2nd Maths Term 2 Unit 3: Patterns in Shapes | Samacheer Kalvi

2nd Maths Term 2 Unit 3: Patterns in Shapes | Samacheer Kalvi

2nd Maths : Term 2 Unit 3 : Patterns

அமைப்புகள் | பருவம்-2 அலகு 3 | 2வது கணக்கு - வடிவங்களில் அமைப்புகள்

ஆசிரியருக்கான குறிப்பு : மாணவர்கள் வடிவங்களை உற்றுநோக்கி அமைப்புகளைக் கண்டறிய ஆசிரியர் ஊக்குவிக்கலாம்.

வடிவங்களில் அமைப்புகள்

நினைவு கூர்தல்

அமைப்புகளை உற்றுநோக்கிக் கோடிட்ட இடத்தில தொடர்ந்து வரையவும்.

வடிவ அமைப்புகளை நிறைவு செய்தல்

கலைச்சொற்கள் :

அமைப்புகள், வடிவங்கள்

பயணம் செய்வோம்

பொங்கல்

பொங்கல் விழா காட்சி

இந்த விழாவில் நீங்கள் என்னென்ன வடிவங்களைக் காணுகிறீர்கள்?

முக்கோணம், வட்டம், செவ்வகம், ஓவல்

வடிவங்கள் திரும்ப வருகின்றனவா? அவ்வாறெனில், எந்த வகையில் வருகின்றன?

ஆம், மீண்டும் மீண்டும் வடிவங்கள் திரும்ப வருகின்றன.

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்கள் வடிவங்களை உற்றுநோக்கி அமைப்புகளைக் கண்டறிய ஆசிரியர் ஊக்குவிக்கலாம்.

கற்றல்

வடிவங்களால் ஆன அமைப்பை உற்றுநோக்கி அவற்றைக் கற்கலாம்.

வடிவங்களின் தொடர் அமைப்பு

செயல்பாடு

வண்ணக் காகிதத்தால் செய்யப்பட்ட சதுரம் மற்றும் முக்கோணம் போன்ற வடிவங்களையும் இரண்டு தொகுதிகளை எடுத்துக்கொள்ளவும்.

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவும்.

ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தொகுதி வடிவ அட்டைகளைக் கொடுக்கவும்.

ஆசிரியர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வடிவங்களின் எண்ணிக்கையைக் கூறவேண்டும். (எடுத்துக்காட்டு : 1 சதுரம், 1 முக்கோணம்).

ஒரு சதுரம் மற்றும் ஒரு முக்கோணத்தை மாற்றி வைத்து இரு குழுக்களும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

அதிக அளவு அமைப்புகளை உருவாக்கக் குழுக்களை ஊக்குவிக்கவும்.

எண்ணிக்கையையும் வடிவத்தையும் மாற்றி அமைத்து விளையாட்டைத் தொடரலாம்.

முக்கோணம் மற்றும் சதுரங்கள் கொண்டு உருவாக்கிய பல்வேறு அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கோணம் மற்றும் சதுரம் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்

முயற்சி செய்க

பின்வரும் வடிவத்தை உற்று நோக்கி நிறைவு செய்யவும்.

நிறைவு செய்ய வேண்டிய வடிவ அமைப்பு பயிற்சி

செயல்பாடு

அரசரின் மகுடம்

அரசரின் மகுடம் செய்யும் முறை

வண்ண காகிதங்களை மேலே படத்தில் காண்பித்திருப்போல் முக்கோணங்களாக மடித்து அரசரின் மகுடத்தை செய்வோம்.