Class 1 Maths Term 1 Unit 2: Introduction to Zero (பூச்சியம்)

Class 1 Maths Term 1 Unit 2: Introduction to Zero (பூச்சியம்)

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பூச்சியம்

பயணம் செய்வோம்

நான்தான் கதாநாயகன், என் பெயர் பூச்சியம்.

மூன்று காகிதத் துண்டுகள் தரையில் கிடந்தன, ஒன்றை எடுத்தேன் குப்பைத் தொட்டியில் போட்டேன்; இப்போது தரையைப் பார்த்தேன் மீதம் இரண்டு இருந்தன.

இரண்டு காகிதத் துண்டுகள் ஏங்கி என்னைப் பார்த்தன, ஒன்றை எடுத்தேன் குப்பைத் தொட்டியில் போட்டேன்; இப்போது தரையைப் பார்த்தேன் மீதம் ஒன்று இருந்தது.

ஒரேயொரு காகிதத் துண்டு இன்னும் தரையில் கிடந்தது. அதையும் எடுத்தேன் குப்பைத் தொட்டியில் போட்டேன்; இப்போது தரையைப் பார்த்தேன் மீதம் ஒன்றும் இல்லையே!

காகிதம் ஒன்றும் இல்லையே, அறையும் சுத்தம் ஆனதே!

கற்றல்

Illustration of birds leaving a cage, demonstrating the concept of zero.

0 கூண்டில் ஓர் எண்.

ஆசிரியருக்கான குறிப்பு

கணிதக் கருவிப் பெட்டியின் ஸ்பிண்டில் பலகையைப் பயன்படுத்திப் பூச்சியக் கருத்தை வலுப்படுத்தலாம்.

செய்து பார்

Activity showing zero objects.

மகிழ்ச்சி நேரம்

1. வண்ணத்துப்பூச்சிகளை எண்ணி எழுதுக.

Activity: Count the butterflies.

2. பென்சில்களை எண்ணி எழுதுக.

Activity: Count the pencils.

3. தக்காளிகளை எண்ணி எழுதுக.

Activity: Count the tomatoes.