OMTEX AD 2

3rd Std Tamil Term 1 Chapter 2 Kannan Seitha Uthavi Questions and Answers

3rd Std Tamil Term 1 Chapter 2 Kannan Seitha Uthavi Questions and Answers

கண்ணன் செய்த உதவி: கேள்விகள் மற்றும் பதில்கள்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2

வாங்க பேசலாம்

1. கண்ணனைப் போல நீ யாருக்காவது உதவி செய்திருக்கிறாயா? உனது அனுபவத்தைக் கூறு.

நான் ஒருமுறை பள்ளிக்கு வரும்போது இருசக்கர வாகனம் ஒன்று பழுதாகி நின்று கொண்டு இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த பெண்மணி ஒருவர் என்ன செய்வது? என்று தவித்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாக சென்ற யாரும் அப்பெண்மணிக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நான் வரும் பாதை அந்தப் பெண்மணிக்கு புதியது போல் தெரிந்தது. நான் உடனே அப்பெண்மணியிடம் வண்டி என்ன பஞ்சரா? என்று கேட்டேன். அப்பெண்மணியும் ஆம்! அவசரமாக ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். குறுக்குப் பாதை என்பதால் இப்படி வந்தேன். ஆனால் பஞ்சராகி விட்டது. எனக்கு பக்கத்தில் ஏதேனும் ஒர்க்ஷாப் (இருசக்கர வாகன பழுது நீக்குமிடம்) உள்ளதா? உனக்கு தெரியுமா? என்று கேட்டார்கள். நான் உடனே பக்கத்தில் தான் உள்ளது. எனக்கு மெக்கானிக் அண்ணனைத் தெரியும் என்று கூறி விரைந்து ஓடி அன்னை ஆட்டோ ஒர்க்ஸ் மெக்கானிக் வேல்பாண்டி அண்ணனை கூட்டி வந்தேன். 10 நிமிடத்தில் வண்டியை சரிசெய்து கொடுத்தார்கள். அந்தப் பெண்மணி மிகவும் மகிழ்ந்தார்கள்.

2. உனது ஊரில் 108 வாகனத்தைப் பார்த்திருக்கிறாயா? எதற்காக வந்தது? கலந்துரையாடு.

முகிலன் : 108 வாகனத்தை பார்த்திருக்கிறேன்.

செல்வி : 108 வாகனம் என்றால் என்ன?

முருகன் : அவசர கால ஆம்புலன்ஸ் அழைக்கும் எண் 108

மாரி : எதற்கெல்லாம் 108 வாகனத்தை அழைக்கலாம்?

பாத்திமா : 24 × 7 மணிநேரமும் சேவை கட்டணமில்லாத சேவை. உயிரைக் காப்பாற்றவும், விபத்துகளின் போது அடிபட்டவரைக் காப்பாற்றவும், தீ விபத்தின் போது தீக்காயம் பட்டவரை காப்பாற்றவும் தமிழகத்தில் 6800 மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச சிகிச்சை வழங்க 108 ஆம்புலன்ஸ் உதவுகிறது என்று என் ஆசிரியர் கூறினார்.

செல்வன் : வேறு என்னென்ன தேவைகளுக்கு 108 எண்ணை தொடர்பு கொள்ளலாம்?

கந்தன் : மாரடைப்பு, தாய் / சிசு பிரச்சனைகள், காக்கா வலிப்பு, பாம்பு கடி, சுவாசக் கோளாறுகள் போன்ற அதிதீவிர உடல்நோய் பிரச்சனைக்கும் 108 எண்ணை அழைக்கலாம் என்று என் தந்தை கூறியுள்ளார்.

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் ___________.

அ) சந்திரன்

ஆ) சூரியன்

இ) விண்மீன்

ஈ) நெற்கதிர்

விடை : ஆ) சூரியன்

2. மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) மகிழ்ச்சி + அடைந்தான்

ஆ) மகிழ்ச்சி + யடைந்தான்

இ) மகிழ்ச்சியை + அடைந்தான்

ஈ) மகிழ்ச்சியை + யடைந்தான்

விடை : அ) மகிழ்ச்சி + அடைந்தான்

3. ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

அ) ஒலி + யெழுப்பி

ஆ) ஒலி + எழுப்பி

இ) ஒலியை + யெழுப்பி

ஈ) ஒலியை + எழுப்பி

விடை : ஆ) ஒலி + எழுப்பி

பொருத்தமான குறியிடுக. (✓) சரி, ( X ) தவறு.

1. கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான். (✓)

2. கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான். ( X )

3. பெரியவர் அலைபேசியில் 107 ஐ அழைத்தார். ( X )

4. ஆசிரியரும் மாணவர்களும் கண்ணனைப் பாராட்டினர். (✓)

அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக

பொருள் வேறுபாடு அறிக

1. ஒலி : சத்தம்

2. ஒளி : வெளிச்சம்

3. பள்ளி : பள்ளிக்கூடம்

4. பல்லி : ஒரு சிறிய உயிரி

5. காலை : அதிகாலை

6. காளை : காளை மாடு

சரியான சொல்லால் நிரப்பிப் படி

ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல்கள்

1. ஒட்டகச்சிவிங்கி மிகவும் உயரமானது.

2. அதன் கழுத்து நீளமாக இருக்கும்.

3. ஒட்டகசிவிங்கிகுக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு கத்த முடியாது.

4. ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.

5. ஒட்டகச்சிவிங்கி இலைதழைகளைத் தின்னும்.

( வலிமை, கத்த, இலைதழைகளைத், நீளமாக, உயரமானது )

வினாக்களுக்கு விடையளி

1. கண்ணன் எங்குப் புறப்பட்டான்?

கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்.

2. பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?

பள்ளி செல்லும் வழியில் கண்ணன் ஒரு பெரியவரைப் பார்த்தான்.

3. பேருந்து எதில் மோதியது?

பேருந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியது.

4. பெரியவர் எந்த எண்ணிற்குச் செல்பேசியில் பேசினார்?

பெரியவர் 108 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேசினார்.

5. ஆசிரியர் கண்ணனை எதற்காகப் பாராட்டினார்?

கண்ணன் விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களுக்கு உதவினான். அதனால் ஆசிரியர் பாராட்டினார்.

உன்னை அறிந்துகொள்

நீ உன் வீட்டில் யாருக்கு என்ன உதவிகளைச் செய்கிறாய்? வகுப்பறையில் கலந்துரையாடு.

அசோக் : அம்மாவுக்கு காயப் போட்ட துணிகளை மடித்து வைப்பேன்.

மணி : கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வருவேன்.

ராம் : துணிக்கு சோப்பு போடும் போது தண்ணீர் பிடித்துக் கொடுப்பேன்.

மார்ட்டின் : என் அண்ணனுக்கு ஷூ பாலிஷ் போட்டுக் கொடுப்பேன்.

கோமதி : என் அக்காவின் மிதிவண்டியை துடைத்து வைப்பேன்.

கார்த்திக் : என் அப்பாவின் இருசக்கர வாகனத்தை துடைப்பேன்.

ராஜேஷ் : என் அம்மாவுடன் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்வேன்.

சங்கரி : என் அக்காவிற்கு கூந்தலில் சடை பின்னி விடுவேன்.

ரமேஷ் : என் தம்பிக்கு வண்ணம் தீட்ட சொல்லிக் கொடுப்பேன்.

சித்ரா : என் தம்பியின் விளையாட்டுப் பொருளை சரிசெய்து தருவேன்.

நாகராஜன் : என் அம்மாவுக்கு உதவியாக பாய், தலையணைகளை மடித்து வைப்பேன்.

சொல் விளையாட்டு

வாத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

சொல் விளையாட்டு

எ.கா: நகை

1. புகை

2. நரி

3. சிரிப்பு

4. நடிப்பு

5. நகைப்பு

6. திகைப்பு

சிந்திக்கலாமா?

அகில் பள்ளியில் படிக்கும் சிறுவன். அவனுக்கு உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதும். பிறருக்கு உதவி செய்வதும் பிடிக்கும். ஆனால் அவன் பெற்றோர்கள், அகில் சிறுவன் என்பதால், அவனுக்கு ஆபத்து ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகின்றனர்.

அவர்களின் பயம் சரியானதா? இல்லையா? ஏன்?

இல்லை