1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)
உயிரெழுத்துகள்
வரிசைமுறை அறிவேன்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
படம் பார்த்து நிகழ்வைச் சொல்வோம்
'அ' முதல் 'ஔ' வரை
அண்ணன் கையில் அலைபேசி
ஆற்றில் நீந்தும் ஆமை
இரவில் வந்த இடிமின்னல்
ஈர மண்ணில் ஈசல்
உருண்டு செல்லும் உருளை
ஊதா நிற ஊதல்
எல்லாம் செய்யும் எந்திரமனிதன்
ஏற்றம் தந்த 'ஏவுகணை
ஐயம் கேட்ட ஐவர்
ஒளிந்து நின்ற ஒட்டகம்
ஓரம் நிற்கும் ஓடம்
ஔவை தந்த ஔடதம்