3rd Grade Maths: Geometry - Understanding Diagonals | Term 3 Unit 1

3rd Grade Maths: Geometry - Understanding Diagonals | Term 3 Unit 1

வடிவியல்: மூலைவிட்டம்

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1

மூலைவிட்டம் (Diagonal)

மூலைவிட்டம் என்பது ஒரு வடிவத்தின் எதிர்முனைகளை இணைக்கும் நேர்க்கோடு ஆகும்.

சதுரத்தின் மூலைவிட்டம்

சதுரத்தின் முனைகளை உற்று நோக்கவும்.

சதுரத்தின் முனைகள்

ஒரு சதுரத்தின் எதிர் முனைகளை இணைக்கும் நேர்க்கோடு அந்தச் சதுரத்தின் மூலைவிட்டம் ஆகும்.

ஒரு சதுரத்திற்கு இரண்டு மூலைவிட்டங்கள் உள்ளன.

ஒரு கனச்சதுரத்தின் மூலைவிட்டங்கள்

ஒரு கனச்சதுரத்திற்கு ஆறு சதுர முகங்கள் உள்ளன. ஒவ்வொரு சதுரத்திற்கும் இரண்டு மூலைவிட்டங்கள் உள்ளன.

முகங்களின் மூலைவிட்டங்கள் = 6 × 2 = 12.

உட்பக்கங்களின் 4 முனைகளின் மூலைவிட்டங்கள் = 4

ஒரு கனச்சதுரத்தின் மொத்த மூலைவிட்டங்களின் எண்ணிக்கை = 12 + 4 = 16

கனச்சதுரத்தின் மூலைவிட்டங்கள்

பயிற்சி

கொடுக்கப்பட்ட செவ்வகத்தின் மூலைவிட்டங்களை வரைக.

முன்:

மூலைவிட்டங்கள் இல்லாத செவ்வகம்

பின்:

மூலைவிட்டங்களுடன் செவ்வகம்

ஒரு கனச்செவ்வகத்தில் எத்தனை மூலைவிட்டங்கள் உள்ளன?

விடை: 12.

பொருத்துக

இரு பரிமாண வடிவங்களின் பண்புகளை அவற்றின் பக்கங்களையும் முனைகளையும் உற்று நோக்கிப் பொருத்துக. வடிவத்திற்குறிய எழுத்தினை உரிய வட்டத்தில் எழுதுக.

பொருத்துவதற்கான வடிவங்கள்

(i) எதிர்ப் பக்கங்கள் சமம்.

(ii) இவ்வடிவத்திற்குப் பக்கங்களும் முனைகளும் இல்லை.

(iii) பக்கங்கள் சமமாக இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும்.

(iv) நான்கு பக்கங்களும் சமம்.

விடைகளைப் பார்க்க (Click to see answers)

(i) எதிர்ப் பக்கங்கள் சமம். (ஈ)

(ii) இவ்வடிவத்திற்குப் பக்கங்களும் முனைகளும் இல்லை. (அ)

(iii) பக்கங்கள் சமமாக இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும். (ஆ)

(iv) நான்கு பக்கங்களும் சமம். (இ)