3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : உள்ளங்கையில் ஓர் உலகம்
உள்ளங்கையில் ஓர் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்
பயிற்சி
வாங்க பேசலாம்
(i) பாடலை இசை நயத்துடன் பாடி மகிழ்க.
(ii) இன்றைய சூழலில் கணினியின் தேவை குறித்துக் கலந்துரையாடுக.
கணினி, நம் அன்றாட வாழ்வில் பயன்படும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு முதலிய பல துறைகளில் கணினியின் பயன்பாடு பெருகிவருகிறது. சொல் விளையாட்டு, பொறியியல் வரைபடம் வரைதல், பொழுதுபோக்கு விளையாட்டு, கணிதத் தேற்றங்களின் தீர்வுகள் போன்ற அரிய பணிகளையும் கணினி எளிமையாகச் செய்கிறது.
பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எவ்விடத்தும் கணினியின் ஆட்சியே நிலவுகிறது. அது வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துணை செய்கிறது.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஏற்றம் என்ற சொல்லின் பொருள் ____________.
2. என்று + இல்லை - இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________.
3. முன்னே என்ற சொல்லின் எதிர்ச்சொல் ____________.
4. கணினி _________ வழியே அனைவரையும் இணைக்கிறது.
வினாக்களுக்கு விடையளிக்க.
1. தகவல்களை எதன் வழியே எளிமையாகப் பெற முடியும்?
2. கணினியின் பயன்கள் குறித்து இப்பாடலின் வழியே நீ அறிந்து கொண்டவற்றைக் கூறுக.
(i) கடிதப்போக்குவரத்தை விரைந்து செயல்படுத்துகிறது.
(ii) சிறந்த தகவல் களஞ்சியமாகச் செயல்படுகிறது.
(iii) உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாகக் கணினி செயல்படுகிறது.
(iv) உலகையே உள்ளங்கையில் தரவல்லது.
ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுவோமா?
காட்டிடுவேன் - தந்திடுவேன்
சொல்லிடுவேன் - செய்திடுவேன்
துணைபுரிவேன் - மகிழ்ந்திடுவேன்
விசைப்பலகையிலுள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களைக் கண்டறிவோமா?
சொல் விளையாட்டு.
அலைபேசியோடு தொடர்பில்லாத எழுத்துகளை நீக்கிச் சொற்களை உருவாக்குக எடுத்துக்காட்டு.
மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
1. அலையில் மிதந்த மீனை வலையில் பிடிச்சா விழுகல கலகலன்னு சிரிப்பு வரல
2. மரக்கிளைய கரத்தால் பற்றி தொங்கயில கையச் சுழற்றினதானல கீழே விழுந்தேன்
3. காத்துல விழுந்த பழத்துல சுவையில்லனு சொல்ல முடியல இந்த நினைப்பில நண்பன் விழுந்தான் பள்ளத்தில
கலையும் கைவண்ணமும்
கொடுக்கப்பட்ட படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க.
குழு விளையாட்டு
சொற்களைச் சொல்! மகுடம் சூட்டிக் கொள்!
மாணவர்களை இரு குழுவாகப் பிரித்துக் கொள்க. சொற்களுக்குரிய அட்டைகளை
என்றவாறு தயார் செய்து கொள்க. எழுத்துகளுக்குரிய அட்டைகளை தி, பு, த, ந, பி என்றவாறும் தயார் செய்து கொள்க.
முதல் குழுவில் உள்ளவர்கள் எழுத்துகளை ஒவ்வொருவராகக் கூற இரண்டாம் குழுவில் உள்ளவர்கள் உரிய சொற்களைக் கூறச் செய்க. பின்னர், குழுவை மாற்றி விளையாட்டைத் தொடர வேண்டும். சரியாகச் செய்த மாணவர்களுக்கு மகுடம் வைத்துப் பாராட்டுக.
இணைந்து செய்வோம்.
பின்வரும் செயலிகளுக்குப் பொருத்தமான படத்தினைப் பொருத்துக.
மாணவர்கள் பொருத்தமான படங்களை இணைக்க முயற்சிக்கவும்.
அறிந்து கொள்வோம்
அலைபேசியை முதன்முதலில் கண்டறிந்தவர் மார்ட்டின் கூப்பர்
மின்னல் வெட்டும்போது அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அலைபேசி இடிதாங்கிபோல் செயல்பட்டு மின்னலை உங்கள் பக்கம் ஈர்த்துவிடும்.
உன்னை அறிந்துகொள்
1. அலைபேசியை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
2. மின்னல் வெட்டும்போது அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது ஏன்?
சிந்திக்கலாமா?
இன்று வாணியின் பிறந்த நாள். வாணியின் மாமா வெளியூரில் வசிக்கிறார். பிறந்தநாளுக்கு அவர் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவளுடைய மாமா எப்படி வாழ்த்துகள் தெரிவிப்பார்?
(i) வாணிக்கு தொலைபேசி அல்லது அலைபேசியின் மூலம் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.
(ii) மின்னஞ்சல், முகநூல், புலனம் போன்றவற்றின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.
செயல் திட்டம்.
கணினியில் புதிர் விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.
(மாணவர் செயல்பாடு)