முயல் அரசன்: கேள்விகள் மற்றும் பதில்கள்
வாங்க பேசலாம்
ஒரு காட்டில் நிறைய மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் காட்டிற்கு ஒரு புலி அரசனாக இருந்தது. அந்தப்புலி எல்லா மிருகங்களையும் அடித்துக் கொன்று சாப்பிட்டு வந்தது. ஒரு நாள், ஒரு விவசாயியின் தோட்டத்தில் விளைந்திருந்த கனிகளையும் காய்களையும் கிழங்குகளையும் வயிறாரத் தின்றது ஒரு முயல். ஆனாலும் அந்த முயலுக்கு மனதில் ஒரு கவலை இருந்தது.
புலிக்குக் கிடைக்கும் மரியாதை தனக்கும் கிடைக்க வேண்டும் என்றும் புலியை விட தானே சிறந்தவன் என்றும் புலிக்கும் காட்டில் உள்ள விலங்குகளுக்கும் நிரூபிக்க வேண்டுமென முயலுக்கு ஆசை தோன்றியது. உடனே முயல் சிந்தித்து செயல்படத் தொடங்கியது.
அதற்காக ஒரு திட்டம் தீட்டியது. புலி வரும் பாதையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து இருந்தது. அந்த வழியாக வந்த புலி முயலைப் பார்த்து, ”உனக்கு எவ்வளவு தைரியம்……. இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய். இப்பொழுது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறாயா உன்னை… என்று புலி கூறியது. அதனைக் கேட்ட முயல், “ஓடினேனா…. நானா…. உன்னைக் கண்டா…..? உனக்குச் செய்தியே தெரியாதா?
உனக்கு எங்கே தெரியப்போகிறது, இங்குக்கூட்டம் நடந்தபோது நீதான் அப்பாவி விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தாயே…. அந்தக் கூட்டத்தில், நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக்கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றின்” என்றது.
முயல் சொன்னதைக் கேட்ட புலி, “நான் அரசனாக நீடிக்கக் கூடாதா? அப்படியானால் வேறு யார் அரசனாக இருக்கப் போகிறது என்று கேட்டது. அதற்கு முயல், “என்னைத்தான் எல்லா விலங்குகளும் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தன” என்று கூறியது.
புலி முயலிடம், “நீ அரசனா! இப்போதே உன்னைக் கொன்று சாப்பிடுகிறேன் பார்” என்று முயலின் அருகில் சென்றது. முயல், நீ நம்பவில்லையென்றால் என்னை உன் முதுகில் ஏற்றிக் கொண்டு போ உனக்கு நிரூபிக்கிறேன்” என்றது. புலியும் அதற்கு
ஒப்புக் கொண்டு முயலைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு காட்டிற்குள் வலம் வந்தது.
இவைகளைக் கண்ட எல்லா மிருகங்களும் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்த்தன. இதனைக் கண்ட புலி, ”ஒரு வேளை முயல் சொன்னது சரியாகத்தான் இருக்குமோ என்று எண்ணியது. பிறகு முயலிடம், “அரசே நான் உங்களைத் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள்” என்று மன்னிப்புக் கேட்டது புலி. அதற்கு முயல், “இப்போது சொல் இந்தக் காட்டிற்கு அரசன் யார்? என்று புலியிடம் கேட்டது. புலியும் நீங்கள் தான் என்றது.
பிறகு முயல் புலியைப் பார்த்து, உன்னை மன்னித்து விடுகிறேன் நீ இந்தக் காட்டிலேயே இருக்கக் கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு” என்று கட்டளையிட்டது. அதனைக் கேட்ட புலியும் அக்காட்டை விட்டு ஓடிச் சென்றது. பிறகு முயல் மகிழ்ச்சியாக அந்தக்காட்டைச் சுற்றி வந்தது. இப்போதெல்லாமல் முயல் வயிறாரத் தின்றுவிட்டு நிம்மதியாக, சுகமாகப் பகல் வேளைகளில் ஒரு குட்டித் துக்கம் போட்டுக் கொண்டிருந்தது.
விமல் : புலி எதையும் ஆராயாமல் முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக் கொண்டது சரியானதா?
சவிதா : புலி, முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக்கொண்டது தவறுதான்.
விமல் : தவறு என்றால் ஏன் அப்படிச் செய்தது?
சவிதா : சந்தர்ப்பமும் சூழ்நிலையும் முயலுக்குச் சாதகமாக அமைந்ததே புல நம்பியதற்குக் காரணம்.
விமல் : எப்படி சூழ்நிலை சாதகமாக அமைந்தது என்று கூறுகிறாய்?
சவிதா : முயல், புலியைப் பார்த்து ஓடும் விலங்கு. அப்படியிருக்கும் போது, முயல் புலி வரும் வழியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தது முதல் காரணம்.
விமல் : அப்படியென்றால் முயல் செய்தது சரி என்கிறாயா?
சவிதா : சரியென்று சொல்லவில்லை. முயல் செய்த காரியத்தால் அனைத்து விலங்குகளும் புலியிடம் இருந்து காப்பாற்றப்பட்டனவே! அதனால் முயல் செய்தது நல்லதுதானே! என்றுதான் சொல்கிறேன். இருந்தாலும் புலி முயல் சொன்னதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.
விமல் : சரி உன்னுடன் உரையாடியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி! சவிதா : உனக்கும் நன்றி!
சிந்திக்கலாமா!
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
வினாக்களுக்கு விடையளி
எதிர்ச்சொல்லால் சொற்றொடரை நிறைவுசெய்க
- 1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் கவலை அடைவர்.
- 2. எப்பொழுதும் உண்மை பேச வேண்டும், பொய் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
- 3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின் தொடக்கம்.
