3rd Grade Maths: Term 1 Unit 3 - Patterns in Shapes | Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு கணக்கு: முதல் பருவம் அலகு 3 - அமைப்புகள் (Patterns)

3 ஆம் வகுப்பு கணக்கு: முதல் பருவம் அலகு 3 - அமைப்புகள் (Patterns)

வடிவங்களின் அமைப்புகள்

அச்சடித்தல் முறையில் ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற வடிவங்களின் அமைப்புகளை உருவாக்கலாம்.

எடுத்துகாட்டு:

கைகள் மற்றும் கால்கள் கொண்டு ஏற்படுத்திய அச்சு அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கைகள் மற்றும் கால்கள் அச்சு அமைப்பு

செயல்பாடு 1

வரைபடத்தாளில் பின்வருவனவற்றை அச்செடுத்து அமைப்புகளை உருவாக்கி, உங்கள் வகுப்பறையை அலங்கரிக்கவும்.

(1) விதைகள்

(2) பொத்தான்கள்

(3) குவளை முடிகள்.

பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்

செயல்பாடு 2

(1) விதைகளை உபயோகித்து ஒரு அழகான அமைப்பை உருவாக்குக.

(2) பொத்தான்கள் மூலம் ஒரு அமைப்பை உருவாக்குக.

(3) தேவையில்லாத / உபயோகப்படுத்திய டூத் பேஸ்ட் முடி, பாட்டில் மூடியைக் கொண்டு ஒரு அழகான அமைப்பை உருவாக்குக.

(4) சமீபத்தில் வெட்டிய, உனது அழகான சிறிய நகங்களைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கவும்.

நான் உருவாக்கிய அமைப்புகள்

மாணவர் உருவாக்கிய அமைப்புகள்

வடிவியல் வடிவங்களின் அமைப்புகள்

அமைப்புகள் இரண்டு வகைப்படும். அவை.

❖ வளரும் அமைப்புகள்

❖ சுழலும் அமைப்புகள்

அ. வளரும் அமைப்புகள்

நேர்க்கோடுகள் மற்றும் பிற வடிவியல் வடிவங்களைக் கொண்டு சீராகத் தொடர்ந்து வரும் வடிவமைப்புகள் மற்றும் அமைப்புகள் “வளரும் அமைப்புகள்” எனப்படும்.

எடுத்துக்காட்டு:

வளரும் அமைப்புகள் எடுத்துக்காட்டு

இவற்றை முயல்க

வட்டம் மற்றும் சதுரத்தை உபயோகப்படுத்தி வளரும் அமைப்புகளை உருவாக்கவும்.

வட்டம் மற்றும் சதுரம் கொண்டு உருவாக்கப்பட்ட வளரும் அமைப்புகள்

பயிற்சி

a. வளரும் அமைப்புகளைத் தொடர்க.

வளரும் அமைப்புகள் பயிற்சி 1

b. வளரும் அமைப்புகளைத் தொடர்க

வளரும் அமைப்புகள் பயிற்சி 2

ஆ. சுழலும் அமைப்புகள்

நேர்க்கோடுகள் மற்றும் பிற வடிவியல் வடிவங்களைக் கொண்டு சீராகத் தொடர்ந்து திரும்பத் திரும்ப வரும் அமைப்புகள் “சுழலும் அமைப்புகள்" எனப்படும்.

எடுத்துக்காட்டு:

சுழலும் அமைப்புகள் எடுத்துக்காட்டு

பயிற்சி

கொடுக்கப்பட்ட இடத்தில் பின்வரும் தொடர் அமைப்புகள் 3 படிகள் வரை தொடரவும்.

சுழலும் அமைப்புகள் பயிற்சி

செயல்பாடு 3

அமைப்புகளைப் பின்பற்றி தோரணங்களை நிறைவு செய்க.

தோரணங்களை நிறைவு செய்தல்

முயன்று பார்

சில சுழலும் அமைப்புகளை, நீங்களே சொந்தமாக வரையவும்.

சொந்தமாக சுழலும் அமைப்புகளை வரைதல்

வண்ணங்கள் மற்றும் அமைப்புகளை பல்வேறு வழிகளில் ஒன்றினைப்பதன் வழியாக அமைப்புகளை உருவாக்கலாம்

வண்ணங்கள் மற்றும் அமைப்புகள்

செயல்பாடு 4

1. அடுத்த வில்லையுடன் அமைப்புகளை பொருத்துக.

அமைப்புகளை பொருத்துக

2. பின்வருவனவற்றைப் பொருத்துக

பொருத்துக பயிற்சி

வடிவங்கள் மற்றும் அமைப்புகளில் சமச்சீர் வடிவம்.

