2nd Maths Geometry: Identifying 2D Shapes and 3D Objects | Term 1 Unit 1

2nd Maths Geometry: Identifying 2D Shapes and 3D Objects | Term 1 Unit 1

இருபரிமாண வடிவங்களையும் முப்பரிமாணப் பொருள்களையும் அடையாளம் காணுதல்

2வது கணக்கு : பருவம்-1 அலகு 1 : வடிவியல்

பயணம் செய்வோம்

பல்வேறு முப்பரிமாணப் பொருள்கள் மற்றும் அவற்றின் இருபரிமாண நிழல்கள்

ஆசிரியருக்கான குறிப்பு

படத்தில் உள்ளவாறு பொருள்களை மேசை மீது வைக்கவும். அவற்றின் பின்புறம் அட்டைப் பலகையைப் பொருத்தவும். பிறகு கை விளக்கைக் கொண்டு கிடைமட்டமாகப் பொருள்களின் முன் பக்கமிருந்து ஒளியைப் பாய்ச்சவும். மாணவர்களை அட்டைப் பலகையில் விழும் பொருள்களின் நிழல்களை உற்று நோக்கச் செய்யவும்.

கற்றல்

முப்பரிமாணப் பொருள்களின் இரு பரிமாணப் பதிவு

அழிப்பானை மை ஒற்றியில் பதித்து எடுத்தல்

மை ஒற்றியை எடுத்துக்கொள்ளவும்

அழிப்பானை மை ஒற்றியில் அழுத்தி எடுக்கவும்

எடுத்த அழிப்பானின் பதிவை வெள்ளைத்தாளில் பதித்து அதனைக் கவனிக்கவும்

ஆசிரியருக்கான குறிப்பு

முப்பரிமாணப் பொருள்களின் மூலம் பெறப்பட்ட அச்சுகள் இரு பரிமாண வடிவத்தில் அமைவதை விளக்கவும்.

செய்து பார்

மேற்கண்ட செயல்பாட்டின் அடிப்படையில் கீழ்க்காணும் அட்டவணையை நிரப்புக.

பயன்படுத்திய பொருள்கள் : பதிவின் வடிவங்கள்

அழிப்பான் : செவ்வகம்

கரிக்கோல் துருவி : செவ்வகம்

பகடை : சதுரம்

மணி : வட்டம்

பொருள்களும் அவற்றின் பதிவின் வடிவங்களும்

ஆசிரியருக்கான குறிப்பு

மேற்கண்ட செயல்பாட்டைக்கரிக்கோல், கரிக்கோல் துருவி, பகடை, பந்து, மணிகள் போன்ற பொருள்களைப் பயன்படுத்திச் செய்யவும். அதன் பதிவுகளை உற்று நோக்கச் செய்க.

முயன்று பார்

பென்சிலைப் பயன்படுத்திப் பொருள்களின் எல்லைக் கோடு வரைக. பொருள்களை நீக்கிய பின் பெறப்பட்ட வடிவத்தின் பெயரை எழுதுக.

பொருள்களின் எல்லைக் கோடு வரைதல்

செயல்பாடு

இருபரிமாண வடிவங்களில் இருந்து உருவாகும் முப்பரிமாண உருவங்கள்

முக்கோணம், செவ்வகம் மற்றும் வட்ட வடிவத் தாள்களை எடுத்துக்கொள்ளவும். படத்தில் காட்டியவாறு குச்சியில் ஒட்டவும். பின் குச்சியை வேகமாகப் படத்தில் காட்டியவாறு சுழற்றவும். இருபரிமாண வடிவங்களிலிருந்து உருவாகும் முப்பரிமாண உருவங்களை உற்று நோக்குக.

இருபரிமாண தாள்களை சுழற்றி முப்பரிமாண உருவங்களை உருவாக்குதல்

செயல்பாடு

களிமண்ணைக் கொண்டு முப்பரிமாணம்

களிமண்ணைக் கொண்டு முப்பரிமாணப் பொருள்களைச் செய்வோம். கோள உருவம் செய்து அதிலிருந்து உருளையும், உருளையிலிருந்து கனச்செவ்வகமும், கனச்செவ்வகத்திலிருந்து கனச்சதுரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றிச் செய்து மகிழ்க.

1. களிமண்ணைக் கொண்டு கோளவடிவப் பந்துகளைச் செய்க.

களிமண் கோளவடிவப் பந்து

2. களிமண் பந்துகளைப் படத்தில் காட்டியவாறு உருட்டவும் அதன் இரு முனைகளையும் சிறிதளவு வெட்டி நீக்கவும். உருளை தயார்.

களிமண் உருளை செய்தல்

3. களிமண் உருளையைப் படத்தில் உள்ளவாறு தட்டிக் கனச்செவ்வகம் செய்யவும்.

களிமண் கனச்செவ்வகம் செய்தல்

4. களிமண் கனச் செவ்வகத்தை மேலும் தட்டிப் படத்தில் உள்ளவாறு கனச்சதுரம் செய்யவும்.

களிமண் கனச்சதுரம் செய்தல்

மகிழ்ச்சி நேரம்

புள்ளிகளை இணைத்து கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு மற்றும் உருளை ஆகியவற்றை வரைந்து மகிழ்க.

புள்ளிகளை இணைத்து முப்பரிமாண உருவங்கள் வரைதல்