Original QP | Thoothukudi | Mr. D. Jenis2024 முதல் இடைப்பருவத் தேர்வு - 2024 | தமிழ்

தூத்துக்குடி மாவட்டம் - முதல் இடைப்பருவத் தேர்வு - 2024

தூத்துக்குடி மாவட்டம்

முதல் இடைப்பருவத் தேர்வு - 2024

வகுப்பு: ஒன்பதாம் வகுப்பு

பாடம்: தமிழ்

நேரம்: 1.30 மணி மதிப்பெண்கள்: 50

பகுதி - I (மதிப்பெண்கள்: 7x1=7)

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1) தமிழ்விடுதூது ________ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

  1. அ) தொடர்நிலைச் செய்யுள்
  2. ஆ) புதுக்கவிதை
  3. இ) சிற்றிலக்கியம்
  4. ஈ) தனிப்பாடல்

2) அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு

  1. அ) வேற்றுமைத்தொகை
  2. ஆ) பண்புத்தொகை
  3. இ) வினைத்தொகை
  4. ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

3) “மிசை” என்பதன் எதிர்ச்சொல் என்ன?

  1. அ) கீழே
  2. ஆ) மேலே
  3. இ) இசை
  4. ஈ) வசை

4) நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

  1. அ) அகழி
  2. ஆ) ஆறு
  3. இ) இலஞ்சி
  4. ஈ) புலரி

5) மல்லல் மூதூர் வயவந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

  1. அ) மறுமை
  2. ஆ) பூவரசு மரம்
  3. இ) வளம்
  4. ஈ) பெரிய

6) ‘தமிழோவியம்' என்னும் நூலின் ஆசிரியர் ________.

  1. அ) கண்ணதாசன்
  2. ஆ) வைரமுத்து
  3. இ) தமிழ்ஒளி
  4. ஈ) ஈரோடு தமிழன்பன்

7) பெரியபுராணத்தை எழுதியவர் ________.

  1. அ) சேக்கிழார்
  2. ஆ) கம்பர்
  3. இ) வால்மீகி
  4. ஈ) தண்டி

பகுதி - II (மதிப்பெண்கள்: 5x2=10)

II. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி.

14வது வினா கட்டாய வினா.

8) நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

9) கண்ணி என்பதன் விளக்கம் யாது?

10) கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச்சொற்களைத் தருக.

11) செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

12) ‘கூவல்' என்று அழைக்கப்படுவது எது?

13) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.

14) வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.

பகுதி - III (மதிப்பெண்கள்: 3x3=9)

III. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி.

(18வது வினா கட்டாய வினா)

15) மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

16) காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

17) பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

18) “காடெல்லாம்” எனத் தொடங்கும் பெரியபுராணப் பாடலை எழுது.

பகுதி - IV (மதிப்பெண்கள்: 3x2=6)

IV. எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி:

19) தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.

  1. 1) சித்திரமும் கைப்பழக்கம் ________.
  2. 2) கற்றோர்க்குச் சென்ற ________.

20) அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

  1. 1) இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ________ (திகழ்).
  2. 2) குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ________ (செல்).

21) கலைச்சொல் தருக: i) Phoneme ii) Lexicon

22) பகுபத உறுப்பிலக்கணம் தருக: விரித்த

பகுதி - V (மதிப்பெண்கள்: 2x5=10)

V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.

23) தூது அனுப்பத் தமிழே சிறந்தது - தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

24) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

25) சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

பகுதி - VI (மதிப்பெண்கள்: 1x8=8)

VI. ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் ஒரு பக்க அளவில் விடையளி:

26) திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க. (அல்லது)

27) தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.