3rd Standard Tamil - Term 3 Chapter 7: The Pride of the Tamil Language - Questions & Answers

பருவம் 3 இயல் 7 | 3 ஆம் வகுப்பு தமிழ் - தமிழ்மொழியின் பெருமை

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7

தமிழ்மொழியின் பெருமை: கேள்விகள் மற்றும் பதில்கள்

பயிற்சி

வாங்க பேசலாம்

தமிழின் இனிமையைப் பாரதியார் எப்படியெல்லாம் புகழ்கிறார்? கலந்துரையாடுக.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்றும், மேலும்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”

என்று தமிழைப் போற்றிப் புகழ்கிறார் பாரதியார்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தமிழுக்கு அமுது என்று பேர் என்று பாடியவர்_________.

அ) பாரதியார்

ஆ) கண்ணதாசன்

இ) கவிமணி

ஈ) பாரதிதாசன்

விடை : ஈ) பாரதிதாசன்


2. ‘செம்மை + மொழி' இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________.

அ) செம்மொழி

ஆ) செம்மொலி

இ) செம்மொளி

ஈ) செமொழி

விடை : அ) செம்மொழி


3. 'கீழடி' அகழாய்வு நடந்த மாவட்டம் ______________.

அ) புதுக்கோட்டை

ஆ) தருமபுரி

இ) சிவகங்கை

ஈ) திருச்சி

விடை : இ) சிவகங்கை


4. 'ஆதித்தமிழர்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

அ) ஆதி + தமிழர்

ஆ) ஆதி + தமிளர்

இ) அதி + தமிழர்

ஈ) ஆதி + தமிழர்

விடை : அ) ஆதி + தமிழர்


5. பொலிவு - இச்சொல்லுக்குரிய பொருள்__________.

அ) மெலிவு

ஆ) அழகு

இ) துணிவு

ஈ) சிறப்பு

விடை : ஆ) அழகு

கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்துச் சரி ✓ தவறு X எனக் குறியிடுக.

1. இயல், இசை, நாடகம் ஆகியன தமிழின் பெருமையை வெளிப்படுத்தின. ( ✓ )
2. தமிழ்மொழி ஆதித்தமிழர் மொழி' இல்லை. ( X )
3. 'வீரம்' தமிழரின் பண்புகளுள் ஒன்று. ( ✓ )
4. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தொடர் ஆத்திசூடியில் உள்ளது. ( X )
5. சிவகங்கையிலுள்ள கீழடியில் அகழாய்வு நடைபெறவில்லை. ( X )

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக.

  • தொன்மை -பழமை
  • அகழாய்வு -நிலத்தைத் தோண்டி ஆராய்தல்
  • ஆபரணம் -அணிகலன்
  • கேளிர் -உறவினர்
  • பொலிவு -அழகு

மொழியோடு விளையாடு

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லை முழுமையடையச் செய்க.

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லை முழுமையடையச் செய்க

வினாக்களுக்கு விடையளிக்க.

1. தமிழ்மொழியின் பெருமைகளுள் இரண்டு எழுதுக.

(i) உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.

(ii) இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாய் விளங்கி மனித வாழ்விற்கு இலக்கணம் கண்ட மொழி.


2. 'கீழடி' அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவை?

பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், அணிகலன்கள், நமது பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆகியவை ‘கீழடி' அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் ஆகும்.


3. தமிழரின் பெருமையைக் கணியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்னும் புறநானூற்றுப் பாடல் தொடர் இன்றளவிலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்மொழியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.


4. தமிழ்மொழி ‘செம்மொழி' என்று ஏன் அழைக்கப்படுகிறது?

தமிழ்மொழியானது பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் திறனுள்ளதால் செம்மொழி என அழைக்கப்படுகிறது.


5. தமிழ்மொழி பற்றி நீவிர் அறிந்த கருத்தை எழுதுக.

(i) நம் தாய்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டுக்குமேல் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

(ii) நாளும் பொலிவுடன் வளர்தமிழாய் தன் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தி வருகிறது.

சொல் விளையாட்டு.

பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைத் தெரிவு செய்து, சொற்றொடர் உருவாக்குக.

1. இயல் என்பது Option Image 1 நடை.

இயல் என்பது, எழுத்து நடை


2. பாறை ஓவியங்களில் தமிழர்களின் Option Image 2 விளையாட்டுகள் பற்றிய செய்திகள் உள்ளன.

பாறை ஓவியங்களில் தமிழர்களின் வீரம் சார்ந்த விளையாட்டுகள் பற்றிய செய்திகள் உள்ளன.


3. பிறமொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால், தமிழ்மொழி Option Image 3 ஆகும்.

பிறமொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால், தமிழ்மொழி செம்மொழி ஆகும்


4. நடுவண் அரசு Option Image 4 ஆம் ஆண்டு தமிழைச் 'செம்மொழி' என அறிவித்தது.

நடுவண் அரசு 2004 ஆம் ஆண்டு தமிழைச் 'செம்மொழி' என அறிவித்தது.

சிந்திக்கலாமா?

இனியன் தன் நண்பர்களிடம் பிறமொழிகள் கற்பதிலேயே, ஆர்வம் காட்டுவேன் என்று கூறுகிறான்

வீணா தன் தோழிகளிடம் பிறமொழிகளையும் கற்பேன் தமிழ்மொழிக்கு முதலிடம் தருவேன். ஏனெனில் தாய்மொழியே சிந்திக்கும் திறனை வளர்க்கும் என்கிறாள்

இனியன், வீணா இவர்களின் பேச்சிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வது என்ன?

இனியன் பிறமொழியில் காட்டும் ஆர்வத்தை தமிழ் மொழியில் காட்டுவதாகத் தெரியவில்லை.

வீணா பிறமொழியையும் கற்கிறாள், அதே சமயம் தமிழுக்கு முதலிடம் தருகிறாள். ஏனெனில், தாய்மொழிதான் சிந்திக்கும் திறனை வளர்க்கும் என்பதை வீணா அறிந்திருந்தாள்.

Tamil Mozhiyin Perumai Infographic

உன்னை அறிந்துகொள்.

'லாங்குவேஜ்' என்ற சொல் எவ்வாறு தோன்றியது?

லிங்குவா என்பது இலத்தின் மொழிச்சொல் இச்சொல் மூலம் லாங்குவேஜ் என்ற சொல் தோன்றியது. இதனைத் தமிழில் நாம் ‘மொழி' என அழைக்கிறோம்.