பருவம்-3 அலகு 5: காலம்
2nd Maths : Term 3 Unit 5 : Time
நேரத்தை கணக்கிடுதல்
கலைச்சொற்கள்
வேகமாக, மெதுவாக, குறைந்த நேரம், அதிக நேரம்
பயணம் செய்வோம்
யார் வெற்றி பெறுவார்?
வனவிலங்குக் காட்சிச் சாலையில் உள்ள வனவிலங்குகளில், வேகமாக ஓடக்கூடியவை எவை எனச் சோதித்துப் பார்க்க நினைத்தன் . அவற்றுக்குள் ஒரு பந்தயம் வைத்துக்கொண்டன. அவற்றில் எது வெற்றிபெறும் என ஊகியுங்கள்.
ஆசிரியருக்கான குறிப்பு
வேகம், மெது, குறைந்த நேரம், அதிக நேரம் போன்ற கலைச்சொற்களை மேலே உள்ள படத்தைக் கொண்டு விவரிக்கலாம்.
கற்றல்
விரைவாக – மெதுவாக
பால் காய்ச்சுவதற்குக் குறைந்த நேரம் ஆகும்.
பால் தயிராக மாறுவதற்கு அதிக நேரம் ஆகும்.
பயிற்சி
வேகமான செயலைக் குறிக்கும் பெட்டியில் (✔) குறியிடுக.
கற்றல்
வீடு கட்ட அதிக நேரமாகும். கூடாரத்தை அமைக்கக் குறைந்த நேரமாகும்.
குறைந்த இடைவெளி உள்ள நேரத்தைக் கணக்கிட நாம் கடிகாரத்தைப் பயன்படுத்துகிறோம். வினாடிகள், நிமிடங்கள் மற்றும் மணிகள் கடிகாரத்தில் அளக்கப்படுகின்றன.
அதிக இடைவெளி உள்ள நேரத்தை நாள்காட்டியில் கணக்கிடுகிறோம். நாள்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் நாள்காட்டியில் கணக்கிடப்படுகின்றன.
பயிற்சி
கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெறும் நேரத்தைக் கணக்கிடத் தேவைப்படும் சரியான கருவியை (✔) குறியிடுக.
கற்றல்
சிறிய பாத்திரங்களைப் பெரிய பாத்திரங்களை விட வேகமாக நிரப்பலாம்.
பயிற்சி
குறைந்த நேரத்தில் நிரம்பக்கூடிய பாத்திரத்தை (✔) குறியிடுக.
தண்ணீர்த்தொட்டி தண்ணீர் அண்டா ✔
பால் குவளை ✔ பெரிய பால் குவளை
அரிசி சாக்கு படி ✔