4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 7 : சான்றோர் மொழி - வெற்றி வேற்கை
சான்றோர் மொழி - வெற்றி வேற்கை
7. வெற்றி வேற்கை
உதவியால் பெறும் நன்மை
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி, ஆள்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழலாகும்மே
பொருள் அறிவோம்
பழைமையான ஆலமரத்திலுள்ள சிறு பழத்தின் ஒரு விதையானது தெளிந்த நீருள்ள குளத்தின் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாகும். அந்தச் சிறிய விதை, பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கும்பொழுது, அம்மரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப் படை, காலாட்படை ஆகியவற்றோடு மன்னனும் மற்றவர்களும் தங்க முடியும். அதுபோல, நீங்கள் செய்யும் உதவி சிறியதாக இருப்பினும், அது மற்றவர்களுக்கு மிகப்பெரிய பயனைத் தரும்.