OMTEX AD 2

My Body | 3rd Science Term 1 Unit 1 | Samacheer Kalvi Guide

My Body | 3rd Science Term 1 Unit 1 | Samacheer Kalvi Guide

எனது உடல் | முதல் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை

மதிப்பீடு

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நாம் வெளியில் சென்று -------------- (விளையாடும் முன் / விளையாடியப் பின்) கைகளைக் கழுவ வேண்டும்.
விடை : விளையாடியப் பின்
2. குடற்புழுக்கள் ------------- (இரத்த சோகை / சளி) யை உண்டாக்கும்.
விடை : இரத்த சோகை
3. ---------- (பழங்கள் / பொட்டல உணவுகள்) உண்பது உடலுக்கு நல்லது.
விடை : பழங்கள்
4. -------------- (துரித உணவுகளை உண்ணுதல் / உடற்பயிற்சி செய்தல்) மூளையின் செயலாற்றலை அதிகரிக்கும்.
விடை : உடற்பயிற்சி செய்தல்
5. ஒருவரது தொடுதல் உன்னை எரிச்சலடையச் செய்தால் அது ------------- (நல்ல தொடுதல் / தீய தொடுதல்).
விடை : தீய தொடுதல்
6. உடற்குறைபாடு உடையோரைக் குறிக்கும் சொல் ----------(ஊனமுற்றோர் / மாற்றுத்திறனாளிகள்).
விடை : மாற்றுத்திறனாளிகள்

II. சரியா? தவறா? எனக் கூறுக.

1. கைகளைக் கழுவ சோப்பைப் பயன்படுத்த வேண்டும்.
விடை : சரி
2. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் காலரா பரவும்.
விடை : சரி
3., குளிப்பதால் இரத்த ஓட்டம் குறையும்.
விடை : தவறு
4. மாற்றுத்திறனாளிகளிடம் பரிதாபம் கொள்ள வேண்டும்.
விடை : தவறு
5. காதுகளை சுத்தம் செய்ய எப்போதும் காது குடைவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
விடை : தவறு

III. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்க.

1. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

(i) திறந்த வெளியில் மலம் கழிப்பதால் நிலத்தடி நீர் மாசுபட்டு காலரா, வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் பரவுகின்றன.

(ii) குழந்தைகள் குடற்புழுக்களால் பாதிக்கப்பட்டு இரத்த சோகைக்கு ஆளாகின்றனர்.

2. குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

(i) உடலை சுத்தம் செய்கிறது.

(ii) அழுக்கையும், நாற்றத்தையும் போக்குகிறது.

(iii) நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

(iv) இரத்த சுற்றோட்டத்தை மேம்படுத்துகிறது.

3. தொடுதலின் வகைகளை எழுதுக.

(i) நல்ல தொடுதல்

(ii) தீய தொடுதல்

4. உனது பாதுகாப்பு வட்டத்தில் உள்ள நபர்கள் யாவர்?

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சகோதரன், சகோதரி மற்றும் ஆசிரியர் ஆகியோர் எனது பாதுகாப்பு வட்டத்தில் உள்ள நபர்கள் ஆவர்.

5. நம் உடலில் உள்ள புலனுறுப்புகளின் பெயர்கள் எழுதுக.

கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை நமது உடலின் புலனுறுப்புகள் ஆகும்.

IV. வாக்கியங்களை வரிசைப்படுத்துக.

(முதல் மற்றும் இறுதி வாக்கியங்கள் சரியான வரிசையில் உள்ளன)

(i) உனது கைகளை நனைத்து, சோப்பு போடவும்.

(ii) விரல் நுனிகளைத் தேய்க்கவும்.

(iii) விரல்களைக் கோர்த்தவாறு இரு கைகளையும் தேய்க்கவும்

(iv) ஒவ்வொரு கையின் பின்புறத்தையும் மற்ற கையால் தேய்க்கவும்.

(v) உள்ளங்கைகளைத் தேய்க்கவும்.

(vi) ஒவ்வொரு விரலின் பின்புறத்தையும் தேய்க்கவும்.

(vii) கட்டை விரல்களையும், மணிக்கட்டுகளையும் தேய்த்து, இரு கைகளையும் நீரால் கழுவவும்.

விடை :

(i) உனது கைகளை நனைத்து, சோப்பு போடவும்.

(ii) ஒவ்வொரு விரலின் பின்புறத்தையும் தேய்க்கவும்.

(iii) ஒவ்வொரு கையின் பின்புறத்தையும் மற்ற கையால் தேய்க்கவும்.

