Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

Students can Download 9th Tamil Chapter 1.5 தொடர் இலக்கணம் Questions and Answers, Summary, and Notes. The Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, assists students in completing homework assignments, and helps them to score high marks in board exams.

கற்பவை கற்றபின்

Question 1. தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியை விட்டு நீக்கினான். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

விடை: பதவியை விட்டு நீக்குவித்தான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

விடை: மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே. (இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக)

விடை: உண்ணும் தமிழ்த்தேனே.

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாக பகுத்துள்ளனர். (இத்தொடரை செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக)

விடை: திராவிட மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார். (இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக)

விடை: நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தான்.

Question 2. சொற்களைத் தொடர்களாக மாற்றுக:

அ) மொழிபெயர் (தன்வினை, பிறவினை தொடர்களாக மாற்றுக)

தன்வினை: மொழி பெயர்த்தாள்
பிறவினை: மொழி பெயர்ப்பித்தாள்

ஆ) பதிவுசெய் (செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக மாற்றுக)

செய்வினை: பதிவு செய்தான்
செயப்பாட்டுவினை: பதிவு செய்யப்பட்டது

இ) பயன்படுத்து (தன்வினை, பிறவினைத் தொடர்களாக மாற்றுக)

தன்வினை: பயன்படுத்தினான்
பிறவினை: பயன்படுத்துவித்தான்

ஈ) இயங்கு (செய்வினை, செயப்பாட்டு வினை தொடர்களாக மாற்றுக)

செய்வினை: இயங்கினாள்
செயப்பாட்டுவினை: இயக்கப்பட் டாள்

Question 3. பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.

(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களைக், நம்மை, வாழ்வியல் அறிவை)

அ) தமிழ் செவ்விலக்கியங்களைக் கொண்டுள்ளது.

ஆ) நாம் தமிழிலக்கிய நூல்களை வாங்க வேண்டும்.

இ) புத்தகங்கள் வாழ்வியல் அறிவைக் கொடுக்கின்றன.

ஈ) நல்ல நூல்கள் நம்மை நல்வழிப்படுத்துகின்றன.

Question 4. பொருத்தமான பெயரடைகளை எழுதுக.

(நல்ல, பெரிய, இனிய, கொடிய)

அ) எல்லோருக்கும் இனிய வணக்கம்.

ஆ) அவன் நல்ல நண்பனாக இருக்கிறான்.

இ) பெரிய ஓவியமாக வரைந்து வா.

ஈ) கொடிய விலங்கிடம் பழகாதே.

Question 5. பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.

(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)

அ) ஊர்தி மெதுவாகச் சென்றது.

ஆ) காலம் வேகமாக ஓடுகிறது.

இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை அழகாகக் காட்டுகிறது.

ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் பொதுவாகக் காட்டு.

Question 6. அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.

அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக எழுதுக)

விடை: நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா? (அல்லது) இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர் யார்?

ஆ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக அமைக்க)

விடை: இசையோடு அமையும் பாடல்.

இ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக மாற்றுக)

விடை: நீ இதைச் செய்.

Question 7. வேர்ச்சொல்லை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.

அ) தா (உடன்பாட்டு வினைத்தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)

உடன்பாட்டு வினைத்தொடர்: தந்தேன்
பிறவினைத் தொடர்: தருவித்தேன்

ஆ) கேள் (வினாத்தொடர் ஆக்குக)

வினாத் தொடர்: கேட்டாயா?

இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர் ஆக்குக)

செய்தித் தொடர்: நீ அதைக் கொடு
கட்டளைத் தொடர்: நீ கொடு

ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டு வினைத் தொடர், பிறவினைத் தொடர் ஆக்குக)

செய்வினைத் தொடர்: பார்த்தான்
செயப்பாட்டு வினைத் தொடர்: பார்க்கப்பட்டான்
பிறவினைத் தொடர்: பார்க்கச் செய்தான்

Question 8. சிந்தனை வினா.

அ) கீழ்க்காணும் சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.
அவை யாவும் இருக்கின்றன
அவை யாவையும் இருக்கின்றன.
அவை யாவும் எடுங்கள்.
அவை – பன்மை , யாவும்.
அவை யாவையும் எடுங்கள்.
அவை – பன்மை, யாவையும்.
அவை யாவற்றையும் எடுங்கள்.

