இன்று இந்தக் கட்டுரையில் நாம் சிறுநீரகங்கள் பற்றிக் காணப்போகிறோம்.!!!

சிறுநீரகத்தின் தன்மை:

முதலில் சிறுநீரகம் என்றால் என்ன? என்று பார்க்கும் பொழுது, நமது உடம்பில் உள்ள இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியே வெளியேற்றுவதற்கு இயற்கை கொடுத்த, இறைவன் கொடுத்த ஒரு அற்புதமான உறுப்புதான் சிறுநீரகம். இந்தச் சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழே முதுகுப்பகுதியில் இரண்டு பக்கமும் ஒன்றொன்றாக உள்ளது. உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை 10 சதவீதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு இயங்கக்கூடிய ஒப்பற்ற ஒரு உறுப்பு சிறுநீரகம் தான். ஒரு நிமிடத்திற்கு 2.4 லிட்டர் இரத்தத்தைச் சுத்திகரித்து, உடம்பில் இருக்கக்கூடிய நீர்சத்தை சமஅளவில் வைக்கக்கூடிய தன்மை நமது சிறுநீரகங்களுக்கு உண்டு.
உடம்பில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய, உடம்பிற்குத் தேவையான எதிர்ப்புத்திறனை தரக்கூடிய சிவப்பணுக்களை அதிகரிக்கக்கூடிய தன்மை சிறுநீரகங்களுக்குத்தான் உண்டு. அதாவது சிவப்பணுக்களின் உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதில் சிறுநீரகங்களுக்கு நிறைய பங்கு உண்டு. அதே போல் சிறுநீரகங்களில் உற்பத்தியாகக்கூடிய எரித்தோ பாய்ன்ட்டின் என்று சொல்லக்கூடிய ஹார்மோன் குறையும்பொழுதுதான் இரத்தசோகை போன்ற நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக இந்தச் சிறுநீரகம் 150 கிராம் எடை, 12 சென்டிமீட்டர் நீளம், 5 சென்டிமீட்டர் அகலம் கொண்டது.
இந்த சிறுநீரகம் ஏன் பாதிக்கப்படுகிறது? இந்தப் பாதிப்பில் இருந்து எப்படி நாம் மீள்வது என்பதைத்தான் நாம் இந்தக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
கவர்ச்சிகரமான சில விளம்பரங்கள், கவர்ச்சிகரமான சில உணவுகள் மூலமாக ஒரு நோயைப் பரப்பக்கூடிய தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதனால், இந்தியா போன்ற நாடுகளில், அதிலும் குறிப்பாக நம் தமிழத்தில் பார்த்தோமென்றால் இன்று சிறுநீரக வியாதி மிக அதிகமாக இருக்கிறது.
இதற்கான காரணம் கண்டிப்பாக விழிப்புணர்வு குறைவு என்பதைத்தான் நாம் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் சில கிராமங்களில் நானே நேரடியாகச் சென்று பார்க்கும் பொழுது அங்கு இருக்கக்கூடிய மக்கள் எந்த அளவிற்கு ஆரோக்கிய குறைபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
சிறுதானியம்:
அன்றைய காலகட்டத்தில் சிறுதானியங்கள், நன்றாக வேரூன்றி இருந்த தன்மை இருந்தது. வரகரிசி, திணையரிசி, குதிரை வாலி, சாமை அரிசி, ராகி களி, கம்பு தோசை, கம்பு அடை, சோள தோசை, சோள அடை, இவைகளை அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம் எல்லாமே உணவுகள் மூலம் மக்கள் பெற்று வந்தார்கள். ஆக கடின உழைப்போடு இந்த உணவுகளும் சேர்ந்து அவர்களுடைய உடலமைப்பை ஒழுங்காக வைத்திருந்த காலகட்டம் இருந்தது.
மது:
பண்டிகைக்கு மட்டுமே மது அருந்திய கலாச்சாரம் கிராமங்களில் அன்று இருந்தது. ஆனால் அது இன்று கிடையாது. எங்கு பார்த்தாலும் கிடைக்கக்கூடியது மது, போதையை உண்டாக்கக்கூடிய பாக்கு. ஒரு காலகட்டத்தில் வெற்றிலையும், பாக்கும் போட்ட தமிழ்ச் சமூகம், இன்று பான்பராக் போன்ற போதை வஸ்துக்களை, பீடாக்களை சேர்த்துப்போடும் பொழுது கண்டிப்பாக சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வெகுவாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டி வைத்தியம், கை வைத்தியம், சித்த மருத்துவம் என்று கிராமங்களில், வேரூன்றி இருந்த காலமெல்லாம் வெகுவாக மலையேறி ஒரு சாதாரன தலைவலி, காய்ச்சல் என்றால் கூட ஒரு கசாயம் வைப்பதற்குக்கூட கிராமங்களில் ஆட்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
