10th SSLC Tamil Study Guide: A Simple Guide for Slow Learners (பத்தாம் வகுப்பு தமிழ் எளிய வழிகாட்டி)

10th SSLC Tamil Study Guide: A Simple Guide for Slow Learners (பத்தாம் வகுப்பு தமிழ் எளிய வழிகாட்டி)

பத்தாம் வகுப்பு - தமிழ் - எளிய வழிகாட்டி

பக்கம் 1

பத்தாம் வகுப்பு தமிழ் வழிகாட்டி பக்கம் 1

மெல்லக் கற்பவர் தேர்ச்சிக்கு...

வ. எண் தலைப்பு மதிப்பெண்கள்
1சரியான விடையைத் தேர்வு செய்க (45)8
2விடைக்கேற்ற வினா அமைக்க2
3உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக3
4காட்சியைக் கண்டு கவினுற எழுதுக (1)5
5படிவம் நிரப்புக (2)5
6திருக்குறள் பாடல்கள் (10)2
7அலகிடுதல்3
8கடிதங்கள் (5)5
9நிற்க அதற்குத் தக (9)5
10மோனை-எதுகை கண்டறிதல்1-2
11நூலும் நூலாசிரியர் பெயரும்1-2
மொத்தம்40

முயன்று கற்பவருக்கு...

வ. எண் தலைப்பு மதிப்பெண்கள்
12செய்யுள், உரைநடை குறுவினாக்கள் (34)6
13இலக்கணம் குறுவினாக்கள் (21)6
14பகுபத உறுப்பிலக்கணம் (11)2
15உரைநடை சிறுவினாக்கள் (13)3
16செய்யுள் சிறுவினாக்கள் (18)3
17இலக்கணம் சிறுவினாக்கள் (10)3
18விரிவானம் நெடுவினாக்கள் (8)6
19உரைநடை நெடுவினாக்கள் (6)6
20செய்யுள் நெடுவினாக்கள் (8)5
மொத்தம்80

சரியான விடையைத் தேர்வு செய்க.

இதிலிருந்து எட்டு வினாக்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

  1. மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.
    வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
  2. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது...
    சருகும் சண்டும்
  3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-
    எம்+தமிழ்+நா
  4. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-_____
    பாடல், கேட்டவர்
  5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
    மணி வகை
  6. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?.
    மோனை, எதுகை
  7. பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
    1. ஒவ்வோர்ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
    2. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே
    3. காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
    செய்தி 1,3 ஆகியன சரி
  8. "பாடு இமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல்

பக்கம் 2

  1. செய்தி யாது?.
    கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
  2. 'பெரிய மீசை' சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?_
    அன்மொழித்தொகை
  3. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க
    கொண்டல்-கிழக்கு, கோடை-மேற்கு, வாடை-வடக்கு, தென்றல்-தெற்கு
  4. பின்வருவனவற்றுள் முறையான தொடர்-
    தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
  5. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது
    சிற்றூர்
  6. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது_
    வேற்றுமை உருபு
  7. காசிக்காண்டம் என்பது—
    காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
  8. 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டு சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-
    இன்மையிலும் விருந்து
  9. 'உனதருளே பார்ப்பன் அடியேனே'- யாரிடம் யார் கூறியது?-__
    இறைவனிடம் குலசேகராழ்வார்
  10. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க. தலைப்பு: செயற்கை நுண்ணறிவு குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது
    தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  11. பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?_
    வானத்தையும் பேரொலியையும்
  12. குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
    பால் வழுவமைதி, திணை வழுவமைதி
  13. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?—
    இலா
  14. 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி—
    சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  15. அருந்துணை என்பதைப் பிரித்தால்...
    அருமை+துணை
  16. "இங்கு நகரப் பேருந்து நிற்குமா?" என்று வழிப்போக்கர் கேட்டது __வினா. “அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது. __விடை
    அறியா, சுட்டு
  17. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?—
    கல்வி
  18. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர். __ மன்னன் இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் __ இறைவன்
  19. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்___
    குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
  20. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?__
    ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
  21. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
    தளரப் பிணைத்தால்
  22. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?.
    கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?
  23. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?___
    அங்கு வறுமை இல்லாததால்
  24. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க

