9th Tamil | தமிழ் Original QP | Tirupattur | Mr. A. Mohammed Ali 2024 Download PDF

முதல் இடைப் பருவத் தேர்வு - 2024 | தமிழ்

வகுப்பு: 9 | தேர்வு எண்: 6001

தமிழ்

முதல் இடைப் பருவத் தேர்வு - 2024

நேரம்: 1.30 மணி மொத்த மதிப்பெண்கள்: 50

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

6x1=6

1.தமிழ் விடு தூது __________ என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.

(அ) பக்தி இலக்கியம் (ஆ) புதுக்கவிதை (இ) சிற்றிலக்கியம் (ஈ) தனிப்பாடல்

2.மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

(அ) மறுமை (ஆ) பூவரசு மரம் (இ) வளம் (ஈ) பெரிய

3.சொற்றொடர்களை முறைப்படுத்துக.

(அ) ஏறுதழுவுதல் என்பதை (ஆ) தமிழ் அகராதி (இ) தழுவிப்பிடித்தல் என்கிறது

i) ஆ - அ - இ ii) ஆ - இ - அ iii) இ - ஆ - அ iv) இ - அ - ஆ

4.தீரா இடும்பை தருவது எது?

(அ) ஆராயாமை, ஐயப்படுதல் (ஆ) குணம், குற்றம் (இ) பெருமை, சிறுமை (ஈ) நாடாமை, பேணாமை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

"காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்”

5.இப்பாடலின் ஆசிரியர் பெயர் யாது?

(அ) குடபுலவியனார் (ஆ) சேக்கிழார் (இ) திருநாவுக்கரசர் (ஈ) சுந்தரர்

6.கழை என்னும் சொல்லின் பொருள் __________.

(அ) சோலை (ஆ) சிறுகிளை (இ) சங்குகள் (ஈ) கரும்பு

II. குறுகிய விடை தருக (மூன்று மட்டும்). வினா எண் 10 க்கு கட்டாய வினா.

3X2=6

  1. விடைக்கேற்ற வினா அமைக்க.
    அ) உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
    ஆ) இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
  2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
  3. உண்டிக் கொடுத்தோர் உயிர்க்கொடுத்தோரே - குறிப்புத்தருக.
  4. "தரும்" என முடியும் குறளை எழுதுக.

III. குறுகிய விடை தருக (மூன்று மட்டும்).

3X2=6

  1. தன்வினை, பிறவினை என்றால் என்ன? சான்று தருக.
  2. தொடரை பழமொழிக் கொண்டு நிறைவு செய்க.
    அ) கல்லாடம் படித்தவரோடு __________
    ஆ) கற்றோர்க்குச் சென்ற __________
  3. பிழை நீக்கி எழுதுக.
    மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

IV. கலைச்சொல் மற்றும் வினாக்கள்

3X3=9

14.கலைச்சொல் தருக.

i) Water Management
ii) Lexicon

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி. வினா எண் 18 கட்டாய வினா.

  1. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
  2. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
  3. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
  4. “தித்திக்கும் தெள்அமுதாய்” எனத் தொடங்கும் தமிழ்விடுதூது பாடலை அடிபிறழாமல் எழுதுக.

V. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.

3X5=15

  1. உங்களின் நண்பர் பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் “கால்முளைத்த கதைகள்” என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
  2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
    ஒரு மீன் சிறிய மீன் தொட்டியிலிருந்து பெரிய தொட்டிக்குத் தாவுகிறது
  3. தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.
    1. Every flower is a soul blossoming in Nature - Gerard De Nerval
    2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek
    3. An early morning walk is a blessing for the Whole day - Henry David Thoreau
    4. Just living is not enough ......... One must have sunshine, freedom and a little flower - Hans Christian Anderson
  4. நயம் பாராட்டுக.
    கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்
    காடும் செடியும் கடந்துவந்தேன்;
    எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான்
    இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்;
    ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல
    ஏரிகுளங்கள் நிரப்பிவந்தேன்
    ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்
    ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்;
    - கவிமணி

VI. விடையளி.

1X8=8

23.

அ) திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரி.

(அல்லது)

ஆ) தண்ணீர் கதையைக் கருப்பொருள் குறையாமல் சுருக்கித் தருக.

V/9/Tam/1-2