பருவம் 2 இயல் 5 | 4 ஆம் வகுப்பு தமிழ் - பனிமலைப் பயணம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Tamil : Term 2 Chapter 5 : Pani malaip payanam
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : பனிமலைப் பயணம்
வாங்க பேசலாம்
மாணவன் 1: எனது நண்பன் கிருஷ்ணன். அவனிடம் எனக்குப் பிடித்தவை நிறைய குணங்கள் உள்ளன.
மாணவன் 2: பிடிக்காதவையென்று ஏதேனும் உள்ளதா?
மாணவன் 1: ஏன் இல்லை? பிடிக்காத அக்குணத்தை மாற்றிக் கொள்ளும்படி நான் கூறுகிறேன். அவன் சரி என்று கூறுவான். ஆனாலும் சில நேரங்களில் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
மாணவன் 2: பிடிக்காத குணம் என்ன? பிடித்த குணங்கள் எவை?
மாணவன் 1: பிடித்த குணங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவை பிறர் மனம் புண்படாதபடிப் பேசுவான். யாரிடமும் சண்டை போட மாட்டான். தன்னைவிடச் சிறியவருக்கும் மரியாதை கொடுப்பான். பெற்றோர், ஆசிரியர் கூறும் வார்த்தைகளை மீறமாட்டான்.
மாணவன் 2: இவ்வாறு இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது?
மாணவன் 1: சரியாகச் சொன்னாய்! அவனைப் பிடிக்காதவர் எவருமில்லை. ஆனால் தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் பேசவே மாட்டான். கோபம் வந்தால் உச்சக்கட்டத்திற்குச் சென்றுவிடுவான். அவனை அடக்குவது எல்லோருக்கும் மிகவும் கடினமாக இருக்கும். அவன் அப்படி கோபம் கொள்வது எனக்கு பிடிக்காத ஒன்று.
மாணவன் 2: பரவாயில்லையே, உன் நண்பனைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டுள்ளாயே?
மாணவன் 1: குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல் என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி என் நண்பனிடம் ஒரு சில பிடிக்காத குணங்கள் இருந்தாலும் பல நல்ல குணங்கள் அதாவது எனக்குப் பிடித்த குணங்கள் இருக்கின்றன.
சிந்திக்கலாமா!
நான் படகில் பயணம் செய்ய விரும்புவேன்.
காரணம் : சாலை வழிப் பயணம் என்பது எப்போதும் எளிதானது. வழக்கமாக நிகழும் ஒன்று. ஆனால் படகில் பயணம் செய்வது அரிதானது. சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
படகில் பயணம் செய்யும்போது மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவும். பயணம் செய்வதற்கான சோர்வு இல்லாமல் இருக்கும். இவையே நான் படகில் பயணம் செய்வதற்கான காரணங்கள் ஆகும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
வினாக்களுக்கு விடையளிக்க
விலங்குகள் படகில் செல்லும்போது, திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது. அதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததனால் விலங்குகள் அலறின.
“இதற்கு முன் ஒரு முதலை, விலங்குகளைச் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்துவிட்டது.”
“விஷ முறிவுச் செடிகளை நாங்கள் தின்றுள்ளதால், எங்களை யார் கடித்தாலும் அவர்கள் இறந்துவிடுவர்” என்று நரி முதலையிடம் கூறியது.
எனக்குப் பிடித்த விலங்கு நரி. ஏனெனில் நரி தன் தந்திரத்தால் உடனிருந்த அனைத்து விலங்குகளையும் காப்பாற்றியது.
உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?
மொழியோடு விளையாடு
குதிரை, வரிக்குதிரை, அத்தை
படகு, ஓநாய், வாய்
தலை, இலை, பாம்பு
மறு, புசி, குத்து
நான் பெற்ற மொத்த விண்மீன்கள் பன்னிரண்டு
சொல்லக் கேட்டு எழுதுக
அகரவரிசைப் படுத்துக.
மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மௌவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய்
மைதானம், முறுக்கு, மோப்பம், மகிழ்ச்சி, மௌவல், மாதம், மொழி, மீன், மேகம், மெத்தை, மிளகு, மூட்டை
மகிழ்ச்சி, மாதம், மிளகு, மீன், முறுக்கு, மூட்டை, மெத்தை, மேகம், மைதானம், மொழி, மோப்பம், மௌவல்
கலையும் கைவண்ணமும்
காகிதப் பூ செய்வோமா!
செயல் திட்டம்
"அறிவே துணை" என்னும் நீதியை அறிவுறுத்தக்கூடிய கதைகளுள் இரண்டு எழுதி வருக.
For more educational resources, visit omtexclasses.com and omtex.co.in.
No comments:
Post a Comment