முதல் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - காலம்
அலகு 5: காலம்
பயணம் செய்வோம்
நீ எப்போதாவது நிழல் உருவான விதத்தையும் மற்றும் அவை மாறும் விதத்தையும் கவனித்து இருக்கிறாயா?
குழந்தைகளே, கீழே கொடுக்கப்பட்ட படத்தில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?
இரண்டு பேர் நடக்கிறார்களா? மற்றும் அவர்களின் நிழல்களும் நடக்கிறதா? நிழல் என்ற வார்த்தையை கேள்விப்படாதவர் எவரும் இல்லை. ஏன்? எப்படி நிழல்கள் உருவாகின்றன.
நிழல்கள் உருவாவதற்கு சூரிய ஒளி தான் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளே, படங்களை உற்று நோக்கி, சூரியன் மற்றும் நிழல்களின் நிலை எப்படி ஒரு நாளில் நேரத்திற்கு நேரம் மாறுபடுகிறது என்பதைப் பற்றி விவாதிக்கவும்.
கடைசிப்படத்தில், சூரியன் இல்லை. இரவில் நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் கருமை வானம் தெரிகிறது. சூரியன் எங்கு உள்ளது? பூமியின் பின்னால் உள்ளது. இதை பகல் இரவு சுற்று என்கிறோம். ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு நாள் ஆகும். அடுத்த நாள் நாம் "காலை வணக்கம்” என ஆரம்பிக்கிறோம். அதாவது, 365 நாட்கள். இதை நாம் 1 வருடம் என அழைக்கிறோம். மேலும் “புத்தாண்டு வாழ்த்து” கூறி கொண்டாடுகிறோம்.
குழந்தைகளே, மேற்கண்ட படத்தில் மிக வேகமான போக்குவரத்து எது? மிக மெதுவான போக்குவரத்து எது? சிந்திக்க,
சென்றடையும் நேரத்தின் வித்தியாசத்தை எப்படி கணக்கிடுவாய்? நாம் கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தைக் கணக்கிடலாம்.