பக்கம் 3

  1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க
    உழவு, ஏர், மண், மாடு
  2. 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-
    திருப்பதியும் திருத்தணியும்
  3. 'தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-
    நெறியோடு நின்று காவல் காப்பவர்
  4. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்.
    வலிமையை நிலைநாட்டல்
  5. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது...
    சிலப்பதிகாரம்
  6. மேன்மை தரும் அறம் என்பது..
    கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
  7. வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது.
    இடையறாது அறப்பணி செய்தலை
  8. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்._
    அதியன், பெருஞ்சாத்தன்
  9. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்—
    இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
  10. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
    அகவற்பா
  11. "இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்..."-இவ்வடிகளில் கற்காலம் என்பது
    தலையில் கல் சுமப்பது
  12. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
    பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
  13. பூக்கையைக் குவித்து பூவே புரிவொடு காக்க என்று வேண்டினார்
    கருணையன் எலிசபெத்துக்காக
  14. வாய்மையே மழைநீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி
    உருவகம்
  15. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
    சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

கவிதை

கண்ணில் தோன்றும் இக்காட்சி-மனக்
கண்ணில் நீளுது அதன்நீட்சி !
என்னைக் கவர்ந்த இக்காட்சி -என்னை
என்னவோ செய்யுது ஆட்சி!
எண்ணங்கள் பலவாய் விரியுது-என்றன்
எழுத்துகள் கவியாய் மலருது!
உண்மையை உள்ளம் உணருது-உள்ளம்
உரக்கச் சொல்லத் துடிக்குது !!

விடைக்கேற்ற வினாவை எழுதுக

வினா எண் 16-விடைக்கேற்ற வினாவை எழுதுக. இரண்டு தொடர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றிற்கு உரிய வினாவை எழுத வேண்டும். இரண்டு மதிப்பெண்கள்

  1. தொடரின் இறுதி எழுத்தைக் கவனிக்கவும். இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதற்குப் பதிலாக அவ்வெழுத்தின் ஒற்று (ன் எனில் ன என்று) நீக்கி, அதனோடு துணைக்கால் எழுத வேண்டும். (ன்→னா?, ள்→ளா?, ர்→ரா?, ம்→மா?, ல்→லா?)
  2. ஐகார இகர உயிர்மெய் எழுத்தாக இருந்தால் அதன் அருகில் 'யா' எழுத வேண்டும். (சிறந்தவை→சிறந்தவையா?, இல்லை→இல்லையா?, அடிப்படை→அடிப்படையா?, தலைவி→தலைவியா?)
  3. அகர உயிர்மெய் எழுத்தாக இருந்தால் அதன் அருகில் 'வா' எழுத வேண்டும். (பெற்றன→பெற்றனவா?, கட்டப்பட்டன→கட்டப்பட்டனவா?, புலப்படுத்துகின்றன→புலப்படுத்துகின்றனவா?)
  4. உகர உயிர்மெய் எழுத்தாக இருந்தால் உகரம் நீக்கி துணைக்கால் சேர்க்க வேண்டும். (இருந்தது→இருந்ததா?, உண்டு→உண்டா?, தெரிகிறது→தெரிகிறதா?, காட்டப்படுகிறது→காட்டப்படுகிறதா?, முடிகிறது→முடிகிறதா?)
  5. ஆகார ஏகார ஓகார உயிர்மெய் எழுத்தாக இருந்தால் அதன் அருகில் 'வா' சேர்க்க வேண்டும்.(அன்னமய்யா→அன்னமய்யாவா?, மொழியே→மொழியேவா?)