(iv) விரல்களைக் கோர்த்தவாறு இரு கைகளையும் தேய்க்கவும்

(v) விரல் நுனிகளைத் தேய்க்கவும்.

(vi) உள்ளங்கைகளைத் தேய்க்கவும்.

(vii) கட்டை விரல்களையும், மணிக்கட்டுகளையும் தேய்த்து, இரு கைகளையும் நீரால் கழுவவும்.

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. எப்போதெல்லாம் நாம் கைகளைக் கழுவ வேண்டும்?

(i) நாம் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவ வேண்டும்.

(ii) நாம் வெளியில் சென்று விளையாடிய பின் கைகளைக் கழுவ வேண்டும்.

2. உனது பாதுகாப்பு வட்டத்திற்குள் இல்லா ஒருவர் உன்னைத் தொட்டால், நீ என்ன செய்வாய்?

(i) என்னைத் தொடாதே என்று கூச்சலிடுவேன்.

(ii) அந்த இடத்தை விட்டு விரைந்து ஓடி விடுவேன்.

(iii) எனக்கு நம்பிக்கையான என் பெற்றோர் அல்லது பெரியவர்கள் அல்லது எனது ஆசிரியரிடம் விஷயத்தைக் கூறி அவர்களிடம் உதவி கேட்பேன்.

3. குடற்புழுக்கள் தோன்றக் காரணங்கள் யாவை?

(i) திறந்தவெளியில் மலம் கழிப்பதால், குடற்புழுக்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

(ii) நன்கு வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதால் குடற்புழுக்கள் தோன்றுகின்றன.

(iii) கைகளை சாப்பிடும் முன் கழுவாவிட்டால் குடற்புழுக்கள் தோன்றுகின்றன.

4. மாற்றுத்திறனாளிகளுக்கு நீ எவ்வாறு உதவுவாய்?

(i) மாற்றுத்திறனாளிகள் சாலையைக் கடக்க உதவுவேன்.

(ii) அவர்களுக்கு கதவுகளைத் திறந்து விடுதல், முதலில் அவர்கள் கடந்து செல்ல வழி விடுதல் போன்ற எளிய உதவிகளைச் செய்வேன்.

(iii) அவர்களை கேலி செய்யாமல் இயல்பான மனிதர்களைப் போல நடத்துவேன்.

(iv) மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களை சேதப்படுத்தாமல் பாதுகாப்பேன்.

தன் சுத்தத்திற்குப் பயன்படும் பொருள்களை (✓) குறியிடுக.

தன் சுத்தத்திற்குப் பயன்படும் பொருள்கள்

கிருமிகள்

கிருமிகள் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துமா?

(i) ஆம்

(ii) இல்லை

விடை : ஆம்
கிருமிகளைப் பார்த்திருக்கிறாயா?

(i) ஆம்

(ii) இல்லை

விடை : இல்லை
கிருமிகள் எங்கே காணப்படுகின்றன?

(i) கிருமிகள் சுகாதரமற்ற அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

(ii) நகங்களுக்கு அடியிலும், விரல்களுக்கு இடையிலும், கைகளிலும் இருக்கும்

கிருமிகள் பரவாமல் இருக்க நீ என்ன செய்வாய்?

(i) சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவுவது மிகவும் அவசியம்.

(ii) நாம் தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.

சரியான செயலுக்கு (✓) குறியும், தவறான செயலுகுக்கு ( x ) குறியும் இடவும்..

சரியான மற்றும் தவறான செயல்கள்

கீழே உள்ள குறிப்புகளைப் படிக்கவும். சரியான படத்துக்கு (✓) குறியும், தவறான பதிலுக்கு ( x ) குறியும் இடவும்

படங்களை பார்த்து குறியிடுக

வருண் குளிப்பதற்கு தேவையான பொருள்களைத் தேடுகிறான். பொருள்களுக்கு வண்ணம் தீட்டி, அவன் கண்டுபிடிக்க உதவுவோமா?

குளிப்பதற்கு தேவையான பொருள்கள்

பொருத்துக.

படத்தை உற்று நோக்கி, புலனுறுப்புகளையும் அதன் செயல்களையும் பொருத்த முயற்சி செய்யவும்.

பொருத்துக பயிற்சி - புலனுறுப்புகளும் அதன் செயல்களும்

உடல்திறன் சார்ந்த சொற்களைக் கண்டறிந்து, வட்டமிடுக.

கண்டறிய வேண்டிய சொற்கள்: (உறக்கம், ஆற்றல், நீச்சல், விளையாடு, யோகா, ஓடுதல், நடத்தல்)
சொல் வளம் - உடல்திறன் சார்ந்த சொற்கள்