Wonders of Nature | Term 3 Unit 5 | Class 2 EVS Environmental Science Questions and Answers

வியத்தகு இயற்கை | பருவம்-3 அலகு 5 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

வியத்தகு இயற்கை

பருவம்-3 அலகு 5 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

மதிப்பீடு

1. பாகங்களைக் குறிக்க. (வெட்டுப்பட்ட பள்ளம் போன்ற அமைப்பு, உணர் நீட்சி)

பாகங்களைக் குறித்தல்

2. கோடிட்ட இடங்களை நிரப்பி எந்தத் தாவரம் அல்லது விலங்கு எனக் கண்டுபிடிக்க.

குறிஞ்சி மலர்

நான் மலையில் மலர்வேன். (மலையில் / பாலைவனத்தில்)

நான் ஊதா நீல நிறத்தில் இருப்பேன். ( பழுப்பு / ஊதா நீல )

என்னால் தான் நீலகிரி ( நீலகிரி / ஏலகிரி ) என்ற பெயர் உருவானது.

நான் யார்? குறிஞ்சி

நத்தை

எனக்கு இரண்டு இணை உணர்நீட்சிகள் உள்ளன. ( இரண்டு / நான்கு )

என்னுடைய கண்கள் உணர்நீட்சியில் ( உணர்நீட்சியில் / வாலில் ) காணப்படும்.

நான் என் உடலை என்னுடைய கூட்டினுள் இழுத்துக்கொள்வேன்.

நான் யார்? நத்தை

3. பொருத்துக.

பொருத்த வேண்டியவை:

சிலந்தி
வேர்க்கடலை
நத்தை
பல்லி
ஓடு
மீண்டும் வளரும் வால்
8 கால்கள்
தரைக்கு அடியில் வளரும்

சரியான விடை:

(i) சிலந்தி - 8 கால்கள்

(ii) வேர்க்கடலை - தரைக்கு அடியில் வளரும்

(iii) நத்தை - ஓடு

(iv) பல்லி - மீண்டும் வளரும் வால்

பாடப்புத்தகத்தில் உள்ளபடி:

பொருத்துக - விடை

4. சரியான சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வேர்க்கடலை தாவரத்தில் கொட்டைகள் மண்ணிற்கு அடியில் காணப்படும். (அடியில் / மேல்)

2. எருக்குத் தாவரத்தின் மலர்கள் கிரீடம் வடிவில் காணப்படும். ( கிரீடம் / கோள )

3. பூச்சிகள் மலரிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன. ( தேனை / பாலை )

4. சிலந்தி ஒரு பூச்சி அல்ல. ( தேனீ / சிலந்தி )

5. பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் வளரும். ( பல்லியின் / நாயின்)

5. மலர்கள் மற்றும் விலங்கின் பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(மல்லிகை / எருக்கு) (சிலந்தி / நத்தை) (வெட்சிப் பூ / சங்கு பூ)

பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுக

தன் மதிப்பீடு

* என்னைச் சுற்றியுள்ள வியத்தகு தாவர மற்றும் விலங்குலக இயற்கையை உற்றுநோக்கி வியந்தேன்.