வடிவியல் (Geometry)
பருவம்-2 அலகு 1 | 2வது கணக்கு
கண்களை மூடி வடிவங்களை அடையாளம் காணுதல்
ஆசிரியருக்கான குறிப்பு : ஆசிரியர் இந்தச் செயல்பாட்டினை விரிவாக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ள மற்ற கோடுகளின் வகைகளைப் பற்றி மாணவர்களைக் கலந்துரையாடச் செய்யலாம்.
நினைவு கூர்தல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களில் புள்ளிகளை இணைப்பதனால் கிடைக்கும் கிடைமட்டக் கோட்டிற்கு ‘கி' எனவும், செங்குத்துக் கோட்டிற்கு ‘செ' எனவும், சாய்கோட்டிற்கு 'சா' எனவும், வளைகோட்டிற்கு 'வ' எனவும் எழுதுக.
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர் இந்தச் செயல்பாட்டினை விரிவாக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ள மற்ற கோடுகளின் வகைகளைப் பற்றி மாணவர்களைக் கலந்துரையாடச் செய்யலாம்.
பயணம் செய்வோம்
ஆசிரியர், ‘பொருள்களைக் கண்டுபிடி' என்ற விளையாட்டைக் கீழ்க்கண்டவாறு நடத்துகிறார். மேலும் அவர்கள் பொருள்களைக் கண்டறியவும் குறிப்புகளைப் பெறவும் பின்வருமாறு கேள்விகளைக் கேட்கிறார்.
ஆசிரியர்: உங்கள் கையில் உள்ள பொருள் வட்டமானதா? தட்டையானதா?
மாணவர்கள்: பொருள் ___________ உள்ளது.
ஆசிரியர்: பக்கங்களை உணர்க. எத்தனை பொருள்கள் உள்ளன?
மாணவர்கள்: ___________ பக்கங்கள் உள்ளன.
ஆசிரியர்: பக்கங்கள் சமமாக உள்ளதா? ஆம் அல்லது இல்லை என கூறுங்கள்.
மாணவர்கள்: ___________ .
ஆசிரியர்: பொருளின் வடிவத்தை இப்போது உங்களால் ஊகிக்க முடிகிறதா?
மாணவர்கள்: பொருளின் வடிவம் ___________ ஆகும்.
கலைச் சொற்கள்
கனச்செவ்வகம், உருளை, கூம்பு, கோளம், வட்டம், சதுரம், முனை, விளிம்பு, வளைகோடு, நேர்கோடு
ஆசிரியருக்கான குறிப்பு
வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் வடிவங்களின் பண்புகளை நன்கு அறியும் வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் வாய்பளிக்க வேண்டும்.
கற்றல்
வளைகோடுகளை உற்றுநோக்கிப் படியெடுக்க.
வளையலை எடுத்து ஒரு காகிதத்தில் வைத்து அதன் விளிம்பினை வரைக.
உங்கள் கை விரல்களின் விளிம்புகளை வரைக.
பயிற்சி
புள்ளிகளை இணைத்து வடிவத்தை அமைக்க.
கற்றல்
நேர்கோடுகள் வரைதல்
உங்கள் பெட்டியை ஒட்டிக் கரி எழுதுகோலைக் கொண்டு நேர்க்கோடு வரைக.
ஓர் அளவுகோலை எடுத்து, அதன் ஒரு பக்கத்தின் வழியாகக் கரி எழுதுகோலால் கோடு வரைக.
பயிற்சி
தவளை தன் இரையைச் சென்றடைய அளவுகோலைக் கொண்டு நேர்க்கோடுகள் வரைந்து வழிகாட்டுக.
(ii) தண்ணீரையு மேகத்தின் விளிம்புகளையும் தகுந்த வண்ணக்கோல் கொண்டு வரைக.
மகிழ்ச்சி நேரம்
ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களில் காணப்படும் கோடுகளை (✔) குறியிடுக.