OMTEX AD 2

3rd Grade Tamil - Term 1 Chapter 1: Tamil Amuthu | Questions and Answers

3rd Grade Tamil - Term 1 Chapter 1: Tamil Amuthu | Questions and Answers

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ் அமுது

கவிஞர் கண்ணதாசன்

பயிற்சி

வாங்க பேசலாம்

நீங்கள் நினைப்பதை எவ்வாறு வெளிப்படுத்துவீர்.

உமக்கு தெரிந்த தமிழ்மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றை கூறுக.

தமிழ்மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் :

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே

வான மளந்த தனைத்து மளந்திடு

வண்மொழி வாழியவே.

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழ்யவே.

- பாரதியார்

இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு

இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது!

கனியைப் பிழிந்திட்ட சாறு எங்கள்

கதியில் உயாந்திடயாம் பெற்ற பேறு!

தனிமைச் சுவையுள்ள சொல்லை எங்கள்

தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை

நனியுண்டு நனியுண்டு காதல் தமிழ்

நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்.

- பாரதிதாசன்

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. நித்திலம் இச்சொல்லின் பொருள் _________.

அ) பவளம்

ஆ) முத்து

இ) தங்கம்

ஈ) வைரம்

விடை : ஆ) முத்து

2. செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

அ) செம்மை + தமிழ்

ஆ) செந் + தமிழ்

இ) செ + தமிழ்

ஈ) செம் + தமிழ்

விடை : அ) செம்மை + தமிழ்

3. உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______.

அ) உன்னைத் தவிர

ஆ) உனைத்தவிர

இ) உன்னை தவிர

ஈ) உனை தவிர

விடை : அ) உன்னைத் தவிர

இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா...

தோண்டுகின்ற – வேண்டுகின்ற

ன்னை – பொன்னோ

கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்தும் பயிற்சி

எ.கா: பொ ள் ன் பொ ரு - பொன்பொருள்

செ ழ் மி த ந் - செந்தமிழ்
ண வ கு ங் - வணங்கு
போ றி ற் - போற்றி
தி ம் த் ல நி - நித்திலம்
உ கி ல் ல - உலகில்

உன்னை அறிந்துகொள்

தனிப்பட்ட விவரங்கள் நிரப்பும் படிவம்

1. எனது நாடு - இந்தியா

2. எனது மாநிலம் - தமிழ்நாடு

3. எனது மாவட்டம் - திருநெல்வேலி

4. எனது ஊர் - பாளையங்கோட்டை

5. எனது மொழி - தமிழ்

6. எனது பள்ளி - அரசு மேல்நிலைப்பள்ளி

7. எனது வகுப்பு - மூன்றாம் வகுப்பு

8. என் ஆசிரியர் - பத்மாவதி

9. என் நண்பர்கள் - கவின், ஆதி

10. வீட்டில் எனக்குப் பிடித்தவை - பூந்தோட்டம், பூஜையறை

11. பள்ளியில் எனக்குப் பிடித்தவை - நண்பர்கள்

12. எனது திறமைகள் - பாடுதல், ஓவியம் வரைதல்

13. என் பெற்றோர் - முருகன் - வேலம்மாள்

14. பெற்றோர் அலைபேசி எண் - 9042562010

மொழியோடு விளையாடு

"தொட்டால் சுருங்கி"

மாணவர்கள் வட்டமாக நிற்க வேண்டும். ஒரு மாணவன் வட்டத்திற்கு வெளியே சுற்றி ஓடி வரவேண்டும். ஓடி வரும் மாணவன் நிற்கின்ற யாராவது ஒரு மாணவன் முதுகில் தொட்டு ஒரு சொல்லைக் கூற வேண்டும். அந்தச் சொல்லில் முடியும் எழுத்தை முதலாகக்கொண்டு வேறு சொல்லைத் தொடப்பட்ட மாணவன் கூற வேண்டும். அவன் சொல்லைக் கூறிவிட்டால் ஓடி வரும் மாணவனே மீண்டும் ஓடி வந்து வேறு மாணவனைத் தொட்டு வேறு சொல் கூற வேண்டும். தொடப்பட்டவன் சரியாகக் கூற வில்லையென்றால் அவன் ஓடிவர வேண்டும். இவ்வாறே விளையாட்டைத் தொடரலாம்.

வட்டமாக நின்று விளையாடும் மாணவர்கள்

எ.கா: விலங்கு என்று சொன்னால்

குருவி என்று சொல்ல வேண்டும்.

செயல் திட்டம்

கேட்டு, எழுதி வரலாமா...

தமிழ்மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் இரண்டை எழுதி வருக.

தமிழ்மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்கள்:

தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

- பாரதிதாசன்

அன்னை மொழியே !

அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை

முகிழ்த்த நறுங்கனியே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்