முயன்று பார்

சமச்சீர் வடிவம் உருவாக்குதல்

(1) ஒரு காகிதத் துண்டை எடுத்துக்கொள்க.

(2) அதில் சில சொட்டுகள் மைத்துளிகளைத் தெளிக்க.

(3) பிறகு அந்தக் காகிதத்தை மடித்து அழுத்துக.

(4) உனக்கு ஒரு சமச்சீர் வடிவம் கிடைக்கும்.

சமச்சீர்

வரையறை: ஒரு பாகத்தில் உள்ள வடிவத்தை, நகர்த்தியோ, திருப்பியோ அல்லது சுழற்றியோ பார்த்தால், அந்த வடிவம், மற்றோரு பாகத்தின் வடிவத்தைப் போல இருக்கும் இதுவே சமச்சீர் ஆகும்.

செய்து பார்ப்போம்

சமச்சீர் வடிவம் செய்து பார்த்தல்

(1) தாளை எடுத்து படத்தில் காட்டியவாறு இரண்டாக மடிக்க

(2) ஏதேனும் ஒரு வடிவத்தை மடித்த தாளின் விளிம்பில் வரைக

(3) வடிவத்தை வெட்டி எடுக்க

(4) தாளைப் பிரிக்க

எடுத்துக்காட்டு:

சமச்சீர் எடுத்துக்காட்டு

சமச்சீர் கோடு

இரு பாகங்களில் ஒரு அரைப்பாகத்தில் உள்ள வடிவமானது மற்றொரு அரைப்பாகத்தின் வடிவத்தைப் போல் இருப்பதை அறிக படத்தில் முழு வடிவத்தை இரண்டு சமபாகங்களாகப் பிரிக்கும் கோடு “சமச்சீர் கோடு” எனப்படும்.

பின்வரும் ஆங்கில எழுத்துகளுக்கு சமச்சீர் தன்மையில்லை, எனவே அவற்றிற்கு சமச்சீர் கோடுகள் இல்லை.

F G J L N P Q R S Z

இவற்றை முயல்க

அரைவடிவ சமச்சீர் வடிவத்தை, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் மேல் வைத்து பார்த்தால், இரு முழு சமச்சீர் வடிவம் கிடைப்பதைக் கவனிக்கலாம்

கண்ணாடியில் சமச்சீர் வடிவம்

சமச்சீர் வடிவங்கள்

வரையறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் காகித மாதிரியை பெரியவர்களின் துணைகொண்டு வெட்டி எடுத்து அவற்றை கண்ணாடியின் முன்வைத்து கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை உற்று நோக்கவும். அந்த வடிவங்களின் மீதிப்பாதியை உங்களால் காணமுடியும்.

எடுத்துக்காட்டு: 1

சமச்சீர் வடிவங்கள் எடுத்துக்காட்டு 1

எடுத்துக்காட்டு: 2

சமச்சீர் கோடு, மடிப்பு கோடு, முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் கோடு

சமச்சீர் கோடுகள் எடுத்துக்காட்டு 2

செயல் திட்டம்: செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலிருந்து சில சமச்சீர்த்தன்மை கொண்ட படங்களை சேகரித்து ஒரு படத்தொகுப்பு (Album) உருவாக்கவும்.

செயல்பாடு 5

சமச்சீர் உருவத்தை நிறைவு செய்யவும்

சமச்சீர் உருவத்தை நிறைவு செய்தல் பயிற்சி

ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர், குழந்தைகளியிடம் அன்றாட வாழ்க்கையில் தென்படும் சமச்சீர்த்தன்மை கொண்ட படங்களைச் சேகரிக்க வழிகாட்ட வேண்டும்.

செயல்பாடு 6

a. நேர்கோட்டு சமச்சீர் தன்மை கொண்ட எழுத்துக்களை எழுது.

நேர்கோட்டு சமச்சீர் எழுத்துக்கள்

b. சமச்சீர் அற்ற வடிவத்தை வட்டமிடவும்

சமச்சீர் அற்ற வடிவங்கள்

செயல்பாடு 7

சமச்சீர் கோட்டின் மீது, மற்றொரு பாதியினை வரைந்து சமச்சீர் ஆக்கவும்.

பாதி வடிவத்தை நிறைவு செய்தல்

செயல்பாடு 8

ஒரு சில ஆங்கில எழுத்துகளில் சமச்சீர் கோட்டினை காணலாம். பின்வரும் கோடிட்ட பகுதியை நிரப்பவும்.

0 சமச்சீர்: 10

1 சமச்சீர் (கிடைமட்ட): 9, B, C, D, E, H, I, K, O, X

1 சமச்சீர் (செங்குத்து): 11, A, H, I, M, O, T, U, V, W, X, Y

2 சமச்சீர் (கிடைமட்ட & செங்குத்து): 4, H, I, O, X