பக்கத்திலே இருக்கக்கூடிய மருத்துவர்களிடம் சென்று உடனே சிகிச்சை மேற்கொள்வது அல்லது தலை வலிக்கிறது என்று தனக்குத்தானே மருந்துக் கடைகளிலும் மருந்துகளை வாங்கி அதன் வீரியம் தெரியாமலே தொடர்ந்து சாப்பிடுவது, எந்த அளவுக்கு அந்த மருந்தில் வீரியம், குணப்படுத்தும் தன்மை இருக்கிறது, எந்த அளவிற்கு மற்ற வியாதிகள் வரக்கூடிய தன்மை (கான்ட்ரா இன்டிகேசன்) இருக்கிறது இதெல்லாம் கண்டுகொள்ளாமலே மருந்துகள் வாங்குவதால் நிறைய சிக்கல்களை மக்கள் எதிர்கொள்ளவதை நாம் பார்க்கமுடிகிறது.
ஒரு உடம்பில் இதயத்தின் பணி எவ்வளவு முக்கியமோ, அதே பணி சிறுநீரகத்திற்கு உண்டு. உடம்பை நிலைக்கச் செய்யக் கூடிய தன்மை சிறுநீரகத்திற்கு மிக முக்கியமான பணியாக இருக்கிறதால் அந்தச் சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை மக்களுக்கு அரசு தீவிர விழிப்புணர்வு பயிற்சியைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். சிறுநீரக நோய் அறிகுறி:
பாத வீக்கம், சிறுநீர் கடுத்துப்போகக்கூடிய தன்மையும் சிறுநீரக வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி வரக்கூடிய சிறுநீர், இதுவும் சிறுநீரக வியாதியின் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரக செயலிழப்பு என்பது நிரந்தர சிறுநீரக செயலிழப்பு, தற்காலிக சிறுநீரக செயலிழப்பு என்று இரண்டு வகை இருக்கிறது.
இதில் ஒரு விசேசம் என்ன என்றால், நம்முடைய உணவுப் பழக்கவழக்கமே நம் சிறுநீரகத்தைக் கெடுக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது. கிராமங்களில் கூட இட்லி, தோசை இல்லாத வீட்டை நாம் பார்க்கமுடியாது. அதாவது அமில உணவுகள் அதிகமாகச் சாப்பிட்டால் கண்டிப்பாக சிறுநீரக வியாதி வரும். அமில உணவுகள் என்றால் புளித்த மாவில் செய்யக்கூடிய இட்லி, தோசை, இடியாப்பம் இந்த மாதிரி உணவுகள் எல்லாமே அமில உணவுகளாக வரும். எனவே அமில உணவுகளை குறைத்துக்கொண்டு ஓரளவிற்கு பழ உணவுகள், கீரை இந்த மாதிரியான உணவுகளை எடுக்கும்பொழுது சிறுநீரகத்தை நன்றாக வலுப்படுத்தமுடியும்.
நெருஞ்சி:
நம் தமிழ்மரபில் சித்தமருத்துவத்தில் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால், “நெறியைப்படைத்தான் நெரிஞ்சல் படைத்தான்” என்று கூறுகிறார் அதாவது ஒரு மனிதன் தனக்கு இளமை இருக்கும்பொழுது கண்டபடியெல்லாம் ஆடி, போதையில் தள்ளாடி மற்றும் வேறு சில பழக்கவழக்கங்களில் தள்ளாடி, காமத்தில் அதிகமாக உழன்று, அதாவது நம் பாரம்பரிய வாழ்க்கையில் உள்ள ஒழுக்கங்களை எல்லாம் மறந்து, நம் பண்பாடே இல்லாமல் வாழ்ந்து கடைசியில் நோயுடன் இருக்கும்பொழுது அந்த மனிதனை முழுமையாகச் சரிசெய்யக் கூடிய தன்மை நெருஞ்சிக்கு உண்டு என்று திருமூலர் சொல்லுவார். அதனால் தான் நெறியைப் படைத்தான் நெருஞ்சிலைப் படைத்தான் என்கிறார்.
முழுக்க முழுக்க சிறுநீரகத்தை வலுப்படுத்தக் கூடிய தன்மை இந்த நெருஞ்சிலுக்கு உண்டு. ஆக சிறுநீரக வியாதியால் அவதிப்படுகிறவர்கள், சிறுநீரில் கல் இருப்பவர்கள், சிறுநீரகத்தில் யூரியா அளவு அதிகமாக இருப்பது, கிரையாட்டின் அளவு அதிகமாக இருப்பது இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நெரிஞ்சில்லை சாப்பிட்டாலே சரியாகிவிடும்.
ஆக நெறி பிரண்டு போனவர்களை மறுபடியும் நெறிமுறைப்படுத்தக்கூடிய தன்மை நெருஞ்சிலுக்கு உண்டு. நெருஞ்சிலைப் பாலில் நன்றாக வேகவைத்து, காயவைத்துப், பொடிசெய்து காலையில் ஒரு சிட்டிகை 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தோம் என்றால் சிறுநீரக வியாதி முழுமையாகச் சரியாகக்கூடிய வாய்ப்பு உண்டு.
