Samacheer Kalvi 9th Tamil Guide
Chapter 1.4 வளரும் செல்வம்
Students can download the Samacheer Kalvi 9th Tamil Guide for Chapter 1.4 'வளரும் செல்வம்,' which includes Questions and Answers, a Summary, and Notes. This guide is designed to help you revise the complete Tamilnadu State Board New Syllabus, complete homework assignments, and achieve high marks in your exams.
கற்பவை கற்றபின்
Question 1. நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றில் இடம் பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை அறிந்து எழுதுக.
| பிறமொழிச் சொல் | தமிழ்ச்சொல் |
|---|---|
| சாக் பீஸ் | சுண்ணக்கட்டி |
| போர்டு | கரும்பலகை |
| டீச்சர் | ஆசிரியர் |
| புக் | புத்தகம், நூல் |
| பேனா | எழுதுகோல் |
| பென்சில் | கரிக்கோல் |
| ஜன்னல் | சாளரம் |
| சேர் | நாற்காலி |
| டேபிள் | மேசை |
| பேப்பர் | தாள் |
| லைட் | விளக்கு |
| ஃபேன் | மின்விசிறி |
Question 2. உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.
அருண்: ஹலோ! நண்பா ! (வணக்கம் நண்பா!)
நளன்: வணக்கம் நண்பா.
அருண்: உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?
நளன்: ஆமாம்! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நீ என்ன செய்கிறாய்? இப்போது நான் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிகிறேன். நீ?
அருண்: நான் நந்தனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.
நளன்: அந்தக் கல்லூரியில்தான் என் தம்பி வணிகவியல் முதலாமாண்டு படிக்கிறான்.
அருண்: மிக்க நன்றி, மீண்டும் சந்திப்போம்.
நளன்: மீண்டும் பார்க்கலாம்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) வங்கம், மானு, தாழிசை, பிறவினை
ஆ) தாழிசை, மானு, பிறவினை, வங்கம்
இ) பிறவினை, தாழிசை, மானு, வங்கம்
ஈ) மானு, பிறவினை, வங்கம், தாழிசை
விடை: அ) வங்கம், மானு, தாழிசை, பிறவினை
குறுவினா
Question 1. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.
- Monitor – திரை
- Mouse – நகர்த்தி (அல்லது) சுட்டி
- Keyboard – விசைப்பலகை
- CD – குறுந்தட்டு
- Download – பதிவிறக்கம்
- File – கோப்பு
- E-Mail – மின்னஞ்சல்
சிறுவினா
Question 1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சில சொற்கள், கிரேக்க மொழியிலும் ஒத்த ஒலிப்புடன் மாற்றம் பெற்றுள்ளன.
| தமிழ் | கிரேக்கம் |
|---|---|
| எறிதிரை | எறுதிரான் |
| கலன் | கலயுகோய் |
| தோணி | தோனிஸ் |
| நீர் | நீரியோஸ்/நீரிய |
| நாவாய் | நாயு |
Question 2. ‘வளரும் செல்வம்’ – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அதற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.
| பிறமொழிச் சொல் | தமிழ்ச்சொல் |
|---|---|
| சாப்ட்வேர் (Software) | மென்பொருள் |
| பிரவுசர் (Browser) | உலாவி |
| கிரப் (Crop) | செதுக்கி |
| கர்சர் (Cursor) | ஏவி அல்லது சுட்டி |
| சைபர்ஸ்பேஸ் (Cyberspace) | இணையவெளி |
| சர்வர் (Server) | வையக விரிவு வலை வழங்கி |
| ஃபோல்டர் (Folder) | உறை |
| லேப்டாப் (Laptop) | மடிக்கணினி |
கூடுதல் வினாக்கள்
குறுவினா
Question 1. கடற்கலன்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
நாவாய், வங்கம், தோணி, கலம்.
சிறுவினா
Question 1. தமிழில் கணினி தொடர்பான சொற்களைப் பட்டியலிடுக.
- சாப்ட்வேர் – மென்பொருள்
- கர்சர் – ஏவி அல்லது சுட்டி
- கிராப் – செதுக்கி
- போல்டர் – உறை