Answer

  • அவை யாவும் இருக்கின்றன - தவறு (விளக்கம்: 'அவை' பன்மை, 'யாவும்' ஒருமை.)
  • அவை யாவையும் இருக்கின்றன. - சரி (விளக்கம்: 'அவை' பன்மை, 'யாவையும்' பன்மை.)
  • அவை யாவும் எடுங்கள் - தவறு (விளக்கம்: 'அவை யாவும் எடு' என்பதே சரி. 'அவை' பன்மை, 'யாவும்' ஒருமை, 'எடு' ஒருமை.)
  • அவை யாவையும் எடுங்கள் - தவறு (விளக்கம்: 'அவை யாவையும் எடு' என்பதே சரி. 'அவை' பன்மை, 'யாவையும்' பன்மை, ஆனால் 'எடுங்கள்' மரியாதை பன்மை.)
  • அவை யாவற்றையும் எடுங்கள் - சரி (விளக்கம்: 'அவை' பன்மை, 'யாவற்றையும்' பன்மை, 'எடுங்கள்' மரியாதை பன்மை.)

ஆ) நீங்கள் ஒரு நாளிதழில் பணிபுரிகிறீர்கள். அங்குப் புதிய வார இதழ் ஒன்று தொடங்க விருக்கிறார்கள். அதற்காக அந்நாளிதழில் விளம்பரம் தருவதற்குப் பொருத்தமான சொற்றொடர்களை வடிவமைத்து எழுதுக.
சொற்றொடர் வகைகளை சரிவர அறிந்தால் தான் பிழையின்றிப் பேசவும், மரபு மாறாமல் எழுதவும் முடியும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

இ) சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றன என்பதைப் பதிவு செய்க.
'வந்திருப்பவர் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'. இத்தொடரில் “கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்பது ஆங்கிலத்தின் நேரடி மொழிபெயர்ப்பு.

ஈ) வந்திருப்பவர்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இத்தொடர் ஆங்கிலத்திலிருந்து நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் மொழி மரபை இத்தொடரில் பேணுகிறோமா?
இதை ‘கேட்டுக்கொள்கிறோம்’ என்று எழுதுவதுதான் சிறந்தது. இதேபோன்று, ‘வருகையைத் தரமுடியாது’ என்பது இயல்பு. ஆனாலும் அழைப்பிதழ்களிலும் மேடை நாகரிகம் கருதியும் “வருகை தர வேண்டுகிறோம்” என்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். இது மொழியின் இயல்பான மரபைப் பேணவில்லை என்றாலும், நடைமுறை வழக்கைப் பின்பற்றுகிறது.

மொழியை ஆள்வோம்

1. படித்துச் சுவைக்க :

விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த

பிறகுநான் வீணையாய்ப் போனேன்;

சிறகுநான் சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!

நின்னால் விமானமானேன் நான்!

தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்

வருவாய் எனநீ வருவாய்; – ஒருவாய்

உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்

கணவாய் வழிவரும் காற்று!

– கவிஞர் வாலி

2. மொழி பெயர்க்க :

  • Linguistics – மொழியியல்
  • Literature – இலக்கியம்
  • Philologist – மொழி ஆய்வறிஞர்
  • Polyglot – பன்மொழி அறிஞர்
  • Phonologist – ஒலியியல் ஆய்வறிஞர்
  • Phonetics – ஒலியியல்

3. அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

  1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கின்றது. (திகழ்)
  2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்து கொள்வாள். (கலந்துகொள்)
  3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. (பேசு)
  4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றார்கள். (செல்)
  5. தவறுகளைத் திருத்தினான். (திருத்து)

4. வடிவம் மாற்றுக.

பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.

*** அறிவிப்பு ***

நூல் வெளியீட்டு விழா

நாள்: 21 ஜூன், திங்கள் (திருவள்ளுவர் ஆண்டு 2049, ஆனிமாதம் 7 ஆம் நாள்)

நேரம்: பிற்பகல் 3:00 மணி

இடம்: வெள்ளி விழா அரங்கம், அரசு மேனிலைப் பள்ளி, மருதூர்.

தலைமை: பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. முஸ்தபா, M.A., M.Ed., அவர்கள்

முன்னிலை: பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், திருமிகு. மலரவன் அவர்கள்

வரவேற்புரை: இலக்கிய மன்றச் செயலர்


நமது பள்ளியின் மாணவி பூங்குழலி படைத்த ‘உள்ளங்கை உலகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. கின்னஸ் சாதனை படைத்த நம் பள்ளியின் முன்னாள் மாணவர், கவிஞர் இன்சுவை அவர்கள் நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றுவார்.