சிறுபீளை :
அதே போல் சிறுபீழை, இதைக் கிராமங்களில் சிறுகன்பீளை என்று கூறுவார்கள். பொங்கல் தினத்தன்று சிறுபீளைப்பூ மற்றும் மாவிலையுடன் காப்புக்கட்டக் கூடிய பழக்கம் உண்டு. அந்த சிறுபீழை வேரெடுத்து அதை நன்றாக கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிடும்பொழுது, கண்டிப்பாக சிறுநீரக வியாதிகள் சரியாகும்.
மருதம்பட்டை:
ஆகையால் சிறுநீரக கோளாறு வந்துவிட்டது என்ற கவலை இல்லாமல் ஒரு விழிப்புணர்வோடு யோசித்துப் பார்க்கும் பொழுது மறுபடியும் அந்த நோயிலிருந்து மீளக்கூடிய தன்மை நமக்கு கண்டிப்பாக வரும். அதே நேரத்தில் மருதம்பட்டை என்பது சிறுநீரகத்தை வலுப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பட்டை. நல்ல துவர்ப்புத் தன்மை உள்ளது.
ஆக இந்த மருதம்பட்டையை ஒன்று, இரண்டாக இடித்து கொதிக்கவைத்து கசாயமிட்டு கூடவே சிறிது சர்க்கரை சேர்த்துத் தினசரி இரண்டு வேளை டீ,காபிக்கு மாற்றாகத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தால் சிறுநீரகம் முழுமையாக சரியாகும்.
ஒரு சிலருக்கு இரண்டு சிறுநீரகங்களை சுற்றிலும் நன்றாக நீர் கோர்த்திருக்கும். அதை ஹைட்ரோ நெப்ரோசிஸ் என்று சொல்வார்கள். அதாவது நீரால் சூழப்பட்ட ஒரு சிறுநீரக வியாதி.
அப்படி இருப்பவர்களுக்கு முதுகு பகுதியில் கடுமையான வலி இருக்கும், வேதனை இருக்கும். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி வரலாம், சில நேரங்களில் வாந்தி இருக்கலாம், சில நேரங்களில் காய்ச்சல் வரலாம். இந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கும்பொழுது கண்டிப்பாக மருதம்பட்டை சாப்பிடும்பொழுது முழுமையான பலன் கிடைக்கும்.
அதேபோல் புணர்னவா என்று சொல்லக்கூடிய சாரணைவேர். இவ்வேர் மற்றும் சோம்பு, மஞ்சள் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்துச் சாப்பிடும்பொழுது கண்டிப்பாகச் சிறுநீரக வியாதி சரியாகும்.
இன்னும் சிலநேரங்களில் ஆயுர்வேத மருந்துகளிலே சந்தனம் கலந்து செய்யக்கூடிய சில மருந்துகள் , சித்த மருந்துகளிலே சந்தனம் கலந்து செய்யக்கூடிய சில மருந்துகள் எல்லாமே மிகச்சிறந்த பலன் தரக்கூடிய அற்புதமான மருந்துகள்.
உணவுக் கட்டுப்பாடு:
இதுமட்டுமல்லாமல் சில உணவுக்கட்டுப்பாடையும் தொடர்ந்து சிறுநீரக வியாதி உள்ளவர்கள் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும். பிரதானமாகப் பார்க்கும்பொழுது நாம் சொன்ன அமில உணவுகளை முடிந்தவரை குறைக்கலாம். முடியாத பட்சத்தில் இரண்டு இட்லி, சிறிதளவு இடியாப்பம் இந்த மாதிரி உணவுகளை எடுத்துக்கலாம், ரொட்டியை சுட்டு சாப்பிடுவது, நொய்யரிசி கஞ்சி செய்து சாப்பிடுவது, காய்கறிகளை அரைப்பதத்தில் வேகவைத்துச் சாப்பிடுவது, பழங்களில் ஆப்பில், அண்ணாசி, கொய்யா, பப்பாளி, பேரிக்காய் இதெல்லாம் நீங்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.
தினசரி ஒருவேளை சிறிது பழ உணவுகளைச் சாப்பிடும்பொழுது சிறுநீரக வியாதி இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
உங்களுடைய சிறுநீரகத்தைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது. அதனால் நமக்கு நாமே தடுப்புமுறைகளை உபயோகப்படுத்தி சித்தர்கள் கூறிய மருந்துகள் எல்லாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்தி உணவு சார்ந்த நல்ல ஒரு விழிப்புணர்வைப் பெற்று வரும் காலங்களில் சிறுநீரகம் சிதையாத ஒரு தமிழகத்தை உருவாக்குவோம் வாருங்கள்.

