Advertisement

தூரத்தில் தேவதையாய்..!

நள்ளிரவுப் பெண்ணோ
நைச்சியமாய்
ஒளிந்து கொள்ள முயற்சிக்க...
அதிகாலைச் சூரியனோ
அடித்துப் போட்டது
போல் உறங்கிக் கொண்டிருக்க...
உருண்டை வடிவ உலகமோ
விடியலுக்காக
கண்ணயர்ந்து காத்திருக்க...
கணமணி உன் வரவிற்காக
கண் விழித்துக் காத்திருந்தேன்
புவி முனையில்...

காத்திருந்து காத்திருந்து
கால்கள் ஓய்ந்து விட
கண்கள் சோர்ந்து விட
தூரத்தில் தேவதையாய்
நீ வருவதைக் கண்டேன்..!
நெடும்பயண களைப்பில்
நடை தளர்ந்து நீ வந்தாலும்
எனைக்கண்டதும்
ஒளிவீசும் வைரமானாய்..!
அவ்வொளி வெளிச்சம்
உனைக் கண்டதும்
என்னுள்ளும் பரவ...!

நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்...
அங்கே உதித்ததடி நம்
காதலின் உற்சாகச் சூரியன்...
அதனுடைய வெளிச்சத்தில்
இருந்த களைப்பு
இடம் தெரியாமல் போய்விட...
என் நிலவைக் கண்ட மகிழ்வில்
என்னிதயம் விண்ணிலடி
என்னழகே உன் அன்பு
என் கண்ணிலடி..! கண்ணிலடி..!