2nd Maths: Term 3 Unit 5 - Time
பருவம்-3 அலகு 5: காலம்
2வது கணக்கு : பருவம்-3 அலகு 5 : காலம்
காலம்
அலகு 5
காலம்
நினைவு கூர்க
(1) கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) ஓர் ஆண்டில் 12 மாதங்கள் உள்ளன.
(ii) மார்ச், ஓர் ஆண்டின் 3வது மாதம்.
(iii) ஜூலை மாதத்திற்கு முன்னர் ஜுன் மாதம் வரும்.
(iv) மே மாதம் ஏப்ரல் மற்றும் ஜுன் மாதத்திற்கு இடையில் வரும்.
(2) கொடுக்கப்பட்டுள்ள இரு நாள்களுக்கு இடையில் வரும் நாளின் பெயரை எழுதுக.
(i) வியாழன், வெள்ளி, சனி.
(ii) சனி, ஞாயிறு, திங்கள்.
(iii) வெள்ளி, சனி, ஞாயிறு.
(iv) புதன், வியாழன், வெள்ளி.
(3) பிறந்த நாள் அட்டவணையை நிறைவு செய்து இந்த ஆண்டில் கொண்டாடப்படும் வரிசையில் எழுதுக. (தேதி, மாதம் மட்டும் குறிப்பிடுக. எடுத்துக்காட்டு, அக்டோபர் 2ஆம் நாள்)
6 பிறந்தநாள்கள் கொண்டாடப்படும் வரிசை
1. 18வது ஜனவரி 2. 21வது ஜனவரி 3. 13வது ஜூலை 4. 15வது ஆகஸ்ட் 5. 20வது நவம்பர் 6. 12வது டிசம்பர்
(4) பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
(i) முப்பது (30) நாள்கள் கொண்ட மாதங்களின் பெயர்களை எழுதுக.
விடை: ஏப்ரல், ஜூன், செப்டம்பர் மற்றும் நவம்பர்.
(ii) முப்பத்தொரு (31) நாள்கள் கொண்ட மாதங்களின் பெயர்களை எழுதுக.
விடை: ஜனவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர்.
(iii) ஏப்ரல் மாதத்திற்கு அடுத்து வரும் மாதம் எது? மே.
(iv) ஓர் ஆண்டின் கடைசி மாதம் எது? டிசம்பர்.