2nd Maths: Term 2 Unit 2 - Number Names | Samacheer Kalvi

2வது கணக்கு : பருவம்-2 அலகு 2 : எண்கள் - எண் பெயர்

எண் பெயர்

2வது கணக்கு | பருவம்-2 | அலகு 2 : எண்கள்

நினைவு கூர்தல்

1. கொடுக்கப்பட்டுள்ள கடல்வாழ் உயிரிகளை எண்ணி, எண்ணிக்கையையும், எண் பெயரையும் எழுதுக.

கடல்வாழ் உயிரிகளை எண்ணுதல் பயிற்சி

2. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் மணிகளை எண்ணி, எண் மற்றும் எண் பெயரை எழுதி நிரப்புக.

மணிகளை எண்ணி எண் பெயரை எழுதுதல் பயிற்சி

கற்றல்

கொடுக்கப்பட்டுள்ள எண் பெயரை உரக்கப் படித்துப் பின் எழுதுக.

எண் பெயர் பட்டியல்

கற்றல்

எண் பெயர் 21 - 30

21 இலிருந்து 99 வரை எண் பெயரை எழுதக் கற்போம். முதலில் 21 இலிருந்து 29 வரை எண் பெயரை எழுதுவோம். 21, 22, ... 29 வரை உள்ள எண்களில் 2 பத்துகளும் வெவ்வேறு ஒன்றுகளும் உள்ளன என்பதை அறிவோம். அதாவது, இந்த எண்கள் 20 உடன் 1, 2, 3,... 9 சேர்த்து இவ்வெண்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே, இவற்றின் எண் பெயரைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.

எண் பெயர் விளக்கம் 21 முதல் 30 வரை

21 - இருபத்தி ஒன்று

22 - இருபத்தி இரண்டு

23 - இருபத்து மூன்று

24 - இருபத்தி நான்கு

25 - இருபத்தி ஐந்து

26 - இருபத்தி ஆறு

27 - இருபத்தி ஏழு

28 - இருபத்தி எட்டு

29 - இருபத்தி ஒன்பது

30 - முப்பது

மேலே கண்டவாறு நாம் 99 வரை எண் பெயரை எழுதமுடியும்.

பயிற்சி

30 இலிருந்து 99 வைர எண் பெயர் எழுதுக.

30 - முப்பது

31 - முப்பத்தொன்று

32 - முப்பத்திரண்டு

33 - முப்பத்திமூன்று

34 - முப்பத்து நான்கு

35 - முப்பத்தைந்து

36 - முப்பத்தி ஆறு

37 - முப்பத்து ஏழு

38 - முப்பத்தி எட்டு

39 - முப்பத்தி ஒன்பது

40 - நாற்பது

41 - நாற்பத்தி ஒன்று

42 - நாற்பத்தி இரண்டு

43 - நாற்பத்து மூன்று

44 - நாற்பத்து நான்கு

45 - நாற்பத்து ஐந்து

46 - நாற்பத்தி ஆறு

47 - நாற்பத்தி ஏழு

48 - நாற்பத்தி எட்டு

49 - நாற்பத்தி ஒன்பது

50 - ஐம்பது

51 - ஐம்பத்தொன்று

52 - ஐம்பத்து இரண்டு

53 - ஐம்பத்து மூன்று

54 - ஐம்பத்து நான்கு

55 - ஐம்பத்து ஐந்து

56 - ஐம்பத்து ஆறு

57 - ஐம்பத்து ஏழு

58 - ஐம்பத்து எட்டு

59 - ஐம்பத்தி ஒன்பது

60 - அறுபது

61 - அறுபத்தொன்று

62 - அறுபத்து இரண்டு

63 - அறுபத்து மூன்று

64 - அறுபத்து நான்கு

65 - அறுபத்து ஐந்து

66 - அறுபத்து ஆறு

67 - அறுபத்து ஏழு

68 - அறுபத்து எட்டு

69 - அறுபத்து ஒன்பது

70 - எழுபது

71 - எழுபத்தொன்று

72 - எழுபத்து இரண்டு

73 - எழுபத்து மூன்று

74 - எழுபத்து நான்கு

75 - எழுபத்தைந்து

76 - எழுபத்தி ஆறு

77 - எழுபத்தி ஏழு

78 - எழுபத்தி எட்டு

79 - எழுபத்தி ஒன்பது

80 - எண்பது

81 - எண்பத்தொன்று

82 - எண்பத்து இரண்டு

83 - எண்பத்து மூன்று

84 - எண்பத்து நான்கு

85 - எண்பத்து ஐந்து

86 - எண்பத்தி ஆறு

87 - எண்பத்தி ஏழு

88 - எண்பத்தி எட்டு

89 - எண்பத்தி ஒன்பது

90 - தொண்ணூறு

91 - தொண்ணூற்று ஒன்று

92 - தொண்ணூற்று இரண்டு

93 - தொண்ணூற்று மூன்று

94 - தொண்ணூற்று நான்கு

95 - தொண்ணூற்று ஐந்து

96 - தொண்ணூற்று ஆறு

97 - தொண்ணூற்று ஏழு

98 - தொண்ணூற்று எட்டு

99 - தொண்ணூற்று ஒன்பது

முயற்சி செய்க

(i) விடுபட்ட எண் பெயரை நிரப்புக.

75 = எழுபத்து ஐந்து

79 = எழுபத்தி ஒன்பது

82 = எண்பத்தி இரண்டு

88 = எண்பத்தி எட்டு

93 = தொண்ணூற்று மூன்று

41 = நாற்பத்தி ஒன்று

60 = அறுபது

35 = முப்பத்தி ஐந்து

(ii) விளையாட்டுச் சட்டையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு எண் பெயரை எழுதுக.

விளையாட்டுச் சட்டை எண்கள் பயிற்சி

விடை : எண்பத்தி நான்கு, பத்தொன்பது, தொண்ணூற்றொன்று, இருபத்தி ஏழு, எழுபத்தி ஆறு, ஐம்பத்தைந்து

மகிழ்ச்சி நேரம்

கொடுக்கப்பட்டுள்ள எண் பெயருக்குப் பொருத்தமான எண்களை எழுதி அவற்றின் மணிகளை வரைக.

மணிகளை வரையும் பயிற்சி