பக்கம் 4

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

வினா எண் 29 அல்லது 30 அல்லது 31ல் ஏதேனும் ஒரு வினாவாக வரும். மூன்று மதிப்பெண்களை உடையது. உரைப்பத்தி (Paragraph) கொடுக்கப்பட்டு மூன்று வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். அவற்றிற்கான விடைகள் பெரும்பாலும் அப்பத்திக்குள்ளேயே இருக்கும்.

  1. வினாக்களில் உள்ள வார்த்தைகளையும் உரைப்பத்தியில் உள்ள வார்த்தைகளையும் ஒப்பீடு செய்து அவ்வார்ததை எந்தத் தொடரில் வருகிறதோ அந்தத் தொடர் முழுவதையும் எழுதுங்கள் அல்லது பத்தி முழுவதையும் எழுதுங்கள். மூன்று வினாக்களுக்கும் அவ்வாறே செய்யுங்கள். வினாஎண் மறக்காமல் எழுதுங்கள்
  2. சில நேரங்களில் உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு என்ன என்று கேட்கிறார்கள். அப்பத்தியைப் படித்துப் பாருங்கள். எந்தச் சொல் திரும்பத் திரும்ப வருகிறதோ அந்தச் சொல்தான் அப்பத்திக்குரிய தலைப்பு. அதை எழுதுங்கள்.
  3. சில வேளைகளில் சிந்தித்துப் பதில் அளிக்கக்கூடிய வினாக்கள் கேட்கப்படுகின்றன. உங்கள் சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ அதுதான் விடை. அதை எழுதுங்கள்.

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: மாலைமலர்; பலா மலர். மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர். அகவிதழ் முதலிய உறுப்புகளில் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப்பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூக்கள் குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றி்க் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

  1. மலர் உண்டு; பெயரும் உண்டு- இரண்டு தொடர்களையும் ஒரு தொடராகக்குக.
    மலரும், மலருக்குப் பெயரும் உண்டு
  2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி.... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரை கண்டறிக.
    காய் தோன்றி்க் கனியாகி....
  3. நீங்கள் அறிந்த இழப்புக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.
    பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்
    கள்ளிப்பூ இறைவழிபாட்டிற்கு உரியது
  4. அரிய மலர்- இலக்கணக் குறிப்புத் தருக.
    குறிப்புப் பெயரெச்சம்
  5. தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துக்களைத் திருத்துக. இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.
    விடை: இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.

பக்கம் 5

பத்தியைப் படித்துப் பதில் தருக.

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகியஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக் காலம் கடந்தது

  1. பத்தியில் உள்ள அடுக்கு தொடர்களை எடுத்து எழுதுக.
    மீண்டும் மீண்டும்
  2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
    தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
  3. பெய்த மழை- இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
    பெய்மழை
  4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
    பெருவெடிப்புக் கொள்கை
  5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவீர் கருதுவன யாவை?
    நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை அடங்கிய சூழலே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும்.

கடிதம் எழுதுக (5 மதிப்பெண்கள்)

புகார்க் கடிதம்

அனுப்புநர்
அஅஅஅ,
ஆஆஆஆ,
இஇஇஇ.

பெறுநர்
உயர்திரு. உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப்பாதுகாப்பு அலுவலகம்,
சென்னை.

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்...

அம்மா,
வணக்கம். நான் நேற்று முல்லை உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். பிரியாணி ஒன்று வாங்கினேன். தரமற்றதாக இருந்தது. விலை கூடுதலாக இருந்தது.
எனவே, முல்லை உணவு விடுதி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
அஅஅஅ
இடம் : சங்கரலிங்கபுரம்.
நாள் : 23.09.2020

இணைப்பு:
உணவுக் கட்டணச் சீட்டு நகல்

பக்கம் 35

படிவம் நிரப்புதல்

கொடுக்கப்பட்டுள்ள படிவங்களின் மாதிரிகள் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை கவனமாகப் பார்த்துப் பயிற்சி பெற வேண்டும். இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களான பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றை சரியாக நிரப்ப வேண்டும்.