நன்றியுரை: ரா. அன்பரசன், பள்ளி மாணவர் தலைவர்.

அனைவரும் வருக! அமுதச் சுவை பருக!!

5. தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.

  1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்.
  2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
  3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே.
  4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

6. கடிதம் எழுதுக.

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

விருதுநகர்,
28.03.2018

அன்புள்ள நண்பன் எழிலனுக்கு,

பாலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம். அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் இறையருளால் நலமுடன் இருப்பீர்கள்.

என் பிறந்தநாளை கடந்த மாதம் கொண்டாடும் போது நீ எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய் அல்லவா? சென்ற வாரம் ஓய்வாக இருந்தபோது பரிசுப்பொருளைப் பிரித்து வியந்து போனேன். எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. சிறுவர்களுக்கான இக்கதைகள், உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா! நன்கு படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.

அன்புடன்,
பாலன்.


முகவரி:
அ. எழிலன், த/பெ மதியரசன்,
1/3, கூலமாட வீதி, கோவை.

7. நயம் பாராட்டுக :

விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!

– ம.இலெ. தங்கப்பா

இலக்கிய நயம் பாராட்டுதல்

ஆசிரியர்: ம.இலெ.தங்கப்பா

முன்னுரை: ம.இலெ.தங்கப்பா ஓர் இயற்கைக் கவிஞர். பாரதியாரின் ‘குயில்பாட்டு’ போல பாடியிருக்கிறார். பாட்டு என்பது இசையுடன் தொடர்பு கொண்டது. அப்போது தான் பாட்டு உயிர் பெறுகிறது. அத்தகைய உயிர்ப்பை இப்பாடலில் காண முடிகிறது.

திரண்ட கருத்து: நெடுவானம், கடற்பரப்பு, பெருமலை, பள்ளத்தாக்கு, பொழிகின்ற, புனலருவி அழகில், காட்டில், புல்வெளியில், நல் வயலில், விலங்கில், பறவைகளில் இன்னும் தெரிகின்ற பொருள்களில் எல்லாம் பயின்று எம் நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே! மக்கள் மனத்திலும் நீ குடியிருக்க வேண்டும். தூய்மை ஊற்றே, அழகு என்னும் பெருமை கொண்ட ஒழுங்கே மக்கள் மனத்தில் நீ குடியிருக்க வேண்டுவேன்.

எதுகை நயம்: இப்பாடலில் எதுகை நயம் அழகுற அமைந்து விளங்குகிறது எனலாம். அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும். சீர் எதுகை: (பொழிகின்ற – பொழிலில், புல்வெளியில் – நல்வலில்).

மோனை நயம்: அடிதோறும், சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம் ஆகும். (விரிகின்ற – விண்ணோங்கு, பொழிகின்ற – புனலருவி பொழிலில், தெரிகின்ற – திகழ்ந்து, தெவிட்டாத – தூய்மை, ழகு – கத்திலும்).

சொல் நயம்: கவிஞர், நுண்பாட்டு என்ற சொல்லில் ‘நுட்பமான பாட்டு’ என்றே குறிப்பிடுகிறார். பாட்டுக்கு, ‘அழகு என்னும் பேரொழுங்கு’ என்ற அடை கொடுத்துப் பாடுகிறார்.

பொருள் நயம்: ‘விண்ணோங்கு’, ‘புனலருவிப் பொழில்’, ‘தெவிட்டாத நுண்பாட்டே’ என்று பொருள் நயம் புலப்படப் பாடுகிறார்.

நிறைவுரை: இயற்கையை வருணிப்பதில் தலை சிறந்து விளங்கும் ம.இலெ.தங்கப்பாவை ‘அழகியல் கவிஞர்’ என்று கூறினால் அது மிகையாது.


அல்லது

திரண்ட கருத்து: நெடுவானம், கடற்பரப்பு, பெருமலை, பள்ளத்தாக்கு, பொழிகின்ற புனலருவி, காடு, புல்வெளி, நல் வயல், விலங்குகள், பறவைகள் இன்னும் தெரிகின்ற பொருள்கள் எல்லாவற்றிலும் நிறைந்து, எம் நெஞ்சில் தெவிட்டாத நுண்பாட்டே! மக்கள் மனத்திலும் நீ குடியிருக்க வேண்டும். தூய்மையின் ஊற்றே, அழகு என்னும் பெருமை கொண்ட ஒழுங்கே! மக்கள் மனத்தில் நீ குடியிருக்க வேண்டுவேன்.

