நீளத்தை அளப்பதற்கான திட்ட அலகுகள்
2வது கணக்கு : பருவம்-1 | அலகு 4 : அளவைகள்
ஆசிரியருக்கான குறிப்பு
மாணவர்களுக்குத் திட்ட அலகுகள் கொண்டு அளப்பதன் பயன்பாட்டை அறிய ஆசிரியர் வழிவகை செய்யவும்.
பயணம் செய்வோம்
கலைச் சொற்கள்
அளவுகோல், சென்டிமீட்டர், மீட்டர்
ஆசிரியருக்கான குறிப்பு
மாணவர்களுக்குத் திட்ட அலகுகள் கொண்டு அளப்பதன் பயன்பாட்டை அறிய ஆசிரியர் வழிவகை செய்யவும்.
கற்றல்
திட்ட அலகுகள் கொண்டு அளத்தல்
அதிக நீளம் கொண்ட பொருள்கள் மீட்டரிலும் (மீ) குறைந்த நீளம் கொண்ட பொருள்கள் சென்டிமீட்டரிலும் (செ.மீ) அளக்கப்படுகின்றன.
படச் சட்டம் சென்டிமீட்டரில் அளக்கப்படுகிறது (செ.மீ)
புடவை மீட்டரில் (மீ) அளக்கப்படுகிறது
செய்து பார்
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அளவிடப் பயன்படும் சரியான அலகுகளைக் (✔) குறியிடுக.
கற்றல்
நீளத்தினை அளத்தல்
அளவுகோலைக் கொண்டு பொருள்களின் நீளத்தை அளப்பதற்கு அறிவோம்.
செய்து பார்
முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்று நோக்கிப் பொருள்களின் நீளத்தை எழுதுக.
1. சீப்பின் நீளம் 12 செ.மீ
2. உறிஞ்சு குழாயின் நீளம் 10 செ.மீ
3. கரிக்கோல் நீளம் 14 செ.மீ
4. வண்ண மெழுகின் நீளம் 7 செ.மீ
செயல்பாடு
கொடுக்கப்பட்ட அளவுகளால் பொருள்களின் நீளத்தை அளந்து கட்டங்களில் எழுதுக.
ஆசிரியருக்கான குறிப்பு
i. அளவீடுகளை ஊகித்த பின்பு அதனை அளந்து சரிபார்க்க ஊக்கப்படுத்தவும். மேலும் சரியாக ஊகம் செய்வதற்குப் பல்வேறு பொருள்களை அளப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும்.
ii. நீளத்தை அளப்பதற்கான திட்டக்கருவிகளின் பயன்பாட்டை அறிய மாணவர்களை ஊக்கப்படுத்தவும்.