குறிப்பிட்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

i) உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் உங்களைவிட மூத்தவர்கள் யாவர்?

விடை: தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மூத்த சகோதரர்

ii) உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களில் உங்கள் தாத்தா, பாட்டியை விட இளையவர்கள் யாவர்?

விடை: அப்பா, அம்மா, மூத்த சகோதரர்

iii) உங்கள் குடும்பத்தில் உங்கள் அப்பாவை விட மூத்தவர்கள் எத்தனை பேர்?

விடை: இரண்டு

iv) உங்கள் குடும்பத்தில் உங்களை விட இளையவர்கள் யாவர்?

விடை: யாரும் இல்லை

v) உங்கள் தந்தையின் தந்தையை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்?

விடை: தாத்தா