எதுகை நயம்: அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும். (பொழிகின்ற – பொழிலில், புல்வெளியில் – நல்வலில்).

மோனை நயம்: அடிதோறும், சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம் ஆகும். (விரிகின்ற – விண்ணோங்கு, பொழிகின்ற – புனலருவி – பொழிலில், தெரிகின்ற – திகழ்ந்து, தெவிட்டாத – தூய்மை, ழகு – கத்திலும்).

சொல் நயம்: கவிஞர், ‘நுண்பாட்டு’, ‘பேரொழுங்கு’ போன்ற சொற்கள் பாடலுக்குச் செறிவூட்டுகின்றன.

பொருள் நயம்: ‘விண்ணோங்கு’, ‘புனலருவிப் பொழில்’, ‘தெவிட்டாத நுண்பாட்டே’ என்று பொருள் நயம் புலப்படப் பாடுகிறார்.

நிறைவுரை: இயற்கையை வருணிப்பதில் தலை சிறந்து விளங்கும் ம.இலெ.தங்கப்பாவை ‘அழகியல் கவிஞர்’ என்று கூறினால் அது மிகையாது.

8. நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க :

உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.


Answer.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

அல்லது

உலகத் தாய்மொழி நாள் விழா

நிகழ்ச்சி நிரல்

நாள்: பிப்ரவரி 21

இடம்: பள்ளி விழா அரங்கம்


  • காலை 10:00 - தமிழ்த்தாய் வாழ்த்து
  • காலை 10:05 - வரவேற்புரை (இலக்கிய மன்றச் செயலர்)
  • காலை 10:15 - தலைமையுரை (பள்ளித் தலைமை ஆசிரியர்)
  • காலை 10:30 - சிறப்புரை: "தாய்மொழியின் சிறப்பு" (சிறப்பு விருந்தினர்)
  • காலை 11:00 - மாணவர் படைப்புகள் (கவிதை, பேச்சு, பாடல்)
  • காலை 11:45 - பரிசளிப்பு விழா
  • நண்பகல் 12:00 - நன்றியுரை (பள்ளி மாணவர் தலைவர்)
  • நண்பகல் 12:05 - நாட்டுப்பண்

மொழியோடு விளையாடு

1. அந்தாதிச் சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்
Answer
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

2. அகராதியில் காண்க.

நயவாமை, கிளத்தல், கேழ்பு, புரிசை,செம்மல்

  • நயவாமை – விரும்பாமை
  • கிளத்தல் – எழுப்பல், சொல்லுதல், பேசுதல்
  • கேழ்பு – நன்மை
  • புரிசை – மதில்
  • செம்மல் – அரசன், அருகன், தலைமகன், பழம்பூ, புதல்வன், பெருமையிற் சிறந்தோன், உள்ளநிறைவு, நீர், தருக்கு.

3. கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்
Answer
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

4. தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்

அல்லது
வேர்ச்சொல்இறந்த காலம்நிகழ்காலம்எதிர்காலம்
தாதந்தான்தருகிறான்தருவான்
காண்கண்டான்காண்கிறான்காண்பான்
பெறுபெற்றான்பெறுகிறான்பெறுவான்
நீந்துநீந்தினான்நீந்துகிறான்நீந்துவான்
பாடுபாடினான்பாடுகிறான்பாடுவான்
கொடுகொடுத்தான்கொடுக்கிறான்கொடுப்பான்

5. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க.

(திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை )

எ.கா: நான் திடலில் ஓடினேன். (தன்வினை)
நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன். (பிறவினை)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.5 தொடர் இலக்கணம்.

காவியா – வரை
காவியா போட்டியில் வரைந்தாள். (தன்வினை)
காவியா போட்டியில் ஓவியத்தை வரைவித்தாள். (பிறவினை)

கவிதை – நனை
கவிதை மழையில் நனைந்தாள். (தன்வினை)
இரகு கவிதையை மழையில் நனைவித்தான். (பிறவினை)

இலை – அசை
இலை வேகமாக அசைந்தது. (தன்வினை)
காற்று இலையை வேகமாக அசைவித்தது. (பிறவினை)

மழை – சேர்
மழை மண்ணைச் சேர்ந்தது. (தன்வினை)
மழைநீரை மண்ணில் சேர்த்தான். (பிறவினை)