முதல் இடைப்பருவத் தேர்வு - 2024
ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
சரியான விடையைத் தேர்வு செய்க.
-
தமிழ் விடு தூது ________ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
-
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! - இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
-
"மிசை" என்பதன் எதிர்ச்சொல் என்ன?
-
பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக வந்துவிட்டான்; அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் வரவில்லை. -
மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
-
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க:
- நீங்கள் பேசும்மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
- கண்ணி என்பதன் விளக்கம் யாது?
- "கூவல்" என்று அழைக்கப்படுவது எது?
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.
- நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க:
- திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
- தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.
- அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
- பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?
- வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
அடிமாறாமல் எழுதுக.
- "தித்திக்கும் தெள்அமுதாய்...." எனத் தொடங்கி "உண்டோ" என முடியும் தமிழ் விடு தூது பாடலை எழுதுக.
(அல்லது)"காடெல்லாம்"...... எனத் தொடங்கும் பெரியபுராணப் பாடலை எழுதுக.
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
-
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
குறிப்பு: படத்தில் இரண்டு கிண்ணங்கள் உள்ளன. ஒரு கிண்ணத்தில் செழிப்பான செடி வளர்கிறது, மற்றொரு கிண்ணம் வறண்டு காலியாக உள்ளது.
-
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
தமிழக வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாற்சோழன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணையே விரிவான பாசனத்திட்டமாக இருந்துள்ளது. கல்லணையின் நீளம் 1080 அடியாகவும், அகலம் 40 முதல் 60 அடியாகவும், உயரம் 15 முதல் 18 அடியாகவும் இருக்கிறது. அது வலுவான கட்டுமானத் தொழில்நுட்பத்தால் இன்றும் பயன்படுவதோடு நமது வரலாற்றுப் பெருமைக்கும் சான்றாக நிலைத்து நிற்கிறது.
-
தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.
-
அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக.
1. Every flower is a soul blossoming in nature - Gerard De Nerval.
2. An early morning walk is a blessing for the whole day - Henry David Thoreau.
-
கலைச்சொல் தருக.
-
உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் "கால்முளைத்த கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துக்களைக் கடிதமாக எழுதுக.
(அல்லது)சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.
விரிவாக விடை தருக:
-
"நீரின்று அமையாது உலகு" - என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.
(அல்லது)ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.