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் இத்தகைய தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பொழுது கண்டிப்பாக சிறுநீரக வியாதி முதற்கொண்டு அனைத்து வியாதிகளியிலிருந்தும் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

PDF FILE TO YOUR EMAIL IMMEDIATELY PURCHASE NOTES & PAPER SOLUTION. @ Rs. 50/- each (GST extra)

HINDI ENTIRE PAPER SOLUTION

MARATHI PAPER SOLUTION

SSC MATHS I PAPER SOLUTION

SSC MATHS II PAPER SOLUTION

SSC SCIENCE I PAPER SOLUTION

SSC SCIENCE II PAPER SOLUTION

SSC ENGLISH PAPER SOLUTION

SSC & HSC ENGLISH WRITING SKILL

HSC ACCOUNTS NOTES

HSC OCM NOTES

HSC ECONOMICS NOTES

HSC SECRETARIAL PRACTICE NOTES

2019 Board Paper Solution

HSC ENGLISH SET A 2019 21st February, 2019

HSC ENGLISH SET B 2019 21st February, 2019

HSC ENGLISH SET C 2019 21st February, 2019

HSC ENGLISH SET D 2019 21st February, 2019

SECRETARIAL PRACTICE (S.P) 2019 25th February, 2019

HSC XII PHYSICS 2019 25th February, 2019

CHEMISTRY XII HSC SOLUTION 27th, February, 2019

OCM PAPER SOLUTION 2019 27th, February, 2019

HSC MATHS PAPER SOLUTION COMMERCE, 2nd March, 2019

HSC MATHS PAPER SOLUTION SCIENCE 2nd, March, 2019

SSC ENGLISH STD 10 5TH MARCH, 2019.

HSC XII ACCOUNTS 2019 6th March, 2019

HSC XII BIOLOGY 2019 6TH March, 2019

HSC XII ECONOMICS 9Th March 2019

SSC Maths I March 2019 Solution 10th Standard11th, March, 2019

SSC MATHS II MARCH 2019 SOLUTION 10TH STD.13th March, 2019

SSC SCIENCE I MARCH 2019 SOLUTION 10TH STD. 15th March, 2019.

SSC SCIENCE II MARCH 2019 SOLUTION 10TH STD. 18th March, 2019.

SSC SOCIAL SCIENCE I MARCH 2019 SOLUTION20th March, 2019

SSC SOCIAL SCIENCE II MARCH 2019 SOLUTION, 22nd March, 2019

XII CBSE - BOARD - MARCH - 2019 ENGLISH - QP + SOLUTIONS, 2nd March, 2019


BUY FROM PLAY STORE

DOWNLOAD OUR APP


HOW TO PURCHASE OUR NOTES?S.P. Important Questions For Board Exam 2020


O.C.M. Important Questions for Board Exam. 2020


Economics Important Questions for Board Exam 2020


Chemistry Important Question Bank for board exam 2020


Physics – Section I- Important Question Bank for Maharashtra Board HSC Examination


Physics – Section II – Science- Important Question Bank for Maharashtra Board HSC 2020 Examination


MUST REMEMBER THINGS on the day of Exam


Are you prepared? for English Grammar in Board Exam.


Paper Presentation In Board Exam


How to Score Good Marks in SSC Board Exams


Tips To Score More Than 90% Marks In 12th Board Exam


How to write English exams?


How to prepare for board exam when less time is left


How to memorise what you learn for board exam


No. 1 Simple Hack, you can try out, in preparing for Board Exam

How to Study for CBSE Class 10 Board Exams Subject Wise Tips?

JEE Main 2020 Registration Process – Exam Pattern & Important Dates

NEET UG 2020 Registration Process Exam Pattern & Important Dates

How can One Prepare for two Competitive Exams at the same time?

8 Proven Tips to Handle Anxiety before Exams!