- 4. கணினி மூலம் கல்வி கற்பது புதிய முறை. கரும்பலகை மூலம் கல்வி கற்றது பழைய முறை.
- 5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது தாழ்ந்த குணம்.
- 6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல் மெதுவாக பேச வேண்டும்.
சரி ✔, தவறு X எனச் சரியான குறியீடுக
- 1. புலி, முயலின் முன்னோரைக் கொன்று தின்றுவிட்டது. [✔]
- 2. முயல் புலிக்குக் கரும்பு கொடுத்தது. [X]
- 3. விலங்குகளின் கூட்டத்தில் புலி தூங்கிக் கொண்டிருந்தது. [X]
- 4. முயல் புலியிடம் காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் தன்னைக் கண்டு அஞ்சுவதாகக் கூறியது. [✔]
- 5. முயல் புலியைக் காட்டிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும் எனக் கூறியது. [X]
சக்கரம் காட்டும் ஈரெழுத்துச் சொற்கள் என்ன என்பதை கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிக்க.
- 1. உலகம் என்பதன் வேறு சொல் – பார்
- 2. திருவிழா என்றாலே இது இருக்கும் – தேர்
- 3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் – ஊர்
- 4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை – நீர்
- 5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் – மோர்
- 6. மரம், செடி, கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவுவது – வேர்
- 7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுப்படுத்த அண்டை நாடுகளோடு தொடுப்பது – போர்
- 8. பூத்தொடுக்க உதவுவது – நார்
எது முன்னே? எது பின்னே? அகர வரிசைப்படுத்துக.
மொழியோடு விளையாடு
காலியிடங்களைக் கூடையில் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக
பல்லி, நெல், பால், மல்லி, சொல், அகல்
வாள், தோள், வள்ளி, பள்ளி, நாள், வெள்ளி
யாழ், அகழ், தமிழ், புகழ், மகிழ்ச்சி, வாழ்
செயல் திட்டம்
கடைசி ஆசை :
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னனால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான். வெற்றி பெற்ற மன்னர் “உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன?” என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.
அதைக் குடிக்கமால் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும், “இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது” என்றார். இந்த நீரைக் குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றனர். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.
ஏமாற்றம் அடைந்த சிங்கம் :
காட்டில் சிங்கம் ஒன்று உணவு தேடி அலைந்தது எந்த விலங்கும் அதன் கண்களில் படவில்லை . பசியால் வாடிய அதன் கண்களுக்குப் புதர் அருகே இந்த சிறு முயல் ஒன்று தெரிந்தது. அந்த முயலைப் பிடித்து அது இந்தக் குட்டி முயல் என் பசியைப் போக்குமா? என்று நினைத்தது, அப்பொழுது சிறிது தொலைவில் மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கண்களில் பட்டது. கொழுத்த மான் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் முயலை விட்டு விட்டு மானிடம் ஓடியது அது.
சிங்கத்தைப் பார்த்து விட்ட மான் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடத்தொடங்கியது. எவ்வளவோ முயன்றும் சிங்கத்தால் அதைப் பிடிக்க முடியவில்லை. சிங்கத்தின் பார்வையில் இருந்தே மான் மறைந்தது.
ஏமாற்றம் அடைந்த சிங்கம் அந்தக் குட்டி முயலையாவது உண்போம் என்று புதர் அருகே வந்தது. அங்கே முயலைக் காணவில்லை முயலும் தப்பித்து விட்டதை அறிந்து வருந்தியது அது.
பேராசைக்காரன் :
ஓர் ஊரில் அகிலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது நண்பன் முகிலன். அகிலன் எதற்கெடுத்தாலும் பேராசை கொள்பவன். ஆனால், முகிலனோ பேராசை கொள்ளாதவன். இருவரும் ஒருநாள் காட்டிற்கு விறகு எடுக்கச் செல்கின்றனர். அங்கிருந்த செடி கொடி அழகை இரசித்துக் கொண்டு காய்ந்தக் குச்சிகளை மட்டும் முகிலன் எடுத்தான்.
காய்ந்த குச்சிகளை மட்டும் எடுக்காமல், பல மரக்கிளையை வெட்டி வீழ்த்தினான் அகிலன். ஏன் இப்படிப் பச்சை மரத்தை வெட்டுகின்றாய் என்று முகிலன் கேட்டான். அதற்கு அகிலன் அடுத்த முறை இந்த ஒடித்த பச்சைக் குச்சிகள் காய்ந்து எனக்கு நிறைய விறகுகள் கிடைக்கும் என்றான். திடீரென காட்டில் பயங்கர சத்தம் கேட்டது. இருவரும் சென்று பார்த்தனர்.
மயில் ஒன்று புதருக்குள் முள் வேலியில் சிக்கிக் கத்திக் கொண்டு இருந்தது. முகிலன் அதனைக் காப்பாற்றுகின்றான். இருவருக்கும் அந்த மயில் மரக்கன்றுகளைப் பரிசளித்தது. இது தங்கப்பூ தரும் என்று சொல்லிச் சென்றது. காட்டிற்குச் சென்று வந்த இருவரும் அதை வளர்க்கின்றனர். இருவரின் மரமும் வளர்ந்தது. ஆனால் முகிலன் மரம் பூக்கவில்லை .
அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை . அகிலன் ஒரு சில பூக்கள் பூத்ததும், பேராசை கொண்டு கிளையில் இத்தனைப் பூ என்றால், மரத்திற்குள் நிறைய பூக்கள் இருக்கும் என்று பேராசையில் மரத்தை வெட்டிவிட்டான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாந்து போனான். காலந்தாழ்த்தினால் முகிலன் மரமோ ஏராளமான தங்கப் பூக்கள் பூத்துக